கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்?

கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்? ஆள்வோர் எல்லாம் தூத்துகுடிக்கு சென்றால் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள்? என கேட்காத கேள்விகள் ரஜினி நோக்கி எழுகின்றன என்றால் அது அவரை கண்டு கட்சிகளும் இன்னும் சிலரும் அடையும் அச்சம் அதை ஏன் சொல்ல மறுக்கின்றாய் என ஏகபட்ட கேள்விகள்

நாம் சொல்லும் விளக்கம் இதுதான்

சைமனும், பாரதிராஜாவும் ரஜினி கன்னடர் எனும்பொழுது அதை மறுத்து ரஜினி நம்மில் ஒருவர், அவர் அரசியலுக்கு வர முழு தகுதி உண்டு என்றே நாம் சொல்லிகொண்டிருந்தோம்

இப்பொழுது விஷயம் ரஜினியின் தூத்துகுடி விஜயம் அல்ல, அது வாழ்த்துகுரியது, அங்கொருவன் நீ யார் என கேட்டதெல்லாம் வம்பு வளர்க்கும் விஷயம், அரசியல்

ஆனால் ரஜினி மேல் என்ன கோபம் என்றால், அன்று 1994ல் ஜெயலலிதா ஆட்சியில் குண்டு வீசபட்டதை அவர் பகிரங்கமாக கண்டித்தார், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது என்றார்

அன்று சமூக விரோதிகள் மணிரத்னம் வீட்டில் குண்டு வீசினார்கள் என அவர் சொல்லவில்லை, பகிரங்கமாக சொன்னார்

ஜெயலலிதா ஆட்சியின் அலங்கோலங்களை கண்டித்தார், அந்த ரஜினியினை எல்லோருக்கும் பிடித்தது, நாமெல்லாம் கொண்டாடினோம்

ஆனால் இன்று பழனிச்சாமி பற்றி ஒருவார்த்தை சொல்கின்றாரா? துப்பாக்கி சூடு நடந்தது யார் ஆட்சி? அதை பற்றி ஒருவார்த்தை?

இன்னும் அச்சம்பவத்தை கண்டுகொள்ளாமல் இந்தோனேஷிய தியாகிகளுக்கு மலர்வளையம் வைக்கும் மோடி பற்றி ஒருவார்த்தை ரஜினி சொன்னாரா?

ஜெயா ஆட்சியில் குண்டு வீசபட்டால் ஜெயா அவர்களை கட்டுபடுத்தவில்லை என்றதும், ஜெயாவின் அத்துமீறல்களை கண்டித்ததும் சரி என்றால் அவர் பழனிச்சாமியினையும் கண்டிக்க வேண்டாமா?

ஆனால் மோடியினையும், பழனிச்சாமியினையும் காப்பாற்றுவது போல் ரஜினி பேசிகொண்டிருக்கின்றார் அல்லவா? அதைத்தான் சாடுகின்றோம்

அவரின் பாஜக அபிமானத்தையும் அது நடத்தும் பழனிச்சாமி அரசின் மீதான இவரின் அணுகுமுறையினையுமே சாடுகின்றோம்

கோவை குண்டுவெடிப்பில் அவர்களை தீவிரவாதிகள் என சொன்ன ரஜினிக்கு தூத்துகுடியில் செத்தவர்கள் நக்சலைட்டுகள் என்றால் ரஜினியின் உள்மனம் என்ன?

இன்னொன்று பத்திரிகையாளரிடம் அவர் ஏய் என சீறியது

தூத்துகுடி போராட்டத்தில் நக்சலைட் வந்த ஆதாரம் என்னிடம் உண்டு , எனக்கு தெரியும் என்றால் சொல்லலாம் ஆனால் ஏன் சொல்லவில்லை? மாறாக எப்படி தெரிந்தது?

உளவுதுறைக்கு இவர் என்ன தலைவரா? இல்லை அரசு ரகசியங்கள் ஒரு நடிகருக்கு எப்படி தெரிந்தது?

இப்படி நான் பாஜக மோடியின் ரகசிய ஆதரவாளன், அவர்கள் சொல்வதை நானும் சொல்வேன். பழனிச்சாமி அரசு பற்றி பேசமாட்டேன் என பகிரங்கமாக நிற்கின்றார் அல்லவா?

இந்த ரஜினியினை கண்டிக்காமல் என்ன செய்வது?

விருப்பம் என்றால் தமிழக பாஜகவில் ரஜினி இணைந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் இந்த நாடகம்?

இந்த போலித்தனத்தைத்தான் வன்மையாக கண்டிக்கின்றோமே அன்றி வேறல்ல…