கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள்
ரஜினி படத்துக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதிகேட்டு அது மறுக்கபட்டு மூக்கு உடைந்து நிற்கின்றது ரசிகர் மன்றம்கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள், இப்படியா தமிழக அரசிடம் அனுமதி கேட்பார்கள்?சங்கம் தலைவி குஷ்புவின் படம் விரைவில் வரும்பொழுது , அதாவது ரஜினி அண்ணாமலை படத்துக்கு பின் தலைவி படத்தில் துணை நடிகராக நடிக்கும் படம் வெளிவரும்பொழுது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மலர் தூவ விண்ணப்பம் செய்துவிட்டதுஅப்படம் வெளிவரும் பொழுது வானத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே தலைவியினை வாழ்த்தி பேனர் வைக்கபடும், அப்படியே பூவும் தூவபடும்வானத்தில் இருக்கும் சூரிய சந்திரர்கள், நவகிரகங்கள், சப்த ரிஷி மண்டலத்தில் இருக்கும் ரிஷிகள், இன்னும் ஏழு லோகத்தில் இருக்கும் கடவுளும் இதர புண்ணிய ஆத்மாக்களும் அதை காணும்ஏலியன்ஸ்கள் முதல் கண்ணுக்கு தெரியா கருப்பு சக்தி வரை அதை காணும்ஆம் தலைவியின் அடுத்தபடம் வரும்பொழுது அப்படி கொண்டாட திட்டமிட்டிருக்கின்றது சங்கம்தலைவியோடு நடிப்பதால் நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல ரஜினிபடம் மேலும் பூ தூவபடும்இப்படி தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் இருந்து பூ தூவவேண்டுமனால் ரஜினி ரசிகர்கள் அவரின் எல்லா படத்திலும் தலைவி குஷ்புவினை நடிக்க வைக்க அவரை வற்புறுத்த வேண்டும்அப்படி செய்தால் மாநில அரசின் அனுமதியின்றி மேல் வானத்தில் இருந்து பூ தூவி தமிழக அரசின் முகத்தில் பூவினை இல்லை கரியினை பூசலாம்தலைவியின் அடுத்தபடம் வரும்பொழுது விண்வெளி நிலையம் சற்று கீழிறங்கி தலைவி படத்துக்கு பூ தூவும் அப்பொழுது அது சிறிய நட்சத்திரமாகவே காட்சி அளிக்கும்அப்புறம் என்ன? அந்த வரிதான்
“மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்மாடத்தில் ஒரு பெண் சித்திரம்…”