கொஞ்சம் காப்பாற்றுங்கள் வைகோவை….
மேடம் சுஷ்மாஜி, செவ்வாய் கிரகத்தில் இந்தியன் சிக்கினாலும் காப்பாற்றுவோம் என சொன்னீர்கள் , இதோ ஒரு சனி கிரகம் மலேசியாவில் சிக்கியிருக்கின்றது, கொஞ்சம் காப்பாற்றுங்கள்
வழக்கமாக மோசடி ஏஜெண்டுகள் தான் அப்பாவி தமிழ் இளைஞர்களை இப்படி மலேசியாவில் ஏமாற்றி சிக்க வைப்பார்கள், இப்பொழுது ஒரு மோசடி ஏஜேண்டே சிக்கியிருக்கின்றார், ஆனால் விசாரணை எல்லாம் பின்னால் செய்யலாம்
இந்த தமிழனை மீட்டெடுங்கள் சுஷ்மாஜி.., பாவம் மனிதர் என்றோ விசா பாஸ்போர்ட் இல்லாமல் ஈழம் சென்ற நினைவில் அங்கே தெரியமல் சென்று சிக்கிகொண்டார், கொஞ்ச நாளாக ஒரு மாதிரிதான் பேசிகொண்டிருந்தார் மேடம்
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மோடிஜி, அக்கா தமிழைசக்கா கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அக்கா…
வைகோவிற்கு ஒரு ஆபத்தும் இல்லை, அவர் மீசையினை கூட யாரும் தொடபோவதுமில்லை, அப்படியே திரும்ப வருவார்
அக்கட்சியினர் ஆர்பாட்டம் செய்வதில் எல்லாம் அர்த்தமே இல்லை, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதெல்லாம் பெரும் அபத்தம், வைகோ பற்றி யாருக்கு தெரியாது?
சொந்த நாட்டிலே தேசதுரோக வழக்கில் சிறை சென்றவனை அடுத்த நாடு எப்படி அனுமதிக்கும்? வாய்ப்பே இல்லை. ஆனாலும் இவர் திருந்துவார் என நினைக்கின்றீர்கள்?
இன்று நள்ளிரவு தூக்க கலக்கத்தில் சென்னை ஏர்போர்ட் வாசலிலே சொல்வார் பாருங்கள், “என்னை மலேசியாவில் நுழையவிடாமல் திருப்பி அனுப்பியதில் திமுக சதியே பிரதானம், என்னை முடக்க கலைஞரும் ஸ்டாலினும் சதி என நான் குற்றம் சாட்டுகின்றேன்”