கொஞ்சம் விழிப்பாய் இருந்த்தல் அனைவருக்கும் நலம்

சன்டிவி நிர்வாகம் என கூறிகொண்டு வரும் சில கோஷ்டிகள் தன் பக்கத்தையும் வீடியோக்க்களையும் முடக்குவதாக சொல்கின்றார் மாரிதாஸ்

ஆம், இதை நாமும் முன்பே உணர்ந்திருக்கின்றோம், திமுகவுக்கு எதிரான பல பதிவுகளும் வீடியோக்களும் எம்பக்கத்தில் இருந்தும் காணாமல் போவது உண்மையே.

மாரிதாஸ் சொல்லும் இதே குற்றசாட்டை நாமும் சந்தித்திருக்கின்றோம்.. குறிப்பாக ஸ்டாலினை கலாய்க்கும் வீடியோக்கள் பகிர்ந்தால் இக்கோஷ்டி ஓடிவந்து கட்டை போட்டு மார்க்கிடம் தலைவிரி கோலமாய் நீதி கேட்கும்

அதே நேரம் புலிகளை கண்டித்து வரும் பதிவுகளை அதாவது திமுகவுக்கு ஆதரவான பதிவுகளை அவர்கள் பிரமோட் செய்கின்றார்கள்

தமிழக மற்ற ஊடகங்களை போலவே சமூக ஊடகமும் தங்கள் கட்டுபாட்டில் வரவேண்டும் என திமுகவும் அதன் பின்னணியில் இருக்கும் நாசகார சக்திகளும் விரும்புகின்றன‌

இதை எல்லாம் மக்கள் தெரியவேண்டும் என்பதற்காக சொல்கின்றோம், கொஞ்சம் விழிப்பாய் இருந்த்தல் அனைவருக்கும் நலம்

இல்லையேல் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் இன்பநிதி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் தமிழன் உலகின் மாபெரும் கொத்தடிமையாக அறிவின்றி அமர்ந்திருப்பான்,

உலகம் தமிழன் 5.5 அறிவு கொண்ட விலங்கு என முத்திரை குத்திவிடும்