கொரோனா தன் நாட்டில் யாராலோ திட்டமிட்டு பரப்பபட்டதாக அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது.
13.5 லட்சம் பேரை பாதித்து, கிட்டதட்ட 75 ஆயிரம் பேரை கொன்று , இன்னும் 50 ஆயிரம் பேர் கழுத்தை நெறித்து கொண்டிருகின்றது கொரோனா
அமெரிக்க எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகின்றது, பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகி இன்னும் நிமிடத்துக்கு இருவர் இறந்து கொண்டே இருக்கின்றனர்
நாம் முன்பே சொன்னதை அமெரிக்க தலமை இப்பொழுது சொல்கின்றது
நாம் அன்றே அமெரிக்க விடுதலைபோர், உள்நாட்டு போர், பேர்ஸ் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் மிக மோசமான நிலையினை அமெரிக்கா சந்திக்கின்றது என சொன்னோம்
அமெரிக்க உச்சபீடம் இன்று அமெரிக்கா பேர்ஸ் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் மிக மோசமான நிலையினை அடைவதாக சொல்லியிருக்கின்றார்
அமெரிக்க அதிகாரபீடம் எப்பொழுதுமே பொடி வைத்து பேசுவதில் கில்லாடி, அவைகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு
கவனியுங்கள் மிக கவனமாக அமெரிக்க உள்நாட்டுபோர் எனும் வார்த்தையினை விட்டுவிட்டார்களே ஏன்? மறந்து விட்டார்களோ? நிச்சயமாக இல்லை
ஆம் அவை உள்நாட்டில் மோதி கொண்ட யுத்தம்
ஆனால் பேர்ல் ஹார்பர் தாக்குதலும் , இரட்டை கோபுர தாக்குதலும் வெளியில் இருந்து அந்நியரால் நடத்தபட்ட அழிவு
அமெரிக்காவின் கோபங்கள் நிலைத்து நின்று பழிவாங்கும், பேர்ள் ஹார்பர் தாக்கபட்டபின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா நீதியினை மக்களுக்கு வழங்கும் என சொல்லிவிட்டு சென்றார்,
அந்த நீதி ஹிரோஷிமாவில் தான் கிடைத்தது, நாகசாகியில் கூடுதலாக கிடைத்தது, அணுகுண்டு இன்றியும் வீழ்ந்திருக்க வேண்டிய ஜப்பானை அப்படி பழிதீர்த்தது அமெரிக்கா
இரட்டை கோபுர தாக்குதலிலும் “அமெரிக்க நீதி” என முழங்கினார் புஷ், அது சதாம் தூக்கு, பின்லேடன் ஒழிப்பு, கடாபி தூக்கு என பின் தெரிந்தது
இப்பொழுதும் மேற்கண்ட சம்பவங்களை அமெரிக்கா அடிக்கடி உச்சரிக்கும் ராஜதந்திர வார்த்தையும் அர்த்தமும் இதுதான்
இந்த கொரோனா தன் நாட்டில் யாராலோ திட்டமிட்டு பரப்பபட்டதாக அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது ஆனால் ரகசிய ஆதாரம் என்பதால் உறுதியாய் சொல்லமுடியவில்லை
இப்பொழுது அந்த புலி அடிபட்டு வீழ்ந்து கிடக்கின்றது, பழைய சம்பவங்களை சொல்லி உறுமுகின்றது, இனி தானே தன் காயத்தை நக்கி குண்படுத்தும் புலி போல அது காயமாறிவிட்டு அதன் பின் சீறி எழும்
நிச்சயம் விளைவுகள் வருங்காலத்தில் சுமூகமாய் இராது, ஏதோ ஒரு மகா முக்கிய பதிலடி பின்னாளில் நடைபெறும்