கொலம்பியாவில் ஒரு பூனை அட்டகாசமாக ஒரு உயிரை காத்திருக்கின்றது
கொலம்பியாவில் ஒரு பூனை அட்டகாசமாக ஒரு உயிரை காத்திருக்கின்றது
சில விலங்குகள் அபூர்வமாக பிறக்கின்றன அவற்றுக்கு சில விஷேஷித்த சக்திகள் வருகின்றன. மாடு, நாய், யானை, பூனை, குரங்கு என சில மிருகங்களுக்கு சில அபூர்வ உணர்வுகள் இருக்கின்றன
இது முன் ஜென்ம தொடர்ச்சி என இந்துமதம் சொல்லும், மற்ற மதங்கள் அம்மிருகங்கள் ஆசி பெற்றவை என்பதோடு நிறுத்தும்
அமெரிக்காவில் அப்படி ஒரு பூனை மாடியில் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை மாடிபடிகளை நோக்கி செல்வதை அவதானித்து ஓடிவந்து தடுத்து இழுத்து பின்னால் போட்டு மேற்படி அக்குழந்தை படிகட்டுக்கு வராதவாறு காவல் இருந்திருக்கின்றது
சிசிடிவியில் இவை பதிவாகி அப்பூனை அமெரிக்காவின் ஹீரோ ஆகிவிட்டது
ஏ குழந்தையே இது இந்தியா அல்ல, நீனாக தவறி விழுந்தால் அப்பனுக்கு லட்சம் டாலரும் அம்மாவுக்கு வேலை எல்லாம் கிடைக்காது , அதனால் உள்ளே போ என சொல்லி குழந்தையினை காத்திருக்கின்றது பூனை
எல்லா பூனைகளுக்கும் இல்லா அறிவு அந்த பூனைக்கு மட்டும் ஏன் வந்தது? மிக சரியாக அந்த வீட்டில் அப்பூனை சேர்ந்து அக்குழந்தையினை காக்கும் நிகழ்வு ஏன் நடந்தது?
இதற்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை, பட்டினத்தார் கதையில் வரும் நாய்குட்டி கதை நினைவுக்கு வருகின்றது
பட்டினத்தார் எனும் ஞானி ஒரு நாய்குட்டியினை கையில் எடுத்து அதன் முன் ஜென்மத்தை நினைவு கூர்ந்து சிரிப்பார். ஏனோ இந்த வீடியோ பார்த்தவுடன் அந்த நினைவு வருகின்றது
அக்குழந்தைக்கும் அந்த பூனைக்கும் என்ன கர்ம தொடர்போ? என்ன விடுபட்ட பந்தமோ?