கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது
கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது, அச்சமும் பதற்றமும் இன்னும் அதிகரிக்கின்றது
நேற்றுமாலை ஒரு வாகனத்தில் இருந்த குண்டை செயலிழக்க வைத்திருக்கின்றார்கள்
தீவிரவாதிகள் இருந்த வீட்டை அதுவும் வெடிபொருட்களுடன் இருந்த வீட்டை போலிசார் சூழ்ந்தபொழுது அங்கிருந்த இளம்பெண் தன் இரு குழந்தைகளோடு குண்டை வெடிக்க செய்து சில காவலரோடு செத்திருக்கின்றாள்
மனம் வலிக்கும் கொடுமை இது
அவள் தீவிரவாதியானால் சாகட்டும் அந்த பிஞ்சுகள் என்ன செய்தன?
அந்த பிஞ்சுகளை ஏன் வெடிக்க வைக்க வேண்டும்?
மிக மிக மோசமாக மூளைசலவை செய்யபட்ட கூட்டம் ஒன்று இலங்கையினை நாசமாக்கும் திட்டத்துடன் நன்கு திட்டமிட்டு வளைத்திருக்கின்றன
விஷயம் எளிதில் தீராது
மிக வலுவாக காலூன்றிவிட்ட இந்த கொடுமையினை களைய இலங்கை அரசு இன்னும் பெரும் போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது
விஷயம் எங்கெல்லாமோ சுற்றுகின்றது
போரினால் சீரழிந்த இடங்களில் இந்த சுவிஷேச கோஷ்டிகளின் இம்சை தாங்கமுடியவில்லை என்கின்றது ஒரு செய்தி
மனம்திரும்புங்கள் அல்லேலூயா என மேற்கத்திய பலத்துடன் வலம்வரும் கிறிஸ்தவர்கள் ஒருபக்கம்
அவர்கள் வரும்பொழுது நாங்கள் வரகூடாதா? என மார்க்க ரீதியாக ஆட்டம் போட்ட இந்த தவுபிக் ஜமாத் ஒரு பக்கம்
(இந்த தவுபிக் அமைப்பதைத்தான் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் கையில் எடுத்திருக்கின்றன)
“ஒருநாள் இரண்டு பயலுக்கும் இருக்கின்றது எங்கள பற்றி இன்னும் சரியா தெரியவில்லை” என புன்னகை பூக்கும் புத்தசாமிகள் ஒருபக்கம்
ஆக அரசியல் ரீதியாக இந்தியாவா, சைனாவா, அமெரிக்காவா என இலங்கையில் ஆடினால்
மத ரீதியாக புத்தமா, இஸ்லாமா, கிறிஸ்தவமா என இன்னொரு ஆட்டம் நடந்திருகின்றது
கிறிஸ்தவ மிஷினரிகளில் ஏகபட்ட உளவாளிகளும் வந்து போனது பல நாட்டு கண்களை உறுத்தியிருகின்றன
கிறிஸ்தவ கும்பல்களை எச்சரிக்கத்தான் இந்த அடி என இன்னொரு கோண செய்திகளும் சொல்கின்றன
இலங்கை அரசு தொடக்கத்தில் மவுனம் காத்த ரகசியமும் இதுதான், புத்த கோஷ்டி அமைதிகாக்கும் ரகசியமும் இதுதான்
டிரம்ப் ஓடிவரும் அவசரமும் இதுதான்
நிச்சயம் இந்தியாவுக்காக ஒரு நாடு விழுந்து விழுந்த வளர்த்த கொடிய இயக்கம் ஒன்று இங்கு வரமுடியாத பட்சத்தில் திசைமாறி அங்கிருக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்தாயிற்று.
அங்கிருக்கும் இஸ்லாமியர் அமைதியானவர்கள்
ஆனால் இந்தியாவுக்கு எதிராக செயல்பட சென்ற ஒரு வலுவான சக்தி அவர்களை திசைமாற்றி இந்தியா மேல் ஏவமுடியா நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேலும் ஏவமுடியா நிலையில் இங்கு திருப்பிவிட்டுவிட்டார்கள்
புத்த ஆலயமும் இந்து ஆலயமும் தாக்கபடாமல் கிறிஸ்தவ அலயமும் நட்சத்திர விடுதியும் தாக்கபட்ட ரகசியம் இதுதான்
மெல்ல மெல்ல முடிச்சுகள் அவிழ்கின்றன
“உன் உச்சந்தலையில் ஒரு காஷ்மீர் போல உன் காலடியிலும் ஒரு காஷ்மீரை உருவாக்குவேன்” என இந்தியாவுக்கு சவால்விட்டு இலங்கை வந்திருக்கின்றது ஒரு சக்தி
இலங்கையில் அது தந்திர வேலைகளை செய்து தென்னிந்திய பக்கம் சிக்கலை ஏற்படுத்த பல காரியங்களை இலங்கையில் செய்திருக்கின்றது
இலங்கையில் இருந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த பல தொடர்புகளையும் எது எடுத்திருக்கின்றது.
ஆனால் பலமான இந்தியா தன்னை காத்து கொண்டது
இந்தியாவுக்கு எதிராக ஏதோ செய்கின்றார்கள் நமக்கென்ன? என அமைதியாக இருந்த இலங்கை அரசு மதவெறியின் கோரத்தை பார்த்து அதிர்ந்து போய் நிற்கின்றது
இடம் கொடுத்த பாவத்திற்காக கொழும்பு காஷ்மீராக மாறுவதை கண்டு அது கையினை பிசைந்து நிற்கின்றது
சுருக்கமாக சொன்னால் தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் வாங்க வேண்டிய அடியினையும் சாவினையும் எல்லாம் கொழும்பு கிறிஸ்தவ தேவாலயங்கள் வாங்கி நம்மை காத்துகொண்டிருக்கின்றன
இந்திய மக்களை காக்க யாரெல்லாமோ உயிர்விட்டு கொண்டிருக்கின்றனர்