கோத்தபாய தன் 15 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு வாய்பளித்துள்ளார்
கோத்தபாய தன் 15 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு வாய்பளித்துள்ளார் இன்னும் இரு தமிழர்கள் இணையலாம் என்கின்றார்கள்
அவர்களுக்கான சிக்கலை தீர்க்க அவர்கள் கொழும்புவில்தான் பேசவேண்டும் இதோ பேச போகின்றார்கள்.
இதெல்லாம் தமிழக ஈழ அல்ட்ராசிட்டி கோஷ்டிக்கு தெரியுமா என்றால் தெரியும், ஆனால் இதுபற்றி எல்லாம் வாயே திறக்கமாட்டார்கள் கழுத்தை பிடித்து கேட்டால் இதனால் ஈழ தமிழருக்கு நன்மை விளையாது என்பார்கள்
நிச்சயம் இவர்கள் அவர்களை அமைச்சர்களாக ஆக்க முடியாது, அவர்கள் பிரச்சினையினை தீர்க்கமுடியாது.
சரி நன்மை விளைய என்ன செய்யவேண்டுமென்றால் மோடியும் பழனிச்சாமியும் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பார்கள், அப்படி ஒப்படைத்தால் என்ன செய்து ஈழமக்களை வாழ்விப்பீர்கள் என கேட்டால் அதுவும் தெரியாது
ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது,மாறாக ஒப்பாரி வைக்க மட்டும் தெரியும்