கோமதி வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதே நல்லது
கோமதி சாதித்திருக்கின்றார் சந்தேகமில்லை ஆனால் இது போதாது
ஒலிம்பிக் எனும் பெரும் சவால் அவர் முன்னால் உள்ளது, அவர் என்பதை விட தேசத்தின் மிக பெரும் சவால் அது, தகுதி உள்ளவர் என்ற முறையில் அவர் அதில் சாதிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்
இந்த வீண் விளம்பரம், பத்திரிகைகளின் செய்தி பசி, அரசியல்வாதிகளின் அரசியல் ஆட்டம் இதிலிருந்து அந்த அம்மணி ஒதுங்கி ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தலாம்
இல்லாவிடில் இங்கு கொடுக்கபடும் வீணான வெளிச்சமும் போலி பிம்பமும் அவரின் பெரும் எதிர்காலத்தை வீணாக்கிவிடும்
கோமதி வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதே நல்லது, டோக்கியோவில் வென்ற பின் எவ்வளவும் கொண்டாடலாம்