சங்கத்து எமர்ஜென்சி

அதிமுகவினரின் சிக்கல் இப்பொழுதுதான் புரிகின்றது, திமுகவினரின் மிகபெரும் கஷ்டமும் இப்பொழுதுதான் புரிகின்றது

நிச்சயம் மகா பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள்

ஆம், ஒருவரை ஒவ்வொரு நொடியும் வணங்கிகொண்டே இருந்தால் அதில் ஒருவித லயம் கிடைத்துவிடுகின்றது, ஒருவிதா ஏகாந்தமான தியான மோன நிலை வாய்க்கின்றது

அப்படி வணங்க ஒருவர் இல்லாவிட்டால் கிறுக்கு பிடிக்கின்றது, ஏதோ கஞ்சா போதையில் இருந்து விடுபட்டது போல ஒரு விரக்தி வருகின்றது

இதனால்தான் அதிமுகவினர் யாரையாவது வணங்கி கொண்டே இருக்கின்றனர், ராமசந்திரன் ஜெயா சசிகலா இப்பொழுது மோடி அமித்ஷா என அவர்கள் வணங்க இதுதான் காரணம்

இல்லாவிட்டால் மனதில் ஒரு ராட்சத அரிப்பு ஏற்பட்டுவிடும் அதை தீர்க்கவே இப்படி வணங்கி தீரவேண்டும் அதுதான் மருந்து

திமுகவினரும் அப்படியே கலைஞர் இல்லா நிலையில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் உதயநிதி மகன் என யாரையாவது வணங்கிகொண்டே இருக்கின்றார்கள்

நாமும் சங்கமாக அந்த தங்கத்தை அனுதினமும் வணங்கி வந்ததால் இப்பொழுது அவரை வணங்காத நொடிகள் எல்லாம் நரகமாக இருக்கின்றது

அதிமுகவினர் திமுகவினர் காங்கிரசாரின் கஷ்டம் இப்பொழுதுதான் புரிகின்றது

இனி அவர்களை திட்டகூடாது, பாவம்

இப்பொழுது வணங்க , ஆராதிக்க ஒரு தலைவி என்பது சங்கத்து எமர்ஜென்ஸி தேவை..