சங்கமும் சந்திராயனும் ஒன்று

இப்பொழுதெல்லாம் எல்லோரும் கவிதை எழுதுகின்றார்கள், நாமும் எழுதிவிட வேண்டியதுதான்.

சங்கமும் சந்திராயனும் ஒன்று

அந்த சந்திராயனுக்கு பூமி மிக பிடித்திருந்தது
அது பூமியினை மிகவும் நேசித்தது
பூமியினை அதற்கு மிக பிடித்திருந்தது
ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அது பிடிக்கவில்லை

அதை கதற கதற ராக்கெட்டில் ஏற்றினார்கள்
அது அழுதது, கதறியது செல்லாமாட்டேன் என்றது
அதை கட்டிவைத்து தீவைத்து அனுப்பினார்கள்

அப்படியும் சந்திராயன் பூமியினை சுற்றியது
பூமியினை மட்டும் சுற்றி சுற்றி வந்தது
அதை தாண்டி செல்ல மனமில்லை
தரையில்தான் இடமில்லை வானிலாவது
இடம் வேண்டும் என கெஞ்சியது

சண்டாள விஞ்ஞானிகள் அதை விரட்டினர்
தான் நிரம்ப நேசித்த பூமியினைவிட்டு அதுபிரிந்தது
வேறு வழியின்றி சந்திரன் வட்டத்தில் புகுந்தது

சந்திரனில் அதற்கு இறங்க மனமில்லை
பிடித்தமான பூமிக்கு வரவும் அதற்கு வழியில்லை
சந்திரனை சுற்றி சுற்றிவந்த சந்தியாயன்
அங்கே வீழ்ந்து மடிந்தும்விட்டது
இனி திரும்ப வராது

தனக்கு பிரியமான பூமியினைவிட்டு அதை விரட்டினார்கள்
பூமியினை அது சுற்றவும் கூடாது என விரட்டினார்கள்
புவி ஈர்ப்புவிசையினை தாண்டி அதை விரட்டினார்கள்

சங்கமும் சந்திராயனும் ஒன்று

தலைவி குஷ்புவின் ஈர்ப்புவிசை தாண்டி அதுவிரட்டபட்டது
அவரை சுற்றிவர கூட சங்கத்தை விடவில்லை
வலுகட்டாயமாக‌ சாய்பல்லவி ஈர்ப்புவட்டத்தில்
சங்கத்தை சிக்கவைத்துவிட்டார்கள்

சங்கம் இனி சாய்பல்லவியினை
சுற்றி சுற்றித்தான் வரும்
இனி திரும்ப முடியாது, அங்கேயே வீழவேண்டியதுதான்
அதன் விதி அப்படி

சங்கமும் சந்திராயாயனும் ஒன்று