சங்கம் மூடபடுகின்றது

நம் நண்பர்களின் வாக்குகள் அந்த குஷ்பு சங்கத்தை மூடு என பெரும்பான்மையாக சொல்லியிருப்பதால் , இந்த ஐப்பசி ஏகாதசியில் சங்கம் மூடபடுகின்றது

எனினும் சங்கம் மூடபட்டாலும் நாம் எதற்காக குஷ்புவின் ரசிகன் ஆனோமோ அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன‌

காரணங்கள் அப்படியே இருக்கும் பொழுது கொள்கையினை கைவிடலாமா என கேட்பீர்களானால் அன்றைய சீமான் அண்ணாதுரை என்ன சொன்னார் என நினைத்து பாருங்கள்

“திராவிட நாடு கோரிக்கையினை கைவிடுகின்றோம் ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன”

அய்யா காரணம் அப்படியே உள்ளபொழுது ஒரு நல்ல தலைவன் கோரிக்கையினை கைவிடுவானா என கேட்டதற்கு “மரத்தில் இருப்பது பலா, வானில் இருப்பது நிலா, காஞ்சி காமாட்சி வருது உலா , தமிழன் இருக்க வேண்டுமா பிராமணனுக்கு வாலா?” என அறிய கருத்தை சொன்னார் காஞ்சிபுரத்து சைமன்

ஆக அந்த அறிஞன் இல்லை பேரரிஞனே காரணங்கள் அப்படியே இருக்கும்பொழுதே கொள்கையினை கடாசி விளாசலாம் என வழிகாட்டியிருக்கும் பொழுது இந்த எளிய தமிழ்பிள்ளை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?