சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு செய்தி கிடைத்தாயிற்று

ஐ.நா சபை நிதி தட்டுபாட்டால் தத்தளிக்கின்றது, கிட்டதட்ட அதற்கு 39 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர், ஆண்டுதோறும் ஒவ்வொருநாடும் அதற்கு நிதி செலுத்துகின்றது எனினும் அமெரிக்கா கொடுக்கும் நிதி அதிகம்

இந்த ஆண்டு 70% நிதிமட்டுமே வந்திருப்பதால் ஊழியர் சம்பளம் உட்பட பல விவகாரங்களுக்கு அது தடுமாறுகின்றது. டிரம்ப் என்பவர் ஐ.நாவுக்கான நிதியினை குறைத்ததும் காரணங்களில் ஒன்று

விரைவில் ஐ.நா ஆட்குறைப்பு செய்யலாம் அல்லது வேறு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்கின்றார்கள்

எப்படியோ சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு செய்தி கிடைத்தாயிற்று

“அமெரிக்காவின் செல்லபிள்ளையான ஐ.நாவே நிதிசிக்கலில் தடுமாறும்பொழுது, இந்தியா என்ன செய்யும்?”