சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல்

அப்பல்லோவில் ஜெயலலிதாவினை எல்லா அமைச்சர்களும் பார்த்தார்கள் என வாக்குமூலம் வழங்கிவிட்டார் சசிகலா

பன்னீரோ ஜெயாவினை யாரும் பார்க்கவில்லை பார்க்கவில்லை, எல்லாம் மர்மம் என்றுதான் தர்மயுத்தம் நடத்தினார்

இப்பொழுது சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல்

பன்னீரின் வருங்கால மறுப்பு சசிகலாவிற்கு சிக்கல்

இனி முன்னாள் முதல்வர் மரணத்தில் முன்னாள் முதல்வர் பன்னீரும் முதல்வர் பதவியினை தவறவிட்ட சசிகலாவும் அடித்துகொள்ள போகின்றார்கள்

நீதிபதிகள் மீது சசிகலாவிற்கு கோபம் வருவது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவரின் கனவினை நொறுக்கிய பாவிகள் அவர்கள்

அதனால் இனி நாட்டில் ஒரு நீதிபதியும் நிம்மதியாக இருக்க கூடாது என முடிவுசெய்துவிட்டார் சசிகலா

ஆக நீதிபதி ஆறுமுகசாமி ஜெயா சமாதி முன் தியானம் செய்யும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது