சசிகலா குவித்த சொத்துக்களில் ஸ்டெர்லைட் பணம்

No automatic alt text available.

ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பெற்றோர் பட்டியல் என ஒன்றை வெளியிடுகின்றார்கள் பக்தாஸும் , தும்பிகளும்

அடேய் அதில் ஒருவரியினை ஏன் மறைத்தீர்கள்

வெளிநாட்டில் இருந்து பாஜக பெற்ற நன்கொடை பட்டியலில் வேதாந்தா குழுமம் கொடுத்த நன்கொடை பகிரங்கமாக இருக்கின்றது

ஆக நீங்கள் ஒரு பட்டியல் வாசிக்க, உங்கள் கட்சிக்கே அவர்கள் கொடுத்த கதையினை உலகம் வாசித்த்து கொண்டிருக்கின்றது

ஏகபட்ட தரவுகள் உண்டென்றாலும் வேதாந்த குழுவுன் கம்பெனியான வேதாந்தா மெட்ராஸ் அலுமினியத்திடமிருந்து பாஜக பெற்ற தேர்தல் நன்கொடை இணையத்திலே இருக்கின்றது

இது போட்டோஷாப்போ போலி தகவலோ அல்ல‌

நாங்கள் நன்கொடை பெற்றோர் பட்டியல் என தாமரை சின்னத்துடன் பாஜகவினரே சொல்லியிருக்கின்றாகள், அவர்களுக்கு அள்ளி கொடுத்ததில் வேதாந்தா மெட்ராஸ் அலுமியம் கம்பெனியும் வருகின்றது

வேதாந்தா மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி நடத்துவதுதான் தூத்துகுடி ஸ்டெர்லைட்.

இனி இதனையும் சேர்த்து பட்டியல் போடுங்கள், ஸ்டெர்லைட்டிடம் நன்கொடை வாங்கிய விவகாரத்தில் பாஜக முதலிடத்தில் இருக்கின்றது


ஸ்டெர்லைட் போராட்டத்தி உயிர்விட்டவர்களுக்கு 3 லட்சம் நிதி அறிவித்தார் தினகரன் : செய்தி

மிக கஷ்டபட்டு உழைத்து சேர்த்த பணத்தில் இருந்து செய்யும் உதவி அல்லவா? வாழ்த்தத்தான் வேண்டும்.

எங்கிருந்து வந்தது இப்பணம்? சசிகலா குவித்த சொத்துக்களில் ஸ்டெர்லைட் பணம் இல்லையா என்றெல்லாம் நாம் கேட்க கூடாது.


 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் தூத்துக்குடிக்கு நான் செல்லவில்லை : பழனிச்சாமி

 

144 என்றால் என்ன அர்த்தம்? கடும் போலிஸ் காவல் என்று அர்த்தம், முழுக்க காவல்துறை நிரம்பி இருக்கும்

காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி

ஆக காவல்துறை அமைச்சர்தான் முதல் ஆளாக அங்கு இருந்து நிலமையினை கண்காணிக்க வேண்டும், முழு உரிமை உண்டு

தன் பதவி என்ன? பொறுப்பு என்ன என தெரிந்து கொள்ளாத அளவு இப்படி ஒரு முதல்வரை தமிழகம் கண்டதே இல்லை

காவல்துறைக்கு இவர் அமைச்சர் என்பதை இனி துப்பாக்கி காட்டி மிரட்டித்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போலிருக்கின்றது.