அன்புமணி அழைப்பு… சைமன் கட்சி பொதுக்குழு ???… இன்னும் பிற
நாடார்களும், வன்னியர்களும் ஒரே அணியில் திரளவேண்டும் : அன்புமனி அழைப்பு
ஒரு நாளும் திருந்தாதவர்கள் வரிசையில் அன்புமணி சேர்ந்துவிட்டார்
ஏன் சார்? இந்த வன்னியர்களும், நாடார்களும் ஒரு அணியில் திரண்டால், மீதி இருக்கும் முப்பது முக்கோடி சாதிகள் ஒரு அணியில் திரளாதா?
மிஸ்டர் அன்புமணி, நாடார்களை அழைப்பீர்களா? எங்கே தமிழிசையினையும், சரத்குமாரையும் கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம்..
எல்லோரும் பொதுகுழு கூட்டம் நடத்துகின்றார்களே, அங்கிள் சைமன் நம்ம கட்சியில் எப்பொழுது பொது கூட்டம்?
கூட்டத்தில் ஜெயாவிற்கு அஞ்சலி செலுத்துங்கள், அப்படியே தமிழச்சி சசிகலா காலில் விழுந்து கிடக்கும் அதிமுகவின் எல்லா தமிழர்களுக்கும் வாழ்த்து தெரிவியுங்கள்
கவனியுங்கள் அங்கிள் சைமன், அங்கே சசிகலா காலில் விழுந்து கிடப்பதில் எந்த தெலுங்கனும் இருப்பதாக தெரியவில்லை, வைகோவினை விடுங்கள் அவரை தெலுங்கர்கள் பட்டியலில் இருந்து விடுவித்து காக்கா பட்டியலில் சேர்த்தாகிவிட்டது
ஆக அங்கில் சைமன், தமிழக தெலுங்கர்கள் எல்லாம் மானத்தோடு இருக்க, தமிழர்கள் தான் மானமிழந்து பச்சை தமிழன் உதயகுமார், பன்னீர், நாஞ்சில் சம்பத் என வரிசைகட்டி விழுந்து கிடக்கின்றார்கள்
ஆக தமிழச்சியினை ஆதரிக்கும் அந்த , உங்கள் பாஷையில் மானமுள்ள அதிமுக தமிழர்களுக்கு உஙகள் “நாம் தமிழர்” கட்சியின் பொதுகுழுவில் பெரும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்
கமான் அங்கிள் கமான்
ஒரு தெலுங்கனும் இன்னும் சசிகலாவினை ஆதரிக்கவில்லை அங்கிள், நோட் திஸ் பாயிண்ட்..
எங்கே, அந்த தெலுங்கர்களுக்கு தமிழகபற்று இல்லை என இப்பொழுது முழங்குங்கள் பார்க்கலாம்..