சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி

இந்த சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி ஒன்று உண்டு, ஏதோ ஒரு அதிமுக உறுப்பினர் ஸடாலினை பார்த்து “சட்டையினை எப்போ கிழிப்பீங்க” என கேட்டு கலாய்த்துவிட்டாராம்

உலகமே அடிமாடுகள் என கலாய்த்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர், இன்னொருவரை கலாய்க்க வந்துவிட்டாராம், எவ்வளவு பரிதாபம்?

இதே கலைஞர் என்றால் பதிலுக்கு எப்படி கலாய்பார் தெரியுமா?

“இரு காலும் இல்லாத முடவன் எதிரே நடந்து வந்தவனை பார்த்து நொண்டி என்றானாம், அப்படி இருக்கின்றது இவர்கள் சொல்வது, யார் பேசுவது என்றொரு தகுதி வேண்டாமா?

பெட்டியில் போட்டு கொண்டுசெல்லபடும் கோழிகள் போல கூவத்தூரில் அடைபட்டு கிடந்தவர்கள் எல்லாம் பேசவந்துவிட்டார்கள்,

திசைதெரியா தவளைகள் எல்லாம் கத்தவந்துவிட்டன, சூரிய வெளிச்சத்தில் கண் தெரியாத கோட்டான்கள் கூக்குரலிடுகின்றன‌

எம்மை பார்த்து சட்டையினை கிழிப்பீர்களா என கேட்கின்றார்கள், அதாவது கிண்டல் செய்கின்றார்களாம்

கிழித்தல் பற்றி அவர்களுக்கு தெரியாததா?

முன்பு இதே சட்டசபையில் தன் சேலையினை தானே கிழித்து கொண்டவர் ஜெயலலிதா, அந்த கட்சியின் கலாச்சாரம் அப்படி, இதுகாறும் அதிமுக சட்டசபையில் என்ன கிழித்தது என்றால் அந்த சேலையினை கிழித்ததுதான் சாதனை,

பின்பு மு.க ஸ்டாலினின் சட்டையினையும் கிழித்தார்கள்

அவ்வளவுதான் இவர்கள் கிழித்த கிழி,

அது தெரியாமல் இவர் கிழிக்க சொல்ல வந்துவிட்டார்,

தமிழகத்தின் 4 லட்சம் கோடி கடனை அடையுங்கள், மதுகடைகளை எல்லாம் மூடுங்கள், ஜெயா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்

அப்படி நடந்துவிட்டால் என் சட்டையினை நான் கிழித்துகொள்கின்றேன், அப்படி இல்லாவிட்டால் உங்கள் சட்டையினை நீங்கள் கிழிக்க தயாரா?”

அதன் பின் அந்த உறுப்பினர் ஏதும் பேசுவார்?

அவர் இல்லாத அரசியலில் இம்மாதிரி சுவாரஸ்யங்களும், அதிரடிகளும் காணாமல் போய்விட்டன, இப்பொழுது உள்ளவர்கள் எல்லாம் உலக கோப்பையில் பைனலில் ஆடும் வீரர்கள் போல மகா சீரியஸ்

யாரிடமும் சுவாரஸ்யமான வாதமும், நகைசுவையும், அட்டகாசமான பதிலும் இல்லவே இல்லை