சதாம் உசேன் நிச்சயம் அரேபியாவின் விருமாண்டி
கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி எல்லா டிவியிலும் கமல் படங்கள் ஓடிகொண்டிருந்தது
கமல்ஹாசன் மிக சிறந்த படங்களை கொடுத்தவர் என்பதில் சந்தேகமில்லை எனினும் அவரின் மிகசிறந்த படங்களில் ஒன்று விருமாண்டி
தனக்கே உரிய எக்ஸ்ட்ரா மேதாவிதனத்துடன் இருவர் கதை சொல்வதாக போட்டு குழப்பினாரே தவிர , மிக அருமையான படம்
விசுவாசம், நம்பிக்கை, நட்பு, வஞ்சகம், பெருந்தன்மை , சூது என பொல்லாதோர் நட்புடன் வரும் கேட்டினை அற்புதமாக சொன்னபடம் அது
விருமாண்டி படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த சதாம் உசேனின் நினைவு வரும்
சதாம் உசேன் நிச்சயம் அரேபியாவின் விருமாண்டி. இதே போலத்தான் நம்ப வைக்கபட்டு கழுத்தறுக்கபட்டார். படத்தில் கமலஹாசன் நிலத்து நீர் பிரச்சினை என்றால் சதாமிற்கு எண்ணெய் கிணறு
கொத்தாளதேவன் இடத்தில் அமெரிக்காவினையும், நல்லம்ம நாயக்கர் இடத்தில் ஈரானையும் வைத்தால் மிக அழகாக பொருந்தும்
உலக நாயகன் என கமலை முழுமையாக சொல்லமுடியாவிட்டாலும், விருமாண்டி படம் அந்த சதாம் எனும் உலக நாயகனை காட்டி நின்றது.
எல்லா டிவி செய்திகளும் மழை, வெள்ளம் என சொல்லிகொண்டிருக்க, ஜெயா டிவி மட்டும் குடிநீர் இல்லாமல் கஷ்டபடும் மக்களை தேடிபிடித்து செய்தியாக்குகின்றது
என்ன ஒரு அருமையான மக்கள் பணி? இந்த அருமையான டிவி இவ்வளவு நாளும் எங்கிருந்தது?
பழனிச்சாமி ஆட்சியில்தான் ஜெயா டிவியின் மக்கள் தொண்டு மகத்துவம் பெற்றிருக்கின்றது, ஜெயா டிவிக்கு புதுவாழ்வு கொடுத்திருப்பது நிச்சயம் பழனிச்சாமி அரசின் சாதனை.