சமணர் காலத்துக்கு பின்

தன் உயிருக்கு ஆபத்து என மதுரை ஆதீனம் சொல்வதெல்லாம் அந்த ஆலவாய் நாதனின் திருதலவூரில் சமணர் காலத்துக்கு பின் நடக்கும் இந்து துவேஷங்கள்

மூர்த்தி நாயனார் காலம், சம்பந்தர் காலத்துக்கு முதல் தடவையாக இந்நிலை வந்திருப்பது மிகபெரிய துரதிருஷ்டமான வேதனை இந்துக்களால் தாங்கமுடியாத வலிமாலிக்காபூர் கூட கொள்ளை அடித்து திரும்பினான், மதுரையினை ஆண்ட துக்ளக் கூட சொத்துக்களை அபகரித்தானே அன்றி ஆதீனங்கள் மேல் கைவைக்கவில்லை

இங்கு நவாப்கள் ஆட்சி இருந்தது, வெள்ளையன் ஆட்சி இருந்தது அப்பொழுதெல்லாம் கூட மதுரை ஆதீனத்துக்கு எந்த சிக்கலுமில்லை

நீதிகட்சியின் நிர்வாகத்தில் கூட அந்த ஆதீனங்கள் சிறப்பிக்கபட்டன, மிரட்டல் இல்லை

சமணர் காலத்து குரல்களெல்லாம் மறுபடி கேட்க ஆரம்பித்திருப்பது நல்லதல்ல, இங்கு இந்துமதத்துடன் மிக கடுமையாக மோதிய சமணம் அழிந்துதான் போனது இந்துமதம் தன்னை மீட்டு நிலைத்தது என்பது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது