சமூகம் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது

ஒரு பத்திரிகை ஒரு விஷயத்தை வெளிகொணரத்தான் முடியும், பொள்ளாச்சி விவகாரத்தை கொண்டுவந்தாயிற்று

பொது ஊடகங்கள் பொங்கத்தான் முடியும், பொங்கியாயிற்று

ஆனால் தண்டனை?

ஆம், பாதிக்கபட்டபெண்கள் யாரும் கோர்ட்டுக்கு செல்லபோவதுமில்லை, சாட்சி சொல்லபோவதுமில்லை

ஏன் முறைபடி புகாரே எராளமான பெண்கள் கொடுக்கவே இல்லை

அவர்களை சிறையில் அடைக்கலம், கடும் தொணியுடன் அவர்கள் மேல் வழக்கு பதியபடலாம், ஆனால் பாதிக்கபட்ட பெண்கள் வருவார்களா? ரகசிய விசாரணை கூட சிரமம்

நிர்மலா தேவி விவகாரமோ இல்லை இந்த பொள்ளாச்சி விவகாரமோ மிரட்டலுக்கு பயன்படுமே தவிர தண்டனை பெற்று தருவது என்பது மிகசிரமமான விஷயம்

வீடியோ ஆதாரங்கள் இருக்கலாம், இன்னும் பல இருக்கலாம் ஆனால் பெண்கள் படியேறி சாட்சி சொல்வதும் அதன் பின் நிம்மதியாக வாழ்ந்துவிடுவதும் இங்கு சாத்தியமில்லா விஷயம்

மாற முடியாத இச்சமூகத்தில் சட்டங்கள் மட்டும் மாறிவிடுமா என்ன?

சமூகம் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது

இங்கு அந்த மனநலம் பாதிக்கபட்ட கொடூர வெறியர்களுக்கு எதிராக ஆயிரம் பொங்கலாம், ஆனால் சமூக நிலைப்பாட்டில் பாதிக்கபட்ட பெண்கள் அஞ்சுவதால் சட்டம் அக்கொடியவர்களுக்கு பாதுகாப்பாகவே இருக்கின்றது

நிச்சயம் மானிட சட்டத்தில் அவர்கள் தப்பலாம், ஆனால் ஆண்டவனின் தர்ம நீதிமன்றத்தில் அவர்கள் தப்பவே முடியாது

(இம்மாதிரி திருத்தமுடியா பொறுக்கமுடியா குற்றங்களுக்கு ஆனால் சட்டத்தின் ஓட்டையில் தப்புபவர்களுக்கு சில நாடுகளில் மெல்ல கொல்லும் விஷத்தை, பெரும் நோய்களை ரகசியமாக செலுத்துவார்கள், செலுத்திவிட்டு அனுப்பிவிடுவார்கள்

அல்லது செய்ய வேண்டியதை சத்தமில்லாமல் செய்துவிட்டு அனுப்பிவிடுவார்கள்

ஆனால் அதெல்லாம் படுரகசியமாக மேலிட அனுமதியோடே நடக்கும்

இங்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை..)