சமையலும் சுவையாண உணவும் – யூ டியூப் சேனல்
சங்கத்திற்கு முதலில் பிடித்த விஷயம் குஷ்பு படம், அதன் பின்பு வாசிப்பும் உலக விஷயங்களை தேடி பிடித்தலும்.
வாசிப்பு அவ்வளவு சுகமான விஷயம், எவ்வளவும் வாசிக்கலாம். எழுத்து என்பது அந்த அளவு சுவாரஸ்யம் அல்ல
இதற்கு அடுத்து சங்கம் விரும்பும் விஷயம் சமையலும் சுவையாண உணவும்
மானிட பிறவியில் அது கூட இல்லை என்றால் எப்படி? மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வித்தியாசம், அட தெய்வங்களுக்கும் மனிதனுக்கும்தான் என்ன வித்தியாசம்?
நல்ல புத்தகம் போல, சுகமான சிந்தனை போல, குஷ்பு படம் போல சமையலும் ரசனையான விஷயம், அதை ரசித்து உண்பது அதை விட ஏகாந்தமானது
மானிடபிறவிக்கு மட்டுமே வாய்த்த அற்புத வாய்ப்பு அது
சங்கம் சமையலை செய்து உங்களை இம்சைபடுத்துவதை விட உலகின் சுவையான உணவுகளை உங்களுக்கு அறிமுகபடுத்த விரும்புகின்றது
இது தொடர்பாக யூ டியூப் சேனல் தொடங்க இருக்கின்றது சங்கம், முதலில் உணவுக்கு பெயர்பெற்ற மலேசியாவின் பிராதன உணவுகளை அதன் பிரசித்திபெற்ற உணவங்களில் இருந்தும் அது சம்பந்தமான தரவுகளையும் உங்களுக்கு தர இருக்கின்றது
விரைவில் கிழக்காசியாவின் வகை வகையான உணவுகளை நீங்கள் காணலாம்
கிழக்காசியா பக்கம் வந்தால் நீங்கள் தேடிபிடித்து உண்ண உதவுகின்றொமே அன்றி வேறொன்றுமல்ல..