சரி இப்படி வைத்து கொள்வோம்
சரி இப்படி வைத்து கொள்வோம்
கலைஞருக்கு 4ம் தாரம் ஒன்று இருந்தது அது யாருக்கும் தெரியாது, ஆனால் அதற்கு ஒரு வாரிசு இருந்து அதற்கு பல அரசியல் வித்தைகள் தெரிகின்றது
அந்த வாரிசு அறிவாலயத்தில் வந்து என் வித்தையினை பாருங்கள் எனக்கு நிகர் எவன் என சவால்விட்டால் என்னாகும்?
அதெல்லாம் இல்லை நீ வேறு குலபிறப்பு என விரட்டமாட்டார்களா இல்லையா? அவனை இன்னொரு கட்சி அரவணைக்குமா இல்லையா
இதுதான் மகாபாரதத்தில் கர்ணனுக்கு நடந்தது
(திமுகவில் அழகிரிக்கும் கனிமொழிக்கும் நடக்கும் போல தெரிகின்றது..)
ஏகவலைவனுக்கு கட்டைவிரலை வாங்கிய கதை இருக்கட்டும், திமுகவில் எத்தனை பேர் நாக்கில் சூடுபோட்டுவிட்டு நானே பேசுவேன் என முக ஸ்டாலின் உளறிகொண்டிருக்கின்றார்.
இதை பாரதம் செய்தால் அது சாதிவெறி, அடக்குமுறை
அதையே திமுக செய்தால் ராஜதந்திரம்