சர்க்கார் படத்தின் கதை திருடபட்டது
சர்க்கார் படத்தின் கதை திருடபட்டது என திரைப்பட கதாசிரியர் சங்கம் தீர்ப்பு
ஏம்மா முருகதாஸ், இந்த ஊழல் ஒழிப்பு, புரட்சி, விவசாயி பிரச்சினை இன்னபிற போராளி விஷயங்களையும் திருடத்தான் வேண்டுமா? சொந்தமாக தோன்றாதா?
திருட்டு போராளி போலிருக்கின்றது..
இதில் அட்லி என்பவர் கொடுத்து வைத்தவர், அவருக்கு இந்த எஸ்பி முத்துராமன் முதல் பல இயக்குநர்கள் ஏராளமான படங்களை எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்
அன்னார் பத்து படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து தொகுத்து வழங்கிவிட்டு அவர் போக்கில் சென்றுவிடுவார்
இதில் விவராமனவர் யாரென்றால் அட்லிதான், காரணம் அவர் சுடும் படங்களில் பல தயாரிப்பாளரும்,இயக்குநரும் இப்பொழுது உயிரோடே இல்லை
[ October 27, 2018 ]
============================================================================
சர்கார் படம் சம்பந்தமாக எழுத்தாளர் ராஜேந்திரனுடன் முருகதாஸ் சமரசம் : செய்தி
அங்கே முழு கதையினையும் பாக்யராஜ் உலகிற்கே சொல்லிகொண்டிருக்கின்றார், இவர் இங்கு சமரசம் பேசுகின்றாராம்..
[ October 30, 2018 ]
============================================================================
என்னது சர்க்கார் படத்தின் வசனகர்த்தா ஜெயமோகனா? மணிரத்தினத்தை கடலில் கவிழ்த்துவிட்ட அந்த ஜெயமோகனா?
இனி சர்க்கார் படத்தின் என்ன சர்சை வேண்டி இருக்கின்றது? படத்தின் முடிவு இப்பொழுதே தெரிந்துவிட்டது
கோவிந்தா. கோவிந்தா போட்டுவிட்டு கிளம்ப வேண்டியதுதான்..
[ October 30, 2018 ]
============================================================================
சர்க்கார் படம் மட்டும் வரட்டும், கதை சரி இல்லை என்றால் கதை எழுதியவனுக்கும் அடி, அதை திருடியவனுக்கும் அடி
இருவரிடம் இருந்தும் ஆளுக்கு 200 ரூபாய் வசூலித்துவிட்டுத்தான் வேறு வேலை.. [ October 30, 2018 ]
============================================================================
“உங்களால உள்ளூர்காரன்கிட்ட திருடுன கதையத்தானடா சொல்லி என்ன சீண்ட முடியும்?
உலக அளவுல எவ்வளவு திருடியிருக்கேன் தெரியுமாடா? ஒரு வெள்ளக்காரன் கொரியாக்காரன் சண்டைக்கு வந்திருப்பான்?
அவனுக எல்லாம் கிரேட்டுடா, எவ்வளவு திருடினாலும் கண்டுக்கவே மாட்டானுக..
இங்க எல்லாம் சில்லறை பயலுக, உங்க கூட வந்து வேலை செய்றேன் பாரு என்ன சொல்லணும்…”
முருகதாஸுக்கு எல்லாம் குதிகின்றார்கள், அன்றொரு நாள் ஒரு இளைஞன் இளையராஜாவிற்காக உழைத்தான், அவன் டியூனுக்கெல்லாம் இளையராஜாவின் பெயர்தான் வந்தது
உதவியவன் திலிப் குமார் என படத்தின் டைட்டிலில் பெயர் போட இளையராஜாவுக்கும் விருப்பமில்லை, சொல்ல டைரக்டர்களுக்கும் தைரியமில்லை
அவனின் அட்டகாசமான டியூன்கள் எல்லாம் இளையராஜாவின் பெயரில் வந்து கொண்டிருந்தது, அவன் கலங்கவில்லை
காலம் வரும்பொழுது அவனும் வெளிவந்தான், இன்று எங்கோ உயரத்தில் மின்னுகின்றான்
கண்ணதாசன் சிறையில் இருந்தபொழுது அவரின் ஓரங்க நாடகத்தை தன் கதையில் இணைத்தார் கலைஞர், வெளிவந்த கண்ணதாசன் நீதி கேட்டார்
நீ எழுதியது என சொன்னால் நம்பவா போகின்றார்கள் என்ற பதில் அவருக்கு கிடைத்தது
நான் யார் என்பதை உலகிற்கு காட்டுகின்றேன் என கிளம்பி தன்னை நிரூபித்தார் கண்ணதாசன்
தேனை எடுக்கின்றார்கள் என தேனி கவலைபடுவதில்லை, ஆம் அவர்களுக்கு திருட தெரியுமே தவிர, தேனை உருவாக்கும் கலை தெரியாது
கண்ணாடி வெளிச்சத்தில் மின்னுமே தவிர சுய ஒளி கிடையாது
எந்த திறமைசாலியின் படைப்பு களவு போனாலும் திறமையாளன் அதுபற்றி கவலைபடுவதில்லை
ஆயிரம் படைப்புகளை அவனால் உருவாக்கமுடியும், உண்மையில் இறுதியில் வெட்கபட்டு போவது திருடர்களே..
[ October 30, 2018 ]
============================================================================
இந்த முருகதாஸ் சர்ச்சையில் சிக்கி கொண்டார் ஆசான் ஜெயமோகன்
இனி நடக்க போகும் கொடூரத்தை நினைத்தால் அடிவயிறு கலங்குகின்றது, அமேசான் காட்டுக்குள் கொஞ்சகாலம் இருந்துவிட்டு வரலாமோ என்ற அச்சம் வருகின்றது
பதில் எழுதுகின்றேன் என ஆசான் எழுதுவார் பாருங்கள், எப்படி இருக்குமென்றால் இப்படித்தான் இருக்கும்
“இலக்கிய அறம் என்பது யாதெனில் நுண்ணிய கதையின் மென்னிய பக்கத்தை அதன் படிமம் கெடாமல் ஊடுருவவது, ரஷ்ய தாஸ்வெஸ்கியும் மெக்ஸிகோவின் போஸ்வெஸ்கியும் மெல்லிய வெளிச்சத்தின் மனஎழுச்சியில் சொன்னார்கள்
சுந்தரா ராமசாமி கூட என்னிடம் சொல்லியிருக்கின்றார்
கதை என்பது மன ஆழத்தின் தற்குறியில் மென்குறியில் திரிபில்லாமல் எழும் தேடலின் வகை , கதை புரிதல் என்பது சொல்லியம் தவிர செவிலியம் உணரியம் என திரியும்
சொல்லியம் என்பது வேறுவகை, புரிதல் என்பது வேறுவகை, உணரியம் என்பதே சினிமாவில் சொல்வது
இந்த சர்க்கார் கதை என்பது சமூகத்தின் படிமத்திலிருந்து மைய படிமம் நோக்கி……”
தமிழில்தான் எழுதுவார், ஆனால் அவரை தவிர யாருக்கும் புரியாது
அதனால் அவரின் விளக்கவுரையினை யாராவது படிக்க விரும்பினால் குவார்ட்டர் கஞ்சா சகிதம் படிக்கவும், காரணம் அப்படியே தூங்கிவிடலாம்.
இந்த படுபயங்கர இயற்கை சீற்றத்தைவிட கொடுமையான அறசீற்றத்தை பற்றி சொல்லியாகிவிட்டது இனி உங்கள் பாடு
[ October 30, 2018 ]
============================================================================
“நான் பாடகிகளை திருட நினைத்தேனே தவிர,
பாடல்களை அல்ல
அந்த பெருமை என்னாளும் எனக்கு உண்டு”
“பங்கு, இனி பாக்யராஜ் பக்கம் அவனுக சாடுவானுக போல என்ன செய்யலாம்
அட பாக்யராஜ் என்ன விஷயம் புரியாதவரா? எம்ஜிஆர் என்ன சொன்னார் பங்கு மறந்துட்டா?
என்ன சொன்னார் பங்கு?
பாக்யராஜ் என் கலையுலக வாரிசுன்னு சொல்லிருக்கார்யா, நிலமை மீறி போச்சுண்ணா பாக்யராஜ தத்தெடுப்போம் சரியா, அவரும் அதன் நோக்கித்தான் வாரார்யா
சூப்பர் பங்கு, பொன்மன செம்மலின் கலையுலக வாரிசுன்னு இப்பவே போஸ்டர் அடிச்சி வச்சிருவோம்..”