சர்ச்சிலின் விக்டரி முத்திரை உலக புகழ்பெற்றது
இந்த படத்தை பார்த்தபின் அதிமுக அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ? ஓஹோ எங்கள் இரட்டை இலை சின்னத்தை வைத்துதான் லண்டனிலே சர்ச்சில் ஆட்சியினை பிடித்தானா?நாமும் இனி அங்கு கிளை தொடங்கிவிட்டால் என்ன? என்ற அளவில் யோசனை செல்லும்
அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகின்றது, அதாவது ரஜினி வந்தேறி, கன்னடன் என சொல்லி ஒன்றும் எடுபடா நிலையில் அங்கிள் இப்பொழுது புதிய குற்றசாட்டினை வீசுகின்றார்
அதாவது ரஜினி ஒரு இலுமினாட்டி
என்ன கண்டார் என்றால், ரஜினியின் பாபா முத்திரை போல வெளிநாட்டு பிரபலங்கள், அரசியல்வாதிகள் எல்லாம் முத்திரை வைத்திருக்கின்றார்களாம், அவர்கள் எல்லாம் அழிவு சக்தியாம், அந்த அழிவு சக்திகள்தான் ரஜினியினை உருவாக்குகின்றார்களாம்
அதாவது பாலசந்தர் ஒரு இலுமினாட்டி , ரஜினியினை உருவாக்கிய எஸ்,பி முத்துராமன் இலுமினாட்டி கைகூலி எல்லா இலுமினாட்டிகளும் ரஜினியினை திட்டமிட்டு உருவாக்கி, அந்த முத்திரையினை வெளியிட்டுவிட்டதாம்
இதற்கு ஆதாரமாக அன்னார் சில படங்களையும் சுமந்து அலைகின்றார், புதிய தலைமுறையில் அள்ளி வீசுகின்றார்
முதலில் இலுமினாட்டி என்றால் என்ன என்பதை பலமுறை எழுதியாயிற்று , அறிவோளி இயக்கம் பகுத்தறிவு இயக்கம் எனும் லத்தீன் பெயரில் வருவதுதான் இலுமினாட்டி
இவர்கள் சொல்வது போல் அப்படி ரகசிய அமைப்பெல்லாம் இல்லவே இல்லை அது சாத்தியமும் இல்லை
இந்த முத்திரை சர்ச்சையும் தேவையற்றது, கூட்டல் குறிக்கும் சிலுவைக்கும் முடிச்சு போட முடியுமா? கூட்டல் குறியினை பயன்படுத்தாதீர் அது கிறிஸ்தவ அடையாளம் என சொல்லமுடியுமா?
ஒவ்வொருவருக்கும் பிரத்யோக ஸ்டைல் உண்டு, ஒவ்வொரு சிம்பலுக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அர்த்தம் உண்டு, நடுவிரலை தூக்கி காட்டினால் தமிழகத்தில் ஒரு அர்த்தம் உண்டு, ஒருவேளை வோட்டு மையினை காட்ட கூட அப்படி காட்டலாம்
ஆனால் வெள்ளையன் காட்டினால் அர்த்தமே வேறு, பாரதத்தில் ஒரு அரசியல்வாதி அப்படி செய்தால், ஓ மை காட் இந்த மனிதன் உலகவாசிகளை கேவலபடுத்துகின்றான் என சொல்வனா? அவனுக்கு தெரிந்தது அப்படி
இப்படியான காமெடிகளைத்தான் அங்கிள் செய்கின்றார் அதில் சில காட்சிகள் மேல்நாட்டவர் கைகாட்டும் பொழுது எடுக்கபட்டவை
அதாவது டாட்டா காட்டுதலில் பலவகை உண்டு, காங்கிரஸ் போல கையினை வைத்து அசைப்பது , உதய சூரியன் போல கை அசைப்பது என்ற வரிசையில் கையினை ஆட்டாமல் நடு முன்று விரல்கள இரு மாதிரி மேலும் கீழும் அசைத்து ஸ்டைலாக சொல்லும் பை பை உண்டு
அப்பொழுது படம்பிடித்தால் பாபா முத்திரை போலவே வரும்
சில தொழிலதிபர்கள் தாங்கள் எதிரியின் வாயினை அடைத்துவிட்டோம் என சொல்ல நடு இருவிரல்களையும் கட்டை விரலையும் சேர்த்து ஆட்டி கிண்டல் செய்யும் பழக்கமும் அங்கு உண்டு
இப்படி பல சைகளை வைத்துத்தான் ஊமைகளுடன் பேசும் சைகை மொழியும் வந்தது, அதிலும் இந்த முத்திரை வரும், அதற்காக ஊமை மொழி பேசும் எல்லோரும் இலுமினாட்டியா?
இதனைத்தான் அங்கிள் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றார், அதொடு விட்டாரா? அடுத்து சொன்னார் பாருங்கள், யூதனை தவிர் யாரும் போப் ஆகமுடியாதாம், அட பரிதாபமே யூதன் ஏன் போப்பாக வேண்டும்? கிறிஸ்தனாக மாறினாலே அவன் யூத அடையாளம் ஒழிந்துவிடுமே
அங்கிள் சைமன், யூதன் எல்லாம் போப் என்றால், ஹிட்லர் கையில் இத்தாலி இருந்தபொழுது அந்த போப்பினை ஹிட்லர் விட்டிருப்ப்பானா?
யூதன் போப்பாக இருந்தால் அவர்கள் காலத்திலே இஸ்ரேல் உருவாகி ஜெருசலேம் அதன் தலைநகர் ஆகாதா? இந்த சர்ச்சை எல்லாம் எதற்கு வீணாக?
ஒரு அடிப்படை உலக அறிவு கூட கிடையாதா உங்களுக்கு? உங்களை நினைத்தால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?
தமிழகம் சோமாலியா ஆகின்றதாம், ஏம்பா சைமன், இங்கு ரஜினியா ஆட்சியில் இருக்கின்றார்? அவர் ஆட்களா ஆற்றுமணல் கடத்தினார்கள்? அவர் ஆட்களா நீர் வராமல் தடுத்தார்கள்??
என்னா பிராடு
ரஜினிக்கு ராஜபக்சே மகன் வாழ்த்து தெரிவித்தது தவறாம், அவர்கள் மோடிக்கும் வாழ்த்தினார்கள், குடியரசு தலைவருக்கும் வாழ்த்தினார்கள், இதில் இவர் என்ன குறை கண்டார்
உலகில் எல்லோரும் வைத்திருக்கும் முத்திரையினை ரஜினி வைத்திருப்பதால் அவர் இலுமினாட்டியாம்
அப்படியானால் இரண்டாம் உலகபோர் காலத்தில் சர்ச்சிலின் இரட்டை விரல் மிக பிரபலம், விக்டரி என்பதை அப்படி V காட்டிகொண்டே மக்களை உற்சாக படுத்தினார்
“டேய் V என்றால் விக்டரி அல்ல, V ரக ராக்கெட் இரு லண்டனை முழுமையாக அழிக்கின்றேன்” என சவால் விட்டான் ஹிட்லர் , அவன் பதிலுக்கு இரட்டை விரலை காட்டினான்
இறுதியில் சர்ச்சிலின் விக்டரி முத்திரை உலக புகழ்பெற்றது
இப்பொழுது நாம் சொல்வோமா? சர்ர்சில் ஒரு இலுமினாட்டி அந்த இலுமினாட்டியால் உருவாக்கபட்டவர் தமிழக ராமசந்திரன் அவரும் இரட்டை விரலை காட்டிகொண்டே அலைந்தார்
அதிமுகவினர் அனைவரும் இலுமினாடி, ஜெயா முதல் இன்றைய பழனிச்சாமி வரை இலுமினாட்டி
என்ன சிரிப்பு வருகின்றதா? இதனைத்தான் அங்கிள் சைமனும் அர்த்தமின்றி சொல்லிகொண்டிருக்கின்றார்
வந்தேரி ரஜினி இப்பொழுது இலுமினாட்டி ரஜினியாம், அடுத்து அவர் இந்த கம்முனாட்டிக்கு வேற்றுகிரக வாசியான ஏலியன்சாக தெரிவார்
விரைவில் அடுத்த டிவியில் ரஜினி பறந்து பறந்து சண்டை போடும் சினிமா காட்சிகளோடு ரஜினி ஒரு ஏலியன் என அங்கிள் சொல்ல வருவார் பாருங்கள்
அங்கிள் சைமன், எங்கே? இந்துக்கள் வணங்கும் பஞ்சபூதத்தைதான், ஐந்தெழுத்து மந்திரத்தைத்தான் அந்த முத்திரையினைத்தான் உதய சூரியன் என திமுகவினர் கொண்டு திரிகின்றார்கள், அவர்கள் இந்துத்வா சக்தியின் ரகசிய ஏஜெண்டுகள் என சொல்லிவிடும் பார்க்கலாம்?