சர்ச்சையா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி ராமசந்திரன் பெயர் சூட்டபடும் என்பது சர்ச்சையாகின்றது

பெரும்பாலும் கத்துபவர்கள் உடன்பிறப்புக்கள் மற்றும் காங்கிரசார்

ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள்

தமிழகத்தில் இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது சாட்சாத் திமுக, அவர்களேதான்

வெள்ளையன் அரும்பாடுபட்டு உருவாக்கிய மவுண்ட் ரோடு என்பதை அண்ணா சாலை என மாற்றி தவறான முன் உதாரணம் கொண்டு வந்தார்கள்

காணும் இடமெல்லாம் அண்ணாவினை நீக்கமற நிரப்பி வோட்டுக்க்கு காத்திருந்தவர்கள் அவர்களே

அதே பாணியில் இன்று அதிமுக ராமசந்திரன் பெயரோடு கிளம்பியிருக்கின்றது

திமுக மவுண்ட்ரோட்டு பெயரை மாற்றினால் சரியாம், பழனிச்சாமி சென்ட்ரல் நிலைய பெயரை மாற்றினால் தவறாம்

மும்பையில் விக்டோரியா டெர்மினல் எனும் ரயில் நிலையத்தை சிவசேனா சத்ரபதி சிவாஜி நிலையம் என மாற்றியது

உண்மையில் பாஜக இந்த பெயர்மாற்றம் விரும்பினால் அது சாவர்க்கர், ராணடே என்றுதான் அமைந்திருக்கும் அல்லது அழுத்தம் கொடுத்தால் பாண்டிய நெடுஞ்செழியன், ராஜராஜ சோழன் ஏன் கட்டபொம்மன் பெயரிலே கூட அமைந்திருக்கும்

ஆனால் அதெல்லாம் வோட்டாகுமா?

ஆக திமுக செய்ததைத்தான் அதிமுகவும் செய்யும் அதைதாண்டி யோசிக்க தெரியாது அவர்களுக்கு

மீதமிருக்கும் எக்மோர் ரயில் நிலையத்திற்கு விரைவில் ஜெயா பெயரை சூட்டுவார்கள்

எது எப்படியும் போகட்டும்

சென்னை துறைமுகத்திற்கோ இல்லை சென்னை விமான நிலையத்திற்கோ தலைவி குஷ்பு பெயரை சூட்டும்படி சங்கம் கோரிக்கை வைக்கின்றது