சர்வதேச தீவிரவாதி
ஒரு வழியாக மசூத் அசார் எனும் கொடிய பங்கரவாதியினை சர்வதேச தீவிரவாதி என ஐ.நா அறிவித்துவிட்டது
ஐ.நா சும்மா அறிவிக்கமாட்டார்கள், சில பகிரங்க மற்றும் சில ரகசிய தகவல்கள் கிடைத்து அவை உறுதிபடுத்தபட்டால் மட்டுமே நடவடிக்கை இருக்கும்
இலங்கை தாக்குதல் நடந்து, அந்த தீவிரவாத கும்பலுக்கு தெற்காசியா நாடு ஒன்று பயிற்சி வழங்கிற்று, உலகிற்கே அது தீவிரவாதத்தை வழங்கும் நாடு என அமெரிக்காவின் மைக் பாம்பியோ இரு வாரங்களுக்கு சொன்னபொழுதே பலருக்கு நெற்றி சுருங்கிற்று
ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஏதோ சொல்கின்றார், நிச்சயம் திட்டம் இருக்கின்றது என்றார்கள்
அப்படி அறிவிப்பு இப்பொழுது வந்திருக்கின்றது
ராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு வெற்றி, பாகிஸ்தானுக்கும் சைனாவுக்கும் தோல்வி
இலங்கை தாக்குதலில் தன் பெயர் ரகசியமாக அடிபடுவதால் பாகிஸ்தானும் இதில் கனத்த மவுனம்
இனி என்னாகும்?
ஒன்றும் ஆகாது, இதுவரை பகிரங்கமாக பாகிஸ்தானில் வலம் வந்த மசூத் அசார் இனி ரகசியமாக எங்காவது மதராசாவில் மல்லாக்க கிடப்பான்
அவன் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் கைவிரிக்கும்
பின்லேடனுக்கே அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் , அவன் அங்கு கொல்லபடும் வரை அவன் அங்கே இல்லை என சொன்ன பாகிஸ்தான் மசூத்தை விடுமா?
ஆனால் இதற்கெல்லாம் அவன் உயிரோடு இருக்க வேண்டும்
இந்திய தாக்குதலில் அவன் படுகாயமுற்றான் என செய்திகள் உண்டு
ஒருவேளை அந்த மசூத் அசார் செத்து தொலைந்தாலும் பாகிஸ்தான் அவன் எங்கள் நாட்டில் இல்லை என சொல்லிகொண்டே அவன் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தும்
பிழைத்திருந்தால் அவனை தேடிகொண்டிருக்கின்றோம் என சொல்லியபடியே அவன் வாயில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து கொடுத்து கொண்டிருக்கும்