சர்வாதிகாரியினை சட்டையினை கிழித்து அனுப்புகின்றது

1989ம் ஆண்டு சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழும்புகின்றார் கருணாநிதி, மிக மிக துணிச்சலாக கேட்கின்றார் ஜெயலலிதா

“இந்நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு , அமைதிபடையாக சென்று அடுத்தநாட்டில் செத்தும் ரத்தம் சிந்தியும் செத்தும் வந்த நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிவிட்டு

தேசதுரோகியான உங்களுக்கு இச்சபையில் பேசவோ நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகைதை இருக்கின்றது?”

ஆடிபோய் இருந்தது சட்டமன்றம், மறுகேள்வி கேட்க யாருக்கு பதில் உண்டு

ஆனால் தன் வழக்கமான திராவிட சேட்டையினை அங்கு அரங்கேற்றினார் கருணாநிதி , மைக்கை அணைத்துவிட்டு சொன்னார் “உன் யோக்கியதை தெரியாதா?”

யார் யோக்கியதையினை பற்றி பேசுவது என எழுந்த ஜெயலலிதா சட்டமன்றத்திலே கொடூரமாக தாக்காபட்டார்,

” பிரமண நாயே..” என்றெல்லாம் அடிவிழுந்தது

அதுவும் திடீர் திமுக துச்சாதனர்கள் அவரின் சேலையினை பிடித்து இழுத்த அவமான சம்பவமெல்லாம் அரங்கேறின, மாபெரும் கீழ்தரமான வேலை அது

அந்நிலையிலும் சொன்னார் “ஆம், பாப்பாத்திதான், உங்களை சும்மா விடபோவதில்லை”

அந்த உறுதிதான் ஜெயலலிதா அதன் பின் அவர் இருக்கும்வரை அவரை அசைத்துபார்க்கும் சக்தி யாருக்குமில்லை, மும்முறை அதே சபையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அலற வைத்தார்

அந்த பெண் சிங்கம் பெயரை கேட்டாலே எதிர்தரப்பு அலறியது

அவமானபட்ட இடமெல்லாம் மறுபடியும் கம்பீர‌ சிம்மமாய் வலம் வந்த அவரைபோல் இனியொரு பெண்ணை அந்த சபை காண்பது அரிது..

சிங்கப்பெண் என்றால் அது அவர்தான்..

ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரை இழுத்துபோட்டு அடித்த திமுகதான் பெண் உரிமையினை குத்தகைக்கு எடுத்தது போல் பேசிகொள்ளும்

இன்று அதே ஜெயா விட்டுசென்ற அரசு, அதே சட்டமன்றத்தில் சர்வாதிகாரியினை சட்டையினை கிழித்து அனுப்புகின்றது