சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார்

சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார்

பருப்புவிலை மற்றும் தாலி அறுப்பு கொள்ளையினை கண்டிக்கின்றேன் என வந்து தன் வழக்கமான உச்சஸ்தானியில் “சங்கிலி பருப்பு, தாலி அரிப்பு” என சொல்லிவிட்டார்

அவர் சொன்னதை ஏதோ உளறுகின்றார் என்கின்றார்கள் மடையர்கள்,

அப்படி அல்ல “அவர் கலைஞர் புள்ள” சும்மா பேசமாட்டார். நாமேதான் அர்த்தம் புரிந்துகொள்ள வேண்டும்

இதன் பொருள் என்ன?

சங்கிலி கருப்பு போல சங்கிலி பருப்பு.

பருப்பு விலையினை கட்டுபடுத்த சங்கிலி பருப்பா வருவார்? எடப்பாடி பொறுப்புத்தான் வரவேண்டும் என்கின்றார் சர்வாதிகாரி, வேறொன்றுமில்லை

திமுக என்றால் கொக்கா?

சங்கிலி கருப்பனையே நீ என்ன பருப்பா என கேட்க எவ்வளவு தில் வேண்டும்?, இதெல்லாம் பகுத்தறிவு

கருணாநிதி கூட சங்கிலி கருப்பனை கேள்வி கேட்கா நிலையில் தலைவருக்கு தில்லை பார்த்தீர்களா?

அடுத்த வரிதான் ஆபத்து, அது நமக்கல்ல அண்ணியாருக்கு

தாலி அரிப்பு என்பது சாதாரண வார்த்தை அல்ல, திமுக கவிஞர் வைரமுத்து “தாலி கட்ட கழுத்து அரிக்குதே” என அடிக்கடி எழுதியிருக்கின்றார்

சம்பந்தபட்டவர்கள் இதுபற்றி கவலைபடுவது நியாயம், நமக்கென்ன வந்தது?