சர்.சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ்
இந்தியாவின் ஞான மரபிலும் இந்து ஆன்மீக மரபிலும் கலந்து உலகம் வியக்கும் கருத்துக்களை இந்த நூற்றாண்டில் கொடுத்தவர் பலர்
ரபீந்திரநாத் போன்ற கவிஞர்கள் சிலர், இந்து மதத்தில் பொதிருந்திருக்கும் அதிசயங்களை இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்தி உலகை அதிசயவைத்தவர் வெகுசிலர்
அவர்களில் சர்,சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ் ஆகிய மூவரும் மறக்கமுடியா ஞானிகள், இந்துமததத்தில் மூழ்கி விஞ்ஞான முத்தெடுத்தவர்கள் அவர்கள்
ராமானுஜம் ஜாதக கணகீடுகளுக்காக கணிதம் கற்று அதிலே மூழ்கி கணித விஞ்ஞானியானான், இன்றும் வானியல் கோள்களின் சுற்றுபாதை முதல் பல வானவியல் விஞ்ஞான கோட்பாடுகளில் அவன் கொடுத்த கணித சமன்பாடே துல்லியமாக பயன்படுத்தபடுகின்றது
தான் வணங்கிய நாமகிரித்தாயார் தன் கனவில் வந்து சொன்னவை சில கணித விஷயம் என அவனே சொல்லியிருக்கின்றான் என்பது கூடுதல் விஷயம்
ஆம் தூய இந்துவாக வாழ்ந்த அவனுக்கு இந்து மதத்தின் அடிப்படை ஞானம் விஞ்ஞான ரகசியங்களை திறந்து காட்டியது
ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, அவரின் ஒரு பக்கமும் அவரின் கோட்பாடும் மேற்குலக விஞ்ஞானத்தால் மறைக்கபட்டன
போஸின் கம்பியில்லா தகவல் தொடர்பு ஆராய்ச்சி கட்டுரையே மார்கோனி ரேடியோ கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்தது, சரி போஸ் ஏன் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் தாவரவியலுக்கு வந்தார்
போஸ் தன் வாழ்நாளில் மாபெரும் உண்மையினை இந்துமத சாயலில் சொல்லியிருந்தார். நமக்கு அத்வைதம் துவைதம் போன்ற கோட்பாடெல்லாம் தெரியாது அல்லது புரியாது
ஆனால் இந்துமதம் சுருக்கமாக சொல்வது இதுதான் “இறைவன் எல்லா உயிரிலும் உண்டு அவன் தூணில் இருப்பான் ,துரும்பில், இருப்பான் .கல்லில் இருப்பான், கற்கண்டிலும் இருப்பான்” என சொன்னது
போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை கண்டறிந்தார், அது ஒன்றும் அதிசயமல்ல இந்து ஞானிகள் 6 உயிர்களை வகைபடுத்தபடும் பொழுது தாவரங்களையும் ஒரு உயிராக கருதினர்.
ஆம் நம் தர்மமும் ஞானமும் தாவரங்களுக்கு உயிர் உண்டு என என்றோ சொன்ன நிலையில் 18ம் நூற்றாண்டுவரை தாவரத்தை உயிரற்ற பொருளாகவே வைத்திருந்தது மேற்குலகம்
போஸ் அதை தாண்டி உலோகங்களுக்கும் உயிர்தன்மை உண்டு என சொன்னார், அதையும் தாண்டிய அவரின் ஆய்வு அதிசயிக்க வைத்தது
உயிர்தன்மையற்றதாக கருதபட்ட உலோகங்கள் போன்றவற்றையும் உயிர்தன்மையுள்ளவையான தாவரம் மற்றும் இதர உயிர்களுக்கும் பொதுவான விதி ஒன்றை கண்டறிய முயன்றார்
உயிருள்ளவை உயிரற்றவை என எல்லாமும் அந்த விதியில் அடக்கமுடியும் என கருதினார், அது இந்து மதத்தின் ஆதார விதியாய் இருந்தது
தோன்றுதல், களைத்தல், புத்துணர்வு கொள்ளல் ,மறைதல், மறுபடி தோன்றுதல் ஆகிய சுழற்சி மானிட இனத்திலும் விலங்கினத்திலும் தாவரங்களிடத்திலும் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு பொருளிலும் அசையும் அசையா பொருளிலும் உண்டு, உலோகமும் கல்லும் அவற்றில் உண்டு என ஆய்வின் முடிவில் சொன்னார் போஸ்
ஆம் அதுதான் இறைவன் ஒவ்வொரு பொருளிலும் உள்ளான் எனும் இந்துக்களின் தத்துவம்,
ஆம் தெய்வம் அழியாதது அப்படி இங்கு ஆற்றலும் அழியாதது
(விஞ்ஞானமும் ஆற்றலுக்கு அழிவில்லை என்பதை பின்னாளில் ஒப்புகொண்டது)
உலோகங்கள் உயிரற்றவை அல்ல, விஷேஷித்த சக்திகள் அவற்றில் செலுத்தபடும் பொழுது அவை பெரும் சக்தியும் மாற்றமும் கொடுக்கும் என்றார்



சித்தர்கள் சொல்லும் ரசவாதம் அதுவே
போஸின் கருத்துக்கள் மேற்குலகை புரட்டி போட்டன, அவரின் கருத்துக்கள் உடல்கூறு, மனவியல் உட்ப்ட எல்லா துறைகளின் அடிநாதத்தையும் அசைத்தன
ஆனால் மேற்குல விஞ்ஞான பீடம் அவரை ஒரு இயற்பியலாளாரக நிற்க சொன்னது, அவர் சொன்னதெல்லாம் சரியாய் இருந்தும் இந்திய விஞ்ஞானி இந்துக்களின் தொன்மை ஞானத்தை விஞ்ஞான உலகம் மேல் மழையாய் பொழிவதில் அவர்களுக்கு விருப்பமில்லை
உலகில் மறைக்கபட்ட விஞ்ஞானி போஸ், காரணம் அவர் மறைக்கபடாவிட்டால் பாரதத்தின் பெருமையும் பண்டைய அறிவும் வெளிபட்டு வெள்ளையனின் நவீன விஞ்ஞானத்தையே புரட்டி போட்டிருக்கும்
அந்த வாய்ப்பினை வெள்ளை விஞ்ஞான சமூகம் கொடுக்க விரும்பவில்லை
விளைவு போஸ் விலக்கிவைக்கபட்டார், அவரின் கம்பியில்லா தகவல் தொடர்பை மார்கோனி ரேடியோவாக்கினான் , இன்னும் யார் யாரெல்லாமோ எடுத்து என்னவெல்லாமோ செய்தார்கள்
தாவரங்கள் பக்கம் தன் ஆய்வினை திருப்பி அப்படியே இறந்தான் போஸ்
எனினும் போஸின் காலத்துக்கு பின்பு அணுகுண்டும் இன்னும் பிரமாண்டமான விஷயங்களும் உலோகம் கல் மற்றும் சில காற்று வெற்றிட விஷயங்கள் ( கம்பிரசர் மோட்டார், புல்டோசர் போன்றவையின் ஆதார தத்துவம்) இவற்றை எல்லாம் விளங்கிய உலகம் போஸ் சொன்னதை மவுனமாக ஒப்புகொண்டது
ஆம் உலோகமும் இதர பொருளும் உயிரற்றவை அல்ல, அவற்றிலும் இயக்கம் உண்டு உயிர் உண்டு அவைகளும் சக்தியோடு இருக்கின்றன, போஸ் சொன்ன மானிட தாவரவிதி அவைகளுக்கும் பொருந்தும் என்பதை மவுனமாக ஒப்புகொண்டது
உலோகத்தில் அணுக்கள் உண்டு, அவை இயங்குகின்றன, எலெக்ட்ரான்கள் சுழலுகின்றன, இயக்கம் அணுவில் இருந்து அண்ட சக்திவரை உண்டு. உலோகத்தில் இயங்கு சக்தி எனும் உயிர் உண்டு என மெதுவாக பின்னாளில் ஒப்புகொண்டது உலகம்
போஸ் எதை சொன்னான்? காணும் பொருளெல்லாம் இறைவன் வாழ்கின்றான் என இந்துமதம் சொன்னதை தன் ஆய்வின் மூலம் சொன்னான் அவ்வளவுதான்
சந்திரபோஸ் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்து தர்மத்தில் மூழ்கிய பக்திமிக்க விஞ்ஞானி
இந்த இருவரை போலவே இந்துமதத்தில் முத்தெடுத்தவர் சர்.சிவி ராமன்
சூரியனை ஏழு குதிரைகள் இழுத்துவரும் என்ற புராண தத்துவத்தின் அடிப்படையில் சூரிய கதிர்களில் ஏழு நிறம் உண்டு என்பதை சொல்லி, கடலும் வானமும் ஏன் நீல நிறத்தில் உள்ளதென்றால் நீல நிற ஒளி அதிகம் சிதறடிக்கபடுகின்றது என நிரூபித்து நோபல் பரிசினை வென்றார்
ஆம், கண்ணனும் ராமனும் நீல நிறம் என புராணம் ஏன் சொன்னதென்றால் இதனால்தான் என்பதை இந்துவாக நிரூபித்தார்
அந்த மூன்று விஞ்ஞானிகளும் இந்து மதத்தினை மனமார நேசித்தவர்கள், அதனால் அம்மதத்தின் விஞ்ஞான ரகசியங்களை தெய்வம் அவர்களுக்கு ஞான பரம்பரையின் தொடர்ச்சியாக வெளிபடுத்தியது
இவர்கள் மூவரை போல 3 ஆயிரம் கோடிபேர் வந்தாலும் அவர்களுக்கும் கொடுக்க பல ரகசியங்களையும் மறை பொருளையும் அம்மதம் வைத்திருக்கின்றது
இவர்கள் அந்த இந்துமதத்தை விஞ்ஞானத்தில் நிரூபித்த மும்மூர்த்திகள், இன்னும் ஏகபட்டபேர் பின்னாளில் வருவார்கள் அதை உலகம் காணும்
அந்த மும்மூர்த்திகளில் ஒருவரான சர்.சி.வி ராமனுக்கு இன்று நினைவு நாள் அந்த தூய இந்துவினை, அறிவார்ந்த தமிழனை நினைத்து அறிவார்ந்த அஞ்சலி செலுத்துவது நம் கடமையும் நன்றியுமாகும்
( மக்கள் தங்கள் குழந்தைகளை நல்ல இந்திய பாரம்பரியத்தில் வளர்த்தெடுத்தால் இம்மாதிரி மேதைகள் கிடைப்பார்கள், உலகம் அவர்களை கொண்டாடும் நாடும் நலம்பெறும்
கலாமும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் இந்திய ராணுவ காவல் தெய்வங்களும் அப்படி வந்தவர்களே, அவர்களில் இந்த புரட்சி புண்ணாக்கு கறுப்பு சட்டை ஆதரவாளர்கள் யாரும் இருக்கமுடியாது.
மாறாக திராவிட கறுப்புசட்டை இம்சை கொள்கைகளில் வளர்த்தெடுத்தால் இட ஒதுக்கீட்டில் படித்து அல்லது வேலைக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்டு அத்தோடு சரி,
இல்லை கட்சி கொடி இயக்கம் பெரியார் சிலை என எதையோ சொல்லி தானும் குழம்பி சமூகத்தையும் குழப்பி சமூக விரோதி அரசியல்வாதியாய் மாறும், நாட்டையும் சமூகத்தையும் நாசமாக்கி, சுய அறிவற்ற சிந்திக்க தெரியாத குவாட்டர் பிரியாணி தலைமுறையினை உருவாக்கும்
அதற்கு மேல் என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியாது பாவம்
நல்ல ஞானமரபில் இளம்வயதிலே பாரம்பரியங்களையும் மத அபிமானத்தினையும் வளர்த்தால் வருங்காலத்தில் ஆயிரம் ராமன்களையும் போஸ்களையும் சீனிவாச ராமானுஜத்தையும் இத்தேசம் பெறும்
அப்படி பெற்றுவிட கூடாது என்பதில்தான் சிலர் கண்ணும் கருத்துமாய் இருந்து சனாதான தர்மம், கோபுரம், கருவறை என சொல்லி மொத்த தலைமுறையினையும் மடத்தனமான தலைமுறையாய் மாற்ற கடும் உழைப்பில் இருக்கின்றார்கள் அவர்களிடம் மகா எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும், அவர்கள் இந்நாட்டின் நலம்விரும்பிகளாய் இருக்கவே முடியாது
அவர்களெல்லாம் முற்போக்கு வேடமிட்ட வெளிநாட்டு கைகூலிகள், அந்த நரிகளிடமிருந்து இளம் தலைமுறையினை காக்க வேண்டியது நம் கடமை)