சல்மா புறக்கணிக்கபடுகின்றாரா?
தூத்துகுடியில் அணல் பறக்கும் பிரச்சாரம் செய்கின்றார் கனிமொழி
திமுகவின் தற்கால பென்கள் அணிபற்றி தெரிந்தவருக்கு தெரியும், திமுக மகளிரணியின் முகங்கள் பிரபலமான முகங்கள் வெகுசில
கனிமொழி, தமிழச்சி என வரும் அந்த பட்டியலில் கவிஞர் சல்மா என்பவரும் வருவார்
கடந்த பல வருடங்களாக திமுக நடத்திய எல்லா போராட்டத்திலும் அந்த அம்மணி இருந்தார், கைதானார் சிறை சென்றார்
திமுகவில் இருக்கும் இஸ்லாமிய பெண்மணி என்ற வகையில் சிறுபான்மையினரை கவரும் அம்சமும் அதில் இருந்தது
அப்படிபட்ட கவிஞரை தூத்துகுடியில் காணவே இல்லை
அட தூத்துகுடியில்தான் காணவில்லை என்றால் தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சாரத்திலும் காணவில்லை
சரி தமிழச்சி சூடிவரும் மல்லிகை பூ கவிஞருக்கு அலர்ஜி என வைத்து கொண்டாலும் தூத்துகுடிக்கு என் வரவில்லை
காயல்பட்டினம் உட்பட பல இஸ்லாமிய கோட்டைகள் உள்ள இடத்தில் அம்மணி ஏன் அழைக்கபடாமலிருக்கின்றது
தென்னகத்தில் இஸ்லாமியிருக்கான வோட்டு வங்கி மேலப்பாளையம், காயல்பட்டினம், கடையம் என பல இடங்களில் உண்டு நெல்லை பக்கமும் ஏராளம் உண்டு
இங்கெல்லாம் இஸ்லாமிய பெண் பிரமுகரை அழைத்து செல்வதுதான் நல்ல அரசியல் கணக்கு, இஸ்லாமிய மகளிரை எளிதில் அணுக முடியும்.
அப்படிபட்ட இடத்தில் சல்மா புறக்கணிக்கபடுகின்றாரா?
இது பல கேள்விகளை எழுப்புகின்றது
காங்கிரஸ் சென்னிமலை ஜோதிமணி போன்றவர்களை எல்லாம் கைதூக்கிவிடும் நேரம் திமுக இப்படி சறுக்குவது சரியல்ல.
இஸ்லாமியர் நிச்சயம் பாஜக பக்கம் செல்லமாட்டார்கள், அவர்களுக்கு வேறு கதி இல்லை என்பதால் திமுக பக்கம் சரிவார்கள் எனும் ஆணவமிக்க திட்டம் என்பதை தவிர வேறு எந்த வியூகமும் திமுகவிடம் இருக்க வாய்ப்பில்லை
வேட்பாளர் பட்டியலில்தான் இஸ்லாமியரை புறக்கணித்தது திமுக, பிரச்சாரத்திலுமா புறக்கணிப்பார்கள்?
ஏதோ புகைகின்றது அல்லவா?
இதுபற்றி தூத்துகுடி பாஜகவினரிடம் கேட்டால் உடனே தகவல் வரும், காரணம் தூத்துகுடி திமுகவின் முழு ஜாதகமும் அவர்கள் கையில்தான் இருக்கின்றது
