சாதனை இந்தியர் டாடா
இந்தியா சாமியார்களின் தேசம், ஒருகாலமும் அங்கு தொழில்துறை மலராது, அவர்களால் அறிவியல் தொழில்களை செய்ய முடியாது என சொல்லிகொண்டிருந்த ஐரோப்பாவிற்கு இந்தியர்களாலும் நவீன தொழில்களை நடத்தமுடியும் என முதன் முதலில் செய்துகாட்டியவர் ஜாம்ஷெட்ஜி டாடா
குண்டூசி கூட உங்களால் செய்யமுடியாது என எள்ளிநகையாடிய மேற்குலகத்தின் முன்னால் மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தை அமைத்து காட்டியவர்
இந்தியாவில் கனரக தொழில் முதல் பல நவீன தொழில்களை முதன் முதலில் தொடங்கியவர்
உலக அளவில் இந்தியாவிலும் சிறந்த தொழில் நிறுணங்கள் உண்டு என முதன் முதலில் சொன்னவர்.
எல்லாவற்றிற்கும் மேலானது அவரின் நாட்டுபற்று
ஐரோப்பாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என ஹோட்டலில் இவரை அவமதித்தபொழுது, இந்தியா திரும்பி வெள்ளையர் அடையாளமான பம்பாய் கேட் அருகே தாஜ் ஹோட்டலை கட்டியவர்
கட்டிவிட்டு வெள்ளையருக்கு அனுமதி இல்லை என தில்லாக சொன்னவர்
அந்த ஹோட்டலுக்கு டாட்டா என்றோ, ஜாம்ஷெட்ஜி என்றோ அவர் பெயரிடவில்லை, மாறாக இந்திய அடையாளமான தாஜ் எனும் பெயரினை இட்டார்
நவீன இந்திய வரலாற்றில் மறக்கமுடியா மனிதர், இந்தியாவினை தொழிற்துறைக்கு கையினை பிடித்து இழுத்து சென்றவர்
இந்த கணிணி உலகிலும் மென்பொருள் தயாரிப்பிலும் அந்நிறுவணம் பெரும் பங்காற்றுகின்றது
திரண்ட பெரும் செல்வத்தை எப்படி ஏழ்மை இந்தியர்களை கைதூக்கி விடவேண்டும் என்ற திட்டத்தினையும் அவர் வகுத்திருந்தார், இந்தியாவின் மக்களின் சேவைக்கு அவர் அள்ளிகொடுத்த பணம் கொஞ்சமல்ல
இன்றுவரை அந்நிறுவணம் அதனை திறம்பட செய்கின்றது, சமீபத்தில் அதன் நிர்வாக இயக்குனர் நீக்கபட்ட சர்ச்சையிலும் இந்த சேவைக்காக டாட்டா ஒதுக்கிய சொத்துக்களில் அவர் சுரண்டிய சர்ச்சையும் இருந்தது
அதாவது ஏழை மக்களுக்காக பெரும் சொத்துக்களை டாடா விட்டுசென்றிருக்கின்றார் என்பது உண்மை
இன்றுவரை இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய தொழில்நிறுவணங்கள் அவரின் டாடா நிறுவணத்தோடே கூட்டு வைத்து இந்நாட்டில் உற்பத்தியினை மேற்கொள்கின்றன
அந்த அளவு இங்கு இன்னும் மேற்குலக நாடுகளுக்கு சவால் விடுகின்றார் டாடா எனும் இந்தியன்
இன்று அவரின் பிறந்தநாள்
பார்சி எனும் மிக சிறுபான்மை சமூகம் அவருடையது
இந்த தேசத்தில் சாதிக்க மதம், இனம், மொழி என எந்த தடையுமில்லை, இந்தியன் எனும் ஒற்றை உணர்வு போதும் என வாழ்ந்துகாட்டியவர்களில் ஒருவர்.
இன்று இந்தியாவில் ஏகபட்ட தொழிலதிபர்கள் உண்டு, அவர்களுக்கெல்லாம் எந்நாளும் முன்னோடி இந்த டாடா.
இந்தியர் நவீன தொழிலில் , கனரக தொழிலில் யாருக்கும் சளைத்தவர்கள் என நிரூபித்த சாதனை இந்தியர் அவர்.
அவரை நன்றியோடு இத்தேசம் நினைத்துகொள்வதில் பெருமை அடைகின்றது