சாதாரண பாஜக காரியதரிசி
அவர் கார்கில் போர் நடக்கும்பொழுது குஜராத் முதல்வராக கூட இல்லை, சாதாரண பாஜக காரியதரிசி
ஆனால் யுத்தம் என்றவுடன் வீரர்களை சந்திக்க ஓடியிருக்கின்றார் அன்று அவரை யாருக்கும் தெரியாது, வெகு சாமான்யர்களில் ஒருவர்
இன்றுஅவரின் நாட்டுபற்று அவரை அசைக்கமுடியா பிரதமராக நிறுத்தியிருக்கின்றது
இங்கு கார்கில் யுத்தத்தின்பொழுது எத்தனை அரசியல்வாதிகள் இருந்தார்கள்? எவ்வளவு கட்சிகள்? எவ்வளவு தலைவர்கள்? எவ்வளவு முதல்வர்கள்?
அவர்களில் யாராவது சென்றார்களா? இல்லை
ஆனால் பதவி இல்லாவிட்டாலும் தான் யாரென அறியபடாவிட்டாலும் அம்மனிதன் ஓடியிருக்கின்றான்
இதைத்தான் நாம் முன்பே சொன்னோம்
போர்முனைக்கு சென்றவர்களில் காமராஜருக்கு அடுத்து குறிப்பிட்டு சொல்லகூடிய தலைவர் மோடி, அதில் மிகை ஏதுமில்லை
நம் தலைமுறையில் நாட்டுக்காக வாழும் ஒரு நல்ல தலைவனை காணும் வாய்ப்பினை காலம் கொடுத்திருக்கின்றது

