சாதி என்பது சமூக அமைப்பே அல்ல, அது ஒரு மனகோளாறு
சாதி என்பது சமூக அமைப்பே அல்ல, அது ஒரு மனகோளாறு
அதை சட்டம் போட்டோ, சலுகைகள் கொடுத்தோ ஒழிக்க முடியாது. காரணம் அந்த கோளாறு அதனை உரமாக எடுத்துகொண்டு ஓங்கி வளரும்
தான் மேல்சாதி என நினைப்பது எவ்வளவு பைத்தியகாரதனமோ அதைவிட மகா மகா அறிவுகெட்ட விஷயம் தான் கீழ்சாதி என நம்புவது
இவை மனதால் உருவாகும் வன்மங்கள் சட்டம் அதற்கு தீர்வு ஆகா..
அவர் அதை சிந்திக்க சொல்லிவிட்டு செல்லாமல் சாதியினை ஒழிக்கின்றேன் என விஷம் இடுவதற்கு பதில் நீர் ஊற்றுவது போல சில விஷயங்களை சொல்லிவிட்டு சென்றதுதான் இந்திய சோகம்..
ஆம் இப்படி செய்தால் , இட ஒதுக்கீடு உட்பட சில விஷயங்களா செய்தால் சாதி ஒழியும் என நம்பினார், ஆனால் அது வாழ்வதற்கான அடிப்படை ஆதாரம் என அச்சமூகம் நம்பி அம்பேத்கரின் கொள்கைக்கே எதிர்பாரா பின் விளைவாக அமைந்தது சோகம்.
இதெல்லாம் மனதால் தீர்க்கவேண்டிய விஷயங்கள், மாறாக இட இதுக்கீடு போன்ற சலுகையும் இன்னபிற இம்சையும் அதை தீர்க்காது
அம்பேத்கரின் கொள்கையும் அவரின் கொள்கையின் பரீசார்த்த முடிவும் அதைத்தான் சொல்கின்றன
வயிற்றுக்கு சோறுபோட்டு மூளையினை மழுங்கடி என்பது கம்யூனிச சித்தாந்தம் அது உருப்படாமல் போனது
சாதியினை இட இதுக்கீட்டால் ஒழி , அவனை சிந்திக்க விடாதே எனும் தலித் தத்துவமும் அப்படி உருப்படாமலே போகும்
அம்பேத்கர் தாழ்த்தபட்ட வகுப்பு, ஆனால் கல்வி அவரை உயர்த்தியது. இத்தேசமும் சாதி பேதமின்றி அவரை சட்டம் இயற்றவும் , ரிசர்வ் வங்கி அமைக்கவும் தலமை ஏற்க சொன்னது
சாதி ஒழிப்பினை மனதால் செய்திருக்க வேண்டும், அதை சட்டம் போட்டு தடுக்கலாம் என நம்பியது பெரும் தவறு
ஏறிவாருங்கள் என படிகட்டு அமைத்தார் அம்பேத்கர், ஆனால் ஏறிவராமல் படியிலே இருந்துகொண்டு என்படி என் உரிமை என அரசியல் செய்துகொண்டிருகின்றது சில கோஷ்டி
ஒரு கேடயத்தை கொடுத்தால் அவர்கள் தங்களை தற்காத்துகொள்வார்கள் என நினைத்தார் அம்பேத்கர், ஆனால் சதா சர்வகாலமும் அதையே தூக்கி போருக்கு திரிவார்கள் என்பது அவர் எதிர்பாரா அதிர்ச்சி
இது சாதிபாகுபாடு நாடு அல்ல, திறமை இருந்தால் யாரும் எங்கும் வரலாம் என்பதற்கும், கல்வி ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்கும் அம்பேத்கர் எந்நாளும் உதாரணம்’
அவர் வாழ்வு அதைத்தான் சொல்கின்றது