சாதி வெறி என்பதன்றி வேறல்ல
வடக்கே அரியலூர் பக்கம் பொன்பரப்பியில் கலவர சூழல் ஓயவில்லை. பெரும் காவல் போடபட்டு கடும் நடவடிக்கை எடுக்கபட்டபின் நிலமை கட்டுக்குள் இருக்கின்றது.
அதற்கு அரசியல் சாயம் பூசினாலும் ஒரே காரணம் சாதி வெறி என்பதன்றி வேறல்ல
அங்காவது வன்னியர் மற்றும் தலித்துக்களுக்கான மோதல் என சொல்கின்றன செய்திகள், அதாவது இரு சாதி
இந்த பொன் அமராவதி பக்கம் திரும்பினால் தலை சுற்றுகின்றது
முத்தரையர் சாதிக்கும் முக்குலத்தோர் சாதிக்கும் இடையே கும்மாங்குத்து என்றன செய்திகள்
அட அது முத்தரையனரா என்றால் அப்படியும் சொல்ல முடியாதாம் முத்தரையனர் உட்பிரிவாம்..
இப்பக்கம் முக்குலத்தோர் உட்பிரிவாம்
முத்தரையர் என்றால் அரையர் என்கின்றது பழங்கால செய்திகள், அரைதல் என்றால் ஓதுதல் என பொருள்
அப்படி ஒருகாலத்தில் இருந்த சமூகம்
இப்பொழுது முத்தரையர்களா சிக்கல் என்றால் அதிலும் உட்பிரிவாம்
வலையர் என்கின்றார்கள், ஓந்திதிரியர் என்கின்றார்கள் இன்னும் என்னென்ன சாதிபெயரெல்லாமோ வருகின்றது
இப்பக்கம் முக்குலத்தோருக்குள் முன்னூறு பிரிவு இருக்கும் போல
ஒவ்வொரு சாதி மோதலிலும் எது நியாயம் யார் மேல் தவறு என உண்மை வெளிவருகின்றதோ இல்லையோ புது புது சாதி பெயர்களாக வந்து கொண்டே இருக்கின்றது