சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல… இந்த பயலுகளா?

நாம் தலித்திற்கோ அல்லது அதன் இயக்கங்களுக்கோ இந்த ரஞ்சித் என்பவருக்கோ எதிரி அல்ல, அதற்கு அவசியமும் அல்ல
அவர் எடுத்த அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை பற்றி ஏதாவது சொன்னோமா? சொல்ல அவசியம் அல்ல
ஆனால் ரஜினி என்பவர் கோடம்பாக்க சாமி, கிட்டதட்ட 30 வருடங்களாக அவர் படம் வருகின்றது என்றால் அது திருவிழா, மறுக்க முடியுமா?
அவரின் அரசியல் குட்டிகரணங்களும் , சர்ச்சையான கருத்துக்கள் மகா மோசம் என்றாலும் ஒரு நடிகனாக அவரையும் ஜனரஞ்சகமான படங்களை கொடுப்பவர் என்ற முறையிலும் அவரை ஒப்புகொண்டே ஆகவேண்டும்
ஒரு வித்தியாசமான சக்தி அவரிடம் இருக்கின்றது, அதுதான் உலகம் முழுக்க அவரை ரசிக்க வைக்கின்றது
மூன்றுமுகம், நெற்றிக்கண், மூன்றுமுடிச்சி என தூள்பறத்திய அந்த வில்லன் ரஜினியினை எந்திரன் சிட்டியாக மீட்டெடுத்தவர் சங்கர்,
அப்படத்தின் வெற்றிக்கு சிட்டி பாத்திரமே காரணம்
“மை நேம் இஸ் பில்லா..” என ரஜினி மாடிபடியில் இருந்து இறங்கும் காட்சி இன்றும் கண்களில் நிற்கின்றது, இடையில் அஜித் வந்து ஐம் பில்லா எனும் பொழுது “ச்ச்சீ போ..” என்றுதான் தோன்றியது
அப்படிபட்ட ஸ்டைலான, கெத்தான ரஜினிதான் தமிழகம் விரும்புவது
அந்த ரஜினியினை புரட்சியாளனாக, தத்துவம் பேசுபவனாக ஒருநாளும் தமிழகம் விரும்பியதில்லை, “நாட்டுகொரு நல்லவன்” எனும் தோல்விபடம் அதை அன்றே சொல்லிற்று
இப்பொழுது ரஜினிக்கு வயதாயிற்று சிகிச்சை அது இது என பறக்கின்றார், அவரின் உண்மையான ரசிகனுக்கு அது ஒரு அச்சத்தை கொடுக்கின்றது
அப்படிபட்ட ரஜினியினை பெரும் எதிர்ப்பார்ப்புடன் காண திரைக்கு சென்றால், மகா கொடுமையான கோலத்தில் ஆவணபட ரேஞ்சில் வைத்தால் யாருக்கு கோபம் வராது
படம் பார்க்க செல்பவர்கள் ரஜினிக்காக சென்றார்களே அன்றி, ரஞ்சித்தின் புரட்சி கதையினை கேட்கவா சென்றார்கள்?
அதை ஏன் நாங்கள் காசுகொடுத்து பார்க்க வேண்டும்
ரஜினி எனும் அற்புத நடிகனின் படத்தை கொன்றுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் சொன்னோமே அன்றி, ரஞ்சித் மேல் எமக்கு என்ன கோபம்?
புரட்சி, புண்ணாக்கு , தலித்தியம் பேச ஆயிரம் இடங்கள் உண்டு, இன்னும் ஏகபட்ட நடிகர்கள் கோடம்பாக்கத்தில் சுற்றுகின்றார்கள், அவர்களை வைத்து எத்தனை படமும் எடுக்கட்டும் எவன் பார்க்க போகின்றான்
உண்மையான திரை ரசிகனுக்கு ரஜினி எனும் வசீகரமிக்க நடிகரின் படத்தை நாசபடுத்தினால் கோபம் வரத்தான் செய்யும்
எமக்கு வந்தது, சொல்லிவிட்டோம்
வாயில் எதையோ வைத்து பொத்திகொண்டிருக்க நாம் என்ன தமிழக பாஜகவினரா? இல்லை இந்து முண்ணணியா இல்லை சிவசேனாவா
இல்லை ஆளாளுக்கு தாராவி என் கோட்டை என சொல்வதை கேட்டுகொண்டிருக்க மும்பை தாராவிக்காரனா?
ரஜினி எனும் மாயக்காரனின் படத்தை பார்க்கசென்று ஏமாந்த ஒரு சராசரி ரசிகன் அவ்வளவுதான்., அதில் கோபம் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்
போங்கடா டேய்
ரஜினிக்கு அரசியல் தேவையே இல்லை என்பதை ஆரம்பத்திலே சொல்லிக்கொண்டிருக்கின்றோம், சுயநலவாதிகள் அவர் அரசியலுக்கு வந்தால் 4 காசு தேற்றலாம் என்பவர்கள் அவரை தூண்டிவிடலாம்
ஆனால் நல்ல ரசிகன் அவருக்கு அரசியல் வேண்டாம் என்பான், அவரை நல்ல நடிகனாக திரையில் எதிர்ப்பார்ப்பான், அதுவும் அந்த இமேஜுக்குரிய ரஜினியினை எதிர்ப்பார்ப்பான், நாங்கள் அப்படித்தான் பார்த்துகொண்டிருக்கின்றோம்
அந்த அற்புத நடிகன் ரஜினியினை விட்டுகொடுக்கவே முடியாது
வைரக்கல்லை கீரிடத்தில் வைக்க வேண்டுமே தவிர காகத்தையும் நாயினையும் விரட்ட எறிய கூடாது
ரஜினி சிலை வடிக்க வேண்டிய அற்புத கல், அதில் அழகிய சிலை வடிக்கலாம், அற்புத கட்டங்களை செய்யலாம், தாஜ்மகால் போல மின்ன வைக்கலாம்
அதில் ஒருவன் அம்மி செய்வேன் என வந்தால் விடமுடியுமா? ரஞ்சித் என்பவர் அதனைத்தான் செய்தான் , அதை எந்த நல்ல ரசிகன் திட்டாமல் இருக்க முடியும்???
உண்மையான ரஜினி அனுதாபிக்கு கோபம் வரும், எனக்கு வந்தது அவ்வளவுதான்.
இன்று காலாவிற்காக ரஞ்சித்தை நாம் சாடியதும் நம்மை கரித்துகொட்டி நீ சாதிவெறியன், நீ வஞ்சகம் பிடித்தவன் என சாபமிட்டுகொண்டிருப்பவன் யாரென்றால்
பூரா பயலும் முன்பு முத்துராமலிங்க தேவரின் சில நடவடிக்கை பற்றி சர்ச்சையாக சொன்னபொழுது ஓடிவந்த பயதான், அண்ணே நீங்க தைரியசாலி, நியாஸ்தன்னு ன்னு கண்ணீர் விட்டபயலுகதான்
அம்பேத்கரை பற்றி எழுதியபொழுது ஓடிவந்து சூப்பர்னு சொன்னபயலுகதான்
இன்று ரஞ்சித் என சொன்னவுடன் உனக்கு சாதிவெறி என சொல்லிகொண்டே திட்டிகொண்டே இருக்கின்றான்
சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல, இந்த பயலுகளா?