சாப்பாடு ஒன்றே பிரதானம்..
அக்காலத்தில் பிராமணர் ஹோட்டலில் மற்றவர் சாப்பிட அனுமதிக்கமாட்டானாம், இதை பெரியார் மாற்றினாராம்
பிராமணன் இது சுத்த சைவ உணவு கிடைக்குமிடம் என அவனை போன்றவருக்காக நடத்தும் ரெஸ்டாரண்டில் இவர்களுக்கு என்ன வேலை?
அவன் இவர்களின் முனியாண்டி விலாஸ் பக்கம் வந்தானா? இல்லை செட்டிநாட்டு உணவகம் பக்கம் வந்து சண்டையிட்டானா?
அசைவ உணவு எங்கும் எப்பொழுதும் கிடைக்கும், சைவ உணவும் அதற்குரிய அதாவது அவர்கள் சம்பிரதாயத்துகுரிய உணவு கிடைப்பது சிரமம், இதனால் பிராமண ஹோட்டல்களில் கெடுபிடி இருந்தது
இஸ்லாமியர் ஹலால் முறைப்படி அறுக்கா விலங்குகறி இருக்கும் உணவகத்துக்கு செல்லமாட்டார்கள், அது போல பிராமணருக்கும் சில சம்பிரதாயங்கள் இருந்தன
அவன் சம்பிரதாயத்துக்கு அவன் தன் நம்பிக்கையினை காக்க வைத்திருக்கும் வெகுசில உணவங்களில் சென்று ஏ பார்ப்பானே எனக்கு காபி தோசை தரமாட்டாயா? என வம்பு செய்வது திராவிட புரட்சி
இவர்கள் புகுந்து உண்ண ஆயிரம் கடைகள் இருந்தன, ஆனால் பிராமணனுக்கு அவனின் கடை மட்டுமே அடைக்கலமாயிருந்தது, அங்கு சென்று கலகம் செய்வது என்ன நியாயம்?
சரி இந்த பெரியார் கோஷ்டியில் ஏதாவது சுத்த சைவமாக இருந்திருகின்றாதா என்றால் இல்லை எல்லாம் பறப்பது முதல் நீந்துவது வரை உள்ளே தள்ளும் கோஷ்டியாக இருந்திருக்கின்றது, பின் இவர்கள் அன்று பிராமணன் ரெஸ்டாரண்டில் சென்று வம்பு செய்தது வீண் அரசியல் அன்றி வேறு என்ன?
பெரியாரும் அவரின் அடிபொடிகளும் அக்காலத்து சைமன் போலவே இருந்திருக்கின்றன..
சாப்பாடு ஒன்றே பிரதானம்..