சாமியின் தாக்குதல்கள் இனி அதிகமாகும் போல் தெரிகின்றது
சுப்பிரமணியன் சாமி என்பவருக்கு எப்படியாவது அமைச்சர் ஆகிவிட வேண்டும் என கடும் ஆர்வம்
முதலில் ஜனதா ஆட்சியிலும் கூட்டணி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார் பின்பு யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை
காங்கிரஸ் அவரை சேர்க்காது அவருக்கான ஒரே இடம் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை
பாஜக இவர் இந்து அபிமானி என்றாலும் இவரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் காரணம் மர்மமான பின்னணி கொண்டவர் சாமி, பல நாட்டு தொடர்பு அதிகம், விசிட்டிங் புரபசர் எனும் போர்வையில் பல நாடுகளுக்கு செல்வதும் சில நபர்களை அவர் சந்திப்பதும் இந்திய கண்களுக்கு சரியாக படவில்லை
இதனால் அவர் இந்துத்வா மட்டும் பேசட்டும் என வைத்துவிட்டார்கள்
சாமியோ அமைச்சராக என்னவெல்லாமோ செய்தார் வாஜ்பாய் அரசில் செய்தார் மன்மோகன் அரசில் செய்தார்
தன்னை மத்திய அமைச்சராக்காத ஜெயா மேலும் இன்னும் கலைஞர் மேலும் அவருக்கு கோபம் இருந்தது
தமிழ்நாட்டு வாரிசான என்னை மத்திய அமைச்சராக உதவாவிட்டால் நீங்கள் என்ன தமிழர்கள் என இருவர் மேலும் சரமாரி வழக்கு தொடுத்தார்
ஜெயா வழக்கிலும் கனிமொழி வழக்கிலும் சாமிக்கு முக்கிய பங்கு உண்டு அவர்தான் ஆணிவேர்
இன்னொரு தியரிபடி தமிழக கட்சிகளை அடக்கிவைக்க ஒரு டெல்லி சக்தி பயன்படுத்தும் முகமூடி சாமி என்பதும் உண்டு
அப்படிபட்ட சாமிக்கு இப்பொழுதும் பாஜக அமைச்சரவையில் இடமில்லை என்பது கடும் கோபம், முதல் முறைதான் கொடுக்கவில்லை இம்முறையும் இல்லை என்றால் எப்படி இவ்வளவுக்கும் எவ்வளவு பெரும் அறிவாளிநான் என கடுப்பில் அலைந்தார் சாமி
பாரிகர், சுஷ்மா, ஜெட்லி எனும் ஜாம்பவான்கள் இல்லா நிலையில் தனக்கு வாய்ப்ப்பு உண்டு என மனமார நம்பினார் அது நடக்கவில்லை
தமிழச்சியான நிர்மலா தமிழரான ஜெய்சங்கர் ஆகியோர் இருக்கும் அமைச்சரவையில் தமிழனான தனக்கு இடமில்லையா இவ்வளவுக்கும் நானே சீனியர் என கொதிக்கும் சாமி இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்துவிட்டார்
வரும் காலங்களில் அவர் அதிகம் பேசுவார் என்பார்கள், அது போல மகா மர்மமான ஆசாமி அவர்
உலகில் இருந்து எந்த ஆவணத்தையும் இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த அவரால் பெறமுடியும், அந்த அளவு அவருக்கு பின்னணி சக்தி உண்டு
இந்த அரசுமேல் பெரும் மர்மமோ இல்லை ஊழல் பின்னணியோ இல்லை என்பதால் பல்லை கடித்துகொண்டிருக்கின்றார் சாமி என்பதுதான் நிஜம்
ஆம் தனக்கு அமைச்சர் பதவி இல்லை என்றால் எந்த அரசையும் விடாத சாமி இந்த அரசு முன் கையினை பிசைகின்றார்
எனினும் சாமியின் தாக்குதல்கள் இனி அதிகமாகும் போல் தெரிகின்றது, இனி அடிக்கடி பேசுவார் என்கின்றார்கள்
பேசாமல் ஒரு டம்மி பதவியினை கொடுத்து அவரை அமைச்சராக்கி வாயினை மூடிவிடலாமா இல்லை சிக்கல் மிகுந்த மாநிலத்துக்கு ஆளுநராக மாற்றிவிடலாமா இல்லை ஆப்கன் போன்ற நாடுகளுக்கு தூதராக அனுப்பி கொல்லலாமா என்ற அளவில் பாஜக சிந்தித்துகொண்டிருக்கலாம் என்கின்றன செய்திகள்