சாமி மறுபடி இந்தியா வருவார் என்பது மட்டும் பொய்..

நித்திசாமி கோஷ்டி அதாவது நித்திசாமி அல்ல ஆனால் அவரின் சீட கோடிகள், சாமி தனிநாடு எல்லாம் அமைக்கவில்லை அவர் சொல்வது எல்லைகளற்ற ஆன்மீக உலகம், இந்த இணையம் போன்ற ஒரு உலகம் அதைத்தான் அமைக்க விரும்பி கைலாசா என பெயரிட்டிருக்கின்றார், மற்றபடி பரப்பபடுவது பொய்தகவல் என சொல்லிகொண்டிருக்கின்றது

ஒருவேளை சாமி நாடு அடைந்தது பொய்யாக இருக்கலாம் சாமியின் எதிர்தரப்பு கட்டிவிடும் கதையாக இருக்கலாம் என்றாலும் சாமி ஐநாவுக்கு கடிதம் எழுதினார் என அடுத்த செய்தி வருவது இன்னொரு பரபரப்பு

கடிதத்தை சாமி எழுதவில்லை என சாமியின் பீடாதிபதிகள் மறுக்கின்றார்கள், எதிர்தரப்பு எழுதினார் என்கின்றார்கள்

ஆனால் கடிததின் படமோ, கடித வரிகளோ, சாமி கையெழுத்து கொண்ட காகித படமோ இன்னும் காட்டபடவில்லை என்பது குறிப்பிடதக்கது

ஆக சாமி ஏதோ ஒரு தீவில் தங்கியிருப்பது நிஜம், ஆனால் தனிநாடு என்பதெல்லாம் இல்லை அது நடக்காது என்பது அவருக்கும் அவர் சீட கோடிகளுக்கும் தெரிந்திருக்கின்றது என்பதும் நிஜம்

ஆனால் சாமி மறுபடி இந்தியா வருவார் என்பது மட்டும் பொய்..