சிக்கிமில் என்ன நடந்தது?

சிக்கிமில் என்ன நடந்தது என பலர் கேட்கின்றார்கள், நடந்தது இதுதான்
இந்தியா பாகிஸ்தானுக்கு ராட்கிளிப் கோடுபோல, இந்தியா சீனா இடையே மக்மோகன் எல்லைகோடு ஒன்று உண்டு, ஆனால் சீனா ஒருபோதும் மதித்ததில்லை
அதுவும் மாவோ வந்தபின் கோட்டையே அழித்துவிட்டார்கள்
திபெத் தவிர, சிக்கிம் பூட்டான் என பல நாடுகளை அபகரிக்கும் திட்டம் சீனாவிற்கு இருந்தது, சிக்கிமை முடக்கினால் அருணாசல பிரதேசத்தை முடக்கலாம் எனும் வியூகமும் இருந்தது
நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் அரணாக அன்று இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்தது, இப்போது இல்லை
அன்று சிக்கிமில் அரசர் ஆண்டுகொண்டிருந்தார், அவர் பெயர் சோக்யால் இவர் மனைவி அமெரிக்க பெண்மணி
இந்த அமெரிக்க பெண்மணிக்கு இந்தியாவினை அறவே பிடிக்காது, சிக்கிமின் ராணியாக தானே ஆளவேண்டும் எந்நாடும் தலையிட கூடாது என நினைத்துகொண்டிருந்தார்
அமெரிக்கா தன் படைகளை அனுப்பவும், சீனா சிக்கிம் எல்லையில் கொக்குபோல் காத்திருந்த காலம் அது, சிறு சிக்கல் என்றாலும் உள்ளே செல்ல காத்திருந்தார்கள்
அப்பொழுது ராவின் ஏஜெண்டாக தானு என்பவர் சிக்கிமிற்கு அனுப்பபட்டார்
அரசி இந்திய எதிரி, சிறு கலகம் வந்தாலும் சீனபடைகள் புகுந்துவிடும் அபாயம். இருக்கும் ஒரே வாய்ப்பு நேபாளிகள்
ஆம் அரசவம்சம் வேறு, மக்கள் வம்சம் எல்லாம் நேப்பாளிகள்
இந்த நேப்பாளிகளை வைத்துத்தான் ஆட வேண்டும், ஆனால் சிறு கலவரம் என்றாலும் அமெரிக்கா முதல் சீனா வரை உள்ளே பாயலாம்
இந்த சிக்கலான பிரச்சினையினைத்தான் உளவாளி தானு வெற்றிகரமாக கையாண்டு, அரசர் வேண்டுமா ? ஜனநாயகம் வேண்டுமா? எனும் கோரிக்கையினை சாதுர்யமாக இந்தியா வேண்டுமா? வேண்டாமா? என மாற்றி பாட வைத்தார்
சீனாவின் கொடுமைகளை திபெத்தில் கண்ட சிக்கிம் மக்கள் சீனா பக்கம் செல்லாமல் இருப்பதில் இந்திய உளவுதுறை மகத்தான வெற்றி பெற்றது, சீனா சிக்கிமில் வரமுடியா சூழல் இதுதான்
பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான எல்லா வாசல்களையும் மூடி இந்தியா மட்டுமே சிக்கிமிற்கு பொருத்தம் என சூழ்நிலையினை உருவாக்கி சிறு சேதாரமின்றி சிக்கிமை இந்தியாவோடு அவர்தான் இணைத்தார்
இதற்கு வழிகாட்டியாவர் இந்திரா
இதுபோக இன்னும் பல சாகசங்கள் நிகழ்த்தபட்டன என்றாலும் ஓரளவு வெளிவந்த தகவல் இதுதான்
இப்படித்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைந்தது
இதில் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், ஈழத்தை வங்கம் போல் இந்திரா தனித்துகொடுக்க விரும்பினாரா? இல்லை இந்தியாவோடு இணைக்க விரும்பினாரா?
ஈழம்பற்றி இந்திரா உறுதியாக சொல்லவில்லை ஆனால் சென்னையில் பிடிபட்ட பிரபாகரனை இலங்கை கேட்டபொழுது அவர் இப்படித்தான் சொன்னார்
“தனி ஈழத்தை நான் ஆதரிக்கவில்லை ஆனால் பிரபாகரன் எனும் பையனை கொடுக்க முடியாது”
அந்த பிரபாகரன் தன் மகனை கொல்வான் என கனவிலும் நினைக்கவில்லை இந்திரா
ஏன் ஈழம் சிக்கலானது என்றால் இரண்டே விஷயம் , இல்லை ஒரே விஷயம்
இங்கு ஏற்கனவே திராவிட நாடு கேட்ட பகுதி தமிழகம், அங்கே தனிநாடு உருவானால் இங்கே நிச்சயம் கொந்தளிப்பர்
அக்கருத்து வந்தபொழுது கலைஞர் ஈழம் அமைந்தால் திமுக அரசியலை விட்டு வெளியேறும் என்றெல்லாம் சொல்லிபார்த்தார், திமுக இல்லை என்றால் திக வராதா? என அக்கோரிக்கை நிராகரிக்கபட்டது
இன்றே அகண்ட ஈழம் அல்லது அகண்ட தமிழ்நாடு கேட்டோர் அன்றே இருந்தனர் இதுதான் முதல் சிக்கல்
இன்னொன்று ஈழத்தை அப்படியே பிரித்து சிக்கிம் போல இந்தியாவோடு இணைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருந்தது
ஆனால் சிங்களனிடமிருந்து விடுதலைபெற்று இந்தியாவிடம் அடிமையாவதா என சீறியது யாழ்பாணம், குறிப்பாக புலிகள்
இப்படி இழுத்தால் இங்கு எரியும், அப்படி இழுத்தால் அவர்கள் தயாரில்லை
இதனால்தான் நீங்கள் சிங்கள நாட்டில் தனி மாநிலமாய் வாழுங்கள் இதை தவிர வேறு தீர்வு இல்லை ஆனால் அது எங்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருக்கும் என்றுதான் அமைதிபடை அனுப்பபட்டது
அதோடு புலிகள் வம்புசண்டைக்கு போக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது
ஈழத்தை முதலில் கெடுத்தது தமிழக திராவிட கட்சிகள், வங்கம் உருவானாலும் கல்கத்த்த அமைதி ஆனால் ஈழம் அமைந்தால் நிச்சயம் தமிழகம் அமைதியாக இருக்காது
இரண்டாவது ஈழ அமைதியினை கெடுத்தது புலிகள், சாட்சாத் அவர்கள்தான். ஒரு முடிவுக்கும் வரமாட்டோம் நாடு அடைந்து நாங்களே ஆள்வோம் என செய்யகூடாத காரியமெல்லாம் செய்து நாசமாக்கினார்கள்
இந்திரா இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்காது, ஆனால் மகா உறுதியான நடவடிக்கை மூலம் பல சர்ச்சைகளை கடந்து அழிவுகளை குறைத்திருப்பார்
ஈழசிக்கலின் மூலம் இதுதான், ஆனால் சிலர் பங்குனி 17, இந்தியா இனம் அழித்தது, கலைஞர் ஈழம் கொன்றான் என சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களை திருத்தவே முடியாது
இந்நாட்டின் வடக்கு மேற்கு எல்லை போலவே தெற்கு எல்லையிலும் அமைதி நிலவ வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது , இத்தேசம் அதனைத்தான் செய்தது