சிதறல்கள்
தன் சமூக வலைதள ரசிகர்களை சந்திக்கின்றார் தனுஷ்
குஷ்புவிற்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள், தலைவி என்றாவது இப்படி கிளம்பினாரா?
இல்லை அவர் வரவே மாட்டார், காரணம் நிறைகுடம் தளும்பாது
கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார்
இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம்
இடையில் அடிக்கடி இமயமலை வேறு
பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம்
————————————————————————————————————————————-
பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை – இம்ரான் கான்
பாகிஸ்தான் வளர்ததை போல வேறு எந்தநாடும் பயங்கரவாதத்தை வளர்க்கவில்லை என்பதை சொல்ல மறந்துவிட்டார்
முன்பு கிரிக்கெட்டில் பந்தை முறைகேடாக சிதைத்து சிக்கலில் சிக்கியவர் இம்ரான்கான், அதே குறுக்கு புத்தி அரசியலுக்கும் வந்துவிட்டதுதான் சோகம்.
திமுக இனி சுத்தமாக உருப்படாது, பிரிவினை வாதகட்சி என்ற முத்திரையினை அண்ணா கலைத்தார், கலைஞர் காப்பாற்றினார்
இப்பொழுது மறுபடியும் பிரிவினைவாதத்திற்கு வருகின்றது திமுக
மிஸ்டர் ஸ்டாலின் இலங்கை குடிமக்களான 4 கொலைகாரர்கள் மேல் உங்களுக்கு என்ன அக்கறை?
ராஜிவ் கொலையில் திமுக எதிர்கொண்ட சிக்கல் எல்லாம் மறந்ததா? ஜெயின் கமிஷன் மறந்ததா?
திமுகவினை அழிக்க இனி எதிர்கட்சிகள் எதற்கு?
அந்நியநாட்டு தீவிரவாதிகள் 4 பேரை ஆதரிக்கும், உள்நாட்டு தேசதுரோகி 3 பேரை ஆதரிக்கும் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கின்றோம்
“தேசவிரோதி” முக ஸ்டாலின் ஒழிக என்ற சத்தம் வருவதற்குள் ஸ்டாலின் திருந்தட்டும்
“குட்கா” ஊழல் தொடர்பாக பல பரபரப்பு தகவல்கள்
இந்தியினை எதிர்த்து 100 பேர் செத்த தமிழகத்தில் இப்பொழுது ஊழல் கூட இந்தி பெயரில்தான் நடக்கின்றது
——————————————————————————————————————————————