சிதறல்கள்
மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது
மணி நிச்சயம் அர்ஜூனன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் தேரோட்டிகள் வசனகர்த்தாக்களும் கதை விவாதக்காரர்களும் என்பதுதான் விஷயம்
அப்படி பாலகுமாரன், சுஜாதா என இருந்தவரை மணியால் நினைத்த குறியினை அடிக்க முடிந்தது, காரணம் தேரோட்டிகள் அப்படி மிக நுணுக்கமான ரசனையாளர்களாக அவருககு உதவினர்
ஆனால் அவர்கள் இல்லா மணி தடுமாற ஆரம்பித்தார், அது ராவணா, கடல், ஒகே கண்மணி இந்த படுமொக்கையான காற்றுவெளியிடை வரை தெரிந்தது
நல்ல தேரோட்டி கிடைக்காவிட்டால் அர்ஜூனனே அம்பேல் எனும்பொழுது மணி என்ன செய்வார்?
இப்பொழுது தேறியிருக்கின்றாரா? நல்ல தேரோட்டியினை கண்டுபிடித்திருகின்றாரா என்பது இனிதான் தெரியும்
சிம்பு படத்தில் இருப்பதால் முடிவு இப்பொழுதே தெரிகின்றது
எனினும் செக்க சிவந்த நிலாவான குஷ்பு இல்லாமல் எப்படி “செக்க சிவந்த வானம்” ஜொலிக்கும் என்பதுதான் மிகபெரும் கேள்வி.
செப்டம்பர் 11, 2001ல் உலகமே அதிர்ந்திருந்தது, அன்றுதான் இரட்டை மாடி கட்டடம் அமெரிக்காவில் தகர்க்கபட்டது
பத்தே நாளில் மிகபெரும் அதிச்சி உலகை தாக்கியது, குறிப்பாக தமிழகம் அதிர்ந்து கிடந்தது
ஆம், பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக இன்றுதான் பதவி ஏற்றார். நாஸ்டர்டாமசால் கூட கணிக்கமுடியாத நாடகமெல்லாம் தமிழ்நாட்டில் அரங்கேறும் என்பதை உலகம் கண்டு கொண்டது.
எது? “அர்ச்சனா” விருதா? இந்த பாலுமகேந்திரா படங்களில் எல்லாம் வருமே அந்த பெண் பெயரில் விருதா?
முடியாது, முடியவே முடியாது. குஷ்பூ விருது கொடுத்துவிட்டு அர்ச்சனா விருது கொடுங்கள்