சிதறல்கள்

அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்_பரிசு பாரத பிரதமர் மோடி க்கு கொடுக்க வேண்டும் : தமிழிசை

உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கபட்ட மூன்றாம் நாடு என உலக ஆய்வு இந்தியாவினை சொல்கின்றது

ஈரானும் ,ஆப்கனும் முதல் இரண்டாம் இடமாம் இந்தியா மூன்றாம் இடமாம்

அப்படி இந்தியாவில் என்ன தீவிரவாதம் என்றால், ஆளும் கட்சியே மத தீவிரவாத கட்சி, அது மசூதி இடித்து, பலரை கொளுத்தி மாட்டை போற்றி மனிதரை கொன்று என பட்டியல் நீள்கின்றது

ஆக இந்தியா காவி தீவிரவாதத்தால் மோடி ஆட்சியில் பாதிக்கபட்டுள்ளது என உலகமே ஒப்புகொண்ட நிலையில் மோடிக்கு நோபல் வேண்டுமாம், அக்கா கேட்கின்றார்

அப்படியே அக்காவிற்கு நெல்சன் மண்டேலாவிற்கான அமைதி விருதும் கேட்பார் போல…


பாருங்க பங்கு, அந்த ஆள் உயர்நீதிமன்றமே தன்னை ஒன்றும் செய்ய‌ முடியாது என சவால் விடுங்கின்றார், நாம் தான் அவரை காப்பாற்றுகின்றோம் என சொல்பவன் எல்லாம் இனி என்ன சொல்ல முடியும்? நமக்கு நீதிமன்றம் மேலுமா அதிகாரம்? சொல்லுங்க பார்ப்போம்

ஆமாம் பங்கு, அவர் லெவலே வேற, இனி எவனாவது பத்திரிகைகாரன் வரட்டும். உயர்நீதிமன்றத்தையே மதிக்காத இவரை நாங்கள் என்ன செய்யமுடியும் என நாக்கை பிடுங்கிறமாதிரி கேட்டுவிடலாம்”

Image may contain: 1 person, text
Image may contain: 7 people, people smiling, people standing and wedding
—————————————————————————————————————————————–

அய்யா, வடக்கத்தியர்களுக்கு ரசனையோ இல்லை நகைச்சுவை உணர்வோ கொஞ்சமும் இல்லை அவர்கள் கலாச்சாரமே வேறு

உயிரோடு எரித்தல், ஊரே சேர்ந்து கொல்லுதல் என வித்தியாசமான கூட்டம் அது

உங்கள் அழிச்சாட்டியத்திற்கு புத்தர் சிலைக்கே கோபம் வரும், இவர்கள் சும்மா இருப்பார்களா?

பிடித்து அடித்தால் கூட சிக்கல் இல்லை, ஆனால் உங்கள் தாடியினை ஷேவ் செய்துவிட்டால் என்ன ஆகும்?

தேசிய அரசியலுக்கு அப்படியே சிம்புவினையும் அழைத்து செல்லும்படி கேட்டுகொள்கின்றோம்

Image may contain: 1 person, smiling, text
—————————————————————————————————————————————–

சிக்கிமில் விமான நிலையம் அமைத்திருப்பது வரவேற்கதக்க விஷயம். சிக்கிம் என்பது இந்தியாவினையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதி

அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டியது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை, மிகபெரும் விமான நிலையம் அமைக்கபட்டே தீரவேண்டும், சீன யுத்தத்தில் அப்படி ஒரு நிலையம் இல்லாமல் போனதும் நம் பலவீனம்

நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம், ஆனால் பாஜக தான் முதன் முதலில் சிக்கிமை ராணுவரீதியாக அணுகியது என்பதெல்லாம் நாம் தமிழர் மட்டும் நம்புவார்கள்

சிக்கிம் 1975 வரை தனிநாடு, பூட்டான் போல இருந்தது. அது இந்தியாவிற்கா, சீனாவிற்கா இல்லை அமெரிக்க அடிமையா என பல கோணங்கள் இருந்தன, பல கழுகுகள் வட்டமிட்டன‌

சிக்கிமின் மன்னருக்கொ அவரின் அமெரிக்க மனைவிக்கோ இந்தியாவோடு இணைவதில் விருப்பமில்லை, மக்களோ கம்யூனிச சீனா தங்களை விழுங்கிவிடுவதிலும் விருப்பமில்லை

இந்தியாவின் உளவு அமைப்பான ரா அட்டகாசமாக ஆடி சிக்கிமினை இந்தியாவோடு இணைத்தது, மிகபெரும் சரித்திரம் அது

அந்த சாதனைக்கு சொந்தக்காரர் நிச்சயம் இந்திரா, அதை யாரும் மறுக்கமுடியாது

ஆக ஆனையினை வாங்கியது இந்திரா, அதற்கான அங்குசத்தை மட்டும் வாங்கியது பாஜக‌

அதற்குத்தான் இத்தனை அழிச்சாட்டியம்

முன்பே சொன்னோம், 99 ரன் இருக்கும்பொழுது ஒருவன் அவுட்டாகிவிட்டான் என்றால் அடுத்து வருபவன் 1 ரன் அடித்துவிட்டு 100, 100 என கத்தினால் எப்படி இருக்கும்?

பாஜக அதைத்தான் செய்கின்றது, அவர்கள் ஆட்சியில் எல்லா மாநிலங்களிலும் விமான நிலையம் இருக்கின்றதாம்

சரி இதற்குமுன்னால் அத்தனை விமான நிலையங்களை கட்டியது யாரென கேட்டால் ஒரு மாதிரி சிரித்துகொண்டே ஓடிவிடுகின்றார்கள்

இவ்வளவு பெரும் பொய்யினை சொல்கின்றோமே என்ற அறிவோ, கூச்சமோ, அச்சமோ, அவமான உணர்வோ கொஞ்சமும் இல்லை

அதெல்லாம் இருந்தால் அவர்கள் பாஜகவினராக இருக்கவே முடியாது

Image may contain: 1 person, text
—————————————————————————————————————————————–

ஈழத்தில் தமிழரை கொன்று குவித்தது காங்கிரஸ் திமுக என சொல்லிகொண்டே இருகின்றார் தமிழிசை

ஸ்டாலின் தமிழிசைக்கு வரலாறு தெரியவில்லை என்றவுடன் எனக்கா? எனக்கா? என சந்திரமுகி ஜோதிகாவாக சீறுகின்றார்

அக்கா, ஈழதமிழருக்கு காங்கிரஸ் எவ்வளவு செய்தது என்பதை உங்கள் தந்தை குமரிஅனந்தனிடம் கேட்டாலே தெரிந்துவிட போகின்றது, அதை செய்யுங்கள் அக்கா

ஒரே ஒரு கேள்விதான் அக்கா,

ஈழத்தில் தமிழர் கொல்லபடும்பொழுது காங்கிரஸ் திமுக தடுக்கவில்லை என்கின்றீர்கள், தூத்துகுடியில் 13 பேர் கொல்லபட்டது யார் ஆட்சி அக்கா?

அதை கண்டித்து உங்கள் கட்சியோ, மோடியோ வாய்திறந்தீர்களா?

உள்நாட்டில் சொந்த மக்களை சுட்டு கொன்றதை எல்லாம் மறைத்துவிட்டு கடல் கடந்த அடுத்த நாட்டு மக்களுக்காக கவலைபடும் மதர்ர் தெரசவா நீர்?

உங்களை பார்த்தால் அப்படி எல்லாம் தெரியவே இல்லை