சிதறல்கள்
கலைஞர் டிவியில் உத்தமர் காந்தி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன
காந்தி தேசியவாதி, இவர்கள் திராவிடவாதிகள். அவர் சாகும்பொழுதும் ஹேராம் என சொல்லிகொண்டிருந்த ஆன்மிகவாதி, இவர்களோ ராமர் படத்தை எல்லாம் அடித்த பகுத்தறிவுவாதிகள்
பின் எப்படி காந்தி இவர்களுக்கு “உத்தமர் காந்தி” ஆனாரோ தெரியவில்லை
[ October 2, 2018 ]
============================================================================
ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம்
நிச்சயம் பெருமைக்குரிய விஷயம், ரகுராம் ராஜனுக்கு பின் அந்த இடத்தை அடைபவர் கீதா, இந்திய பெண்களில் முதல் பெண் அவர்தான்
ஆனால் நமது ஊடகங்களோ “பிக்பாஸ் ரித்விகா டோய்..” என ஊளையிட்டு கொண்டிருக்கின்றது என்பதுதான் பரிதாபம் [ October 2, 2018 ]
============================================================================
ஈழதமிழரின் ரத்தத்தில் இங்கு யார் அரசியல் ஆதாயம் பெறுவது என தமிழகத்திலே முட்டி மோதினால், இலங்கை எப்படி இருக்கும்?
அவர்களுக்கு அது தீவிரவாத ஒழிப்பு. யார் புலிகளை தைரியமாக ஒழித்தது? என அந்த பெருமையினை தக்க வைக்க படாதபாடு படுகின்றார்கள்
முதலில் பொன்சேகாவும் ராஜபக்சேவும் மோதினார்கள், பின் ராஜபக்சே நானே புலியினை துரத்தி துரத்தி மண்டையில் போட்டவன் என சொல்லிகொண்டார்
பொன்சேகாவோ கோத்தபாயா, மகிந்தா இருவரும் கடைசி வாரத்தில் இலங்கையிலே கிடையாது, நானே புலிகளுக்கு அஞ்சாமல் அவர்களை கொன்றேன் என்றார்
இதில் பொன்சேகா சிறை செல்லும் வரை சிக்கல் வந்தது
இப்பொழுது இலங்கை அதிபர் சிறிசேனா இந்த கோதாவில் குதிக்கின்றார். புலிகளை ஒழித்தது நானே என்கின்றார்
எப்படி?
முள்ளிவாய்க்கால் நடக்கும்பொழுது இவர்தான் பாதுகாப்புதுறை அமைச்சர், கொழும்பில் புலிகள் எப்பொழுதும் தாக்குதல் நடத்தலாம் எனும் நிலையில் ராஜபக்சே ஜோர்டானுக்கு பறந்தார், கோத்தபாயா கடலுக்குள் பாய்ந்தார்
யுத்தநடத்தல் பாதுகாப்பு அமைச்சர் சிரீசேனா வசமே இருந்தது, அதைத்தான் இப்பொழுது சொல்லி “நானே சகலகலா வல்லவன், ராஜபக்சே ஒன்லி ஆக்டிங்” என பகிரங்கமாக சொல்கின்றார்
அத்தோடு விட்டாரா? புலிகள் சென்னையில் இருந்தும் வன்னியில் இருந்தும் கொழும்பினை விமானம் மூலம் தகர்க்கும் திட்டத்தில் இருந்தனர் , நானே அதை தைரியமாக எதிர்கொண்டேன் என்கின்றார்
ஏன் சொல்லவேண்டும் என்றால் இலங்கை பொருளாதாரம் இந்தியாவினை விட மோசம், பின் எதை சொல்லி தேர்தலை சந்திப்பது
இதில் மறைமுகமாக சிறீசேனா சொல்வது என்னவென்றால் முள்ளிவாய்க்கால் படுகொலையினை நடத்தியது நானே, ராஜபக்சேக்கு பங்கு இல்லை என்பது
இந்த சிரிசேனாவிடம் தான் அதிமுக அமைச்சர்கள் சென்று பல்லைகாட்டி பரிசு பெற்று வந்தனர் என்பது சமீபத்திய செய்தி
சிரீசேனா விவகாரம் இன்னும் தமிழகத்து ஈழ அழிச்சாட்டிய கும்பலுக்கு, குறிப்பாக அங்கிள் சைமனுக்கு தெரியாது போல
தெரிந்தால் என்னாகும், அந்த விமான விஷயத்தை பிடித்துகொள்வார், சென்னையில் இருந்து புலிகள் தாக்கும் ஆபத்து இருந்தது என்றால் போதாதா?
“ஆமாம், நான் அண்ணனை பார்க்க சென்றபொழுது வாடா நாம வான்புலி விமானத்தில் பறப்போம் என்றார், எப்படின்னே விமானமே இல்லையேன்னே, புலிடா இது இப்போ பாரு என சிரிச்சார்
டிராக்டர்ல இருந்து டயரை கழட்டுனாங்க, கண்டெய்னெர் ல இருந்து இரும்பு தகடை சைஸா வெட்டுனாங்க, தோட்டத்தில ஓடிகொண்டிருந்த ஆயில் மோட்டார் ஒன்னை கொண்டு பொருத்தினாங்க, கொஞ்ச நேரத்தில் விமானம் ரெடி. வாடா தம்பின்னார், நானும் ஓடி போய் ஏறிகிட்டேன், ரன்வே இல்லியண்ணே என்றேன் சிரிச்சார்
விமானத்தில் பறக்கும் போது சாப்பிட 6 வகை இறால், கணவாய் எல்லாம் இருந்தது,
திடீர்னு ஒரு அறிவிப்பு வான்புலி கிளம்புதுன்னு சொன்னாங்க, அவ்வளவுதான் தெரு எல்லாம் அமைதி அண்ணன் அப்படியே தெருவில ஓடி ரோட்டில ஓடி ஒரு குளத்தில ஓடி அப்படியே மேலே எழுப்பினார், நாங்க ஆஸ்திரேலியா வரை பறந்தோம், அவனுக நீங்க யாருண்ணு கேடானுக போடா ஓ..தா ன்னு சொன்ன்னேன் சுட்டானுக
ஆனா விமனாம் பல்டி எல்லாம் அடிச்சி அட்டகாசமா வந்துட்டு, ஆஸ்திரேலியாகாரனே பயந்துட்டான். இன்னுவரைக்கும் அவனுக்கு அது யாருண்ணு தெரியாது
மறுபடி வன்னிக்கு வந்தோம், 2 செகன்ட்ல எல்லாம் பிரிச்சாச்சி, டிரக்டர் கண்டெய்னர்னு எல்லாம் செட் ஆயிட்டு, விமான எந்திரம் தண்ணி மோட்டார் ஆயிட்டு
எப்படி அண்ணே இப்படி என அதிர்ச்சியாய் கேட்டேன், தம்பி சீவகசிந்தாமணி, ராமயணம் எல்லாம் விமானம் பற்றி சொன்னதை நீ படிக்கவில்லையா? இதெல்லாம் தமிழனுக்கு சாதாரணம் என்றார். அடுத்து விமான தயாரிப்பு பறத்தல் , மண்ணெண்ணயில் விமானத்தை இயக்குதல் போன்ற பயிற்சி எல்லாம் வழங்கினார்
இப்படி பயிற்சி அளிச்சிட்டு என்னிடம் சொன்னார், தம்பி தமிழகம் முழுக்க இப்படி விமானம் மாறுவேடத்தில் இருக்க வேண்டும், நான் சொல்லும்பொழுது நீ தயாராகி பறந்து வந்து கொழும்பை தகர்க்க வேண்டும்
நானும் 2008ல் தயாரானேன், எங்க ஊர்பக்கம் நான் பறந்தபொழுது பனையேறிட்டு இருந்த சிலர் பார்த்துட்டாங்க, விஷயம் கருணாநிதி காதுக்கு போயிட்டு
அவர் உடனே எல்லா விமான என்சினையும் பறிமுதல் செய்து அறிவாலயம் பக்கம் வச்சிருந்தார், மாமல்லபுரத்துக்கு வந்த சில பிரெஞ்ச்காரன்ட இந்த திமுககாரன் எல்லாம் அத வித்துட்டானுக
அந்த விமானம்தான் இப்பொழுது ரபேல் என இந்திய அரசு வாங்கியிருக்கின்றது என் உறவே, எப்படிபட்ட அநீதி இது , எப்படிபட்ட கொடுமை இது
நானும் என் அண்ணனும் அசால்ட்டா செய்த விமானம் இப்பொழுது டசால்ட் ரபேலாம்..
இத மாதிரி கேணத்தனம் ஏதாவது உண்டா என் சொந்தமே” [ October 3, 2018 ]
============================================================================
கலாநிதிமாறனின் இந்த நடவடிக்கை நிச்சயம் திமுகவின் நிம்மதியினை, திமுக அனுதாபிகளின் நிம்மதியினை எல்லாம் கேள்வி கேட்க தொடங்கிவிட்டது, கலாநிதிமாறன் திமுகவில் வைக்கபடும் கோடாரியின் காம்பா என்ற வகையில் எல்லாம் கேள்விகள் எழுகின்றன
கலைஞர் இறந்து 100 நாள் கூட ஆகவில்லை, அதற்குள் கலாநிதி மாறனின் இந்த நகர்வு நிச்சயம் சரி இல்லாதது
என்ன செய்தார் அன்னார்?
அவரின் தயாரிப்பான சர்க்கார் படத்திற்கு இசை வெளியீடாம், அந்த கருமத்திற்கொரு விழாவாம்
அதில் ஆளுக்கு முன்பாக போய் அமர்ந்துகொண்டார், பலரை பேச வைக்கின்றார், அவர்களோ விஜய் சர்க்காராக வேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் அதற்கு கலாநிதிமாறன் உதவ வேண்டும் என்பது போல ஏக இம்சைகள்
அவரோ சிரித்துகொண்டே பார்த்துகொண்டிருக்கின்றார், எதையும் தடுக்கவுமில்லை மறுக்கவுமில்லை
தளபதி விஜய் என கலாநிதிமாறனே சொன்னதெல்லாம் நிச்சயம் வன்மத்தின் வெளிப்பாடு.
சன்டிவி பெரும் ஊடகம் சந்தேகமில்லை ஆனால் அதன் அஸ்திவாரம் கலைஞரும் அவரின் திமுகவும் என்பதில் சந்தேகமில்லை
திமுகவின் ஆபத்து அழகிரி அல்ல , உண்மையான ஆபத்து வேறு என கலைஞர் முன்பே உணர்ந்து சில காட்சிகளை நடத்தி இருந்தார்
அது இப்பொழுது பட்டவர்த்தனமாக தெரிகின்றது
யாருக்கோ இந்த ஆடியோ ரிலீஸ் மூலம் சில செய்திகளை சொல்லியிருக்கின்றார் கலாநிதி, அல்லது கலாநிதி மூலம் யாரோ சொல்கின்றார்கள்
எந்த மாநிலம் ஆனால் என்ன? அதில் யார் ஆண்டால் என்ன? எந்த தொழிலதிபரும் தங்கள் பிடி இல்லா மத்திய அரசிடம் மண்டியிடாமல் இங்கு நீடிக்க முடியாது
மாறன் குழுமம் மட்டும் அதற்கு விதிவிலக்கு ஆக முடியுமா?
அழகிரி திமுகவின் ஆபத்து அல்லவே அல்ல, உண்மையான ஆபத்து இதோ கண்களை உருட்டி சிரித்தபடி கிளம்புகின்றது
[ October 3, 2018 ]
============================================================================
இந்த திருமுருகன் காந்தியினை சிறையில் உணவின்றி, உறக்கமின்றி, பாம்புகளை போட்டு எல்லாம் சித்திரவதை செய்கின்றார்கள் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை
ஆனானபட்ட கொலையாளி நளினியே கைதுசெய்யபடும் பொழுது 3 மாத கர்ப்பம், அவள் பாதுகாப்பாக பிரசவித்ததும் பிள்ளை வளர்ந்ததும் சிறையிலே
அப்படிபட்ட பரிவு நிறைந்தது சிறைத்துறை, பேரரிவாளன் இருக்கும் உருவமே இன்னொரு சாட்சி
நன்றாக ஈழதமிழர் பணத்தில் ஐரோப்பா நட்சத்திர ஹோட்டலில் உருண்டு புரண்டு புரட்சி செய்தவருக்கு, தமிழக சிறை நிச்சயம் அசகவுரியம்
அதற்காக ஈழதமிழரிடம் சொல்லி ஸ்பெஷல் சிறை எல்லாம் கட்ட முடியாது
திருமுருகன் நடத்துவது பெரும் நாடகமே அன்றி வேறல்ல..
[ October 3, 2018 ]
===========================================================================
கலைக்கு நிதி கொடுப்பதால் அவர் கலாநிதி : விஜய்
மிஸ்டர் விஜய் , அப்படியே அறிவுக்கு நிதி கொடுப்பதால் அவர் அறிவுநிதி என்றும், உதவிக்கு நிதி கொடுப்பதால் உதயநிதி என்றும் சொல்வீரா?
இந்த எல்லா நிதிக்கும் மூலம் கருணா நிதி , நிதிக்கு குறை இல்லா குடும்பத்தை உருவாக்கி வைத்தவர் அவர். அவரை எல்லோரும் மறந்தாயிற்று
[ October 3, 2018 ]
============================================================================
“இந்த கருணாஸ், விஜய் எல்லாம் தலைப்பு செய்தி ஆகும் அளவு நாடு போயிற்று, ஏம்பா அண்ணாதுரை எத்தனைமுறை சொன்னேன் கூத்தாடிகளை கட்சியில் சேர்க்காதே மாநிலம் நாடக கூடம் ஆகுமென்றேன், கேட்டாயா?
சம்பத்.. நான் பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய மாநிலம் கேட்கும் என்றோ, நான் விதைத்த விதை எல்லாம் முள்ளாக போகும் என்று கனவா கண்டேன்
என்னமோ போ அண்ணாதுரை, தமிழ்நாடு இப்படி சினிமாகாரனால நாசமா போனதுக்கு முதல் மற்றும் ஒரே காரணம் நீதான்.”
அரசியலுக்கு நடிகர்கள் வருவதை வரவேற்கின்றேன் : திருநாவுக்கரசர்
சொல்வது உண்மையானால் தலைவி குஷ்புவிற்கு வழிவிட்டு , தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியினை விட்டு இறங்கி ஓடும் பார்க்கலாம்…
[ October 3, 2018 ]
==========================================================================