சிதறல்கள்

சாதியினை வைத்து சம்பாதிப்பது என முடிவுசெய்துவிட்ட இயக்குநர் ரஞ்சித் என்பவர் ஒரு விஷயத்தை சொல்லி வாங்கி கட்டிகொண்டிருக்கின்றார்

அதாவது அன்னாரின் நீலம் புரொடக்ஷனின் “பரியேறும் பெருமாள்” படத்திற்கு தியேட்டர்கள் நிறைய இல்லையாம், சாதி ரீதியாக இவர் படத்தை தடுக்கின்றார்களாம்

இப்படி அன்னார் தன் புரட்சி மொழியினை சொல்ல, திரைப்பட உரிமையாளர் சங்கம் பொங்கிவிட்டது

“இந்த கபாலி, காலா எல்லாம் வரும்பொழுது எல்லா தியேட்டரும் சாதி பார்த்தா திறந்தோம்? அப்பொழுது எவ்வளவு சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் திணறின, அதெல்லாம் ஜாதி கொடுமையா?

சில படங்கள் ஸ்லோ பிக்‍ அப் ஆகும், இப்படம் அப்படி ஆனால் தியேட்டர்கள் வரும். எங்களுக்கு எந்த படம் மக்களை இழுக்குமோ அந்த படம்தான் வேண்டும் இல்லாவிட்டால் எப்படி சம்பாதிப்பது

செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் வந்திருக்கும்பொழுது, சிம்பு விஜய்சேதுபதி போன்றோர்களின் படங்கள் வரும்பொழுது தியேட்டர் அதிபர்கள் குறி எங்கு செல்லும்?

அதற்கு எவ்வளவு பணம் கட்டியிருப்போம், எங்கிருந்து எடுப்பது?

நாலு காசு சம்பாதிக்க தியேட்டர் வைத்திருக்கின்றோமா? இல்லை சாதி புரட்சி செய்ய வைத்திருக்கின்றோமா?” என மிக கடுமையான கேள்விகளை அவர்கள் கேட்டபின் ரஞ்சித் என்பவர் மகா சைலன்ட்

ஏம்பா ரஞ்சித், சாதிக்கொரு தியேட்டரா கட்டமுடியும்?

[ October 3, 2018 ]

============================================================================

தாமிரவருணி மஹா புஷ்கரம்: பக்தர்கள் நீராட கட்டுப்பாடுகள் கூடாது: தமிழிசை

தாமிரபரணி அபாயகரமான நதி, எங்கே சுழல் இருக்கும் என்றோ, எங்கே தூக்கி இழுத்து செல்லும் என்பதோ யாருக்கும் தெரியாது ஆனால் அமைதியாக ஓடிகொண்டிருக்கும்

ஆண்டு தோறும் பலரை மவுனமாக பலியெடுக்கும் ஆறு அது

இதுபோக மணல் கொள்ளையர் உருவாக்கிய பேராள பள்ளங்களும் உண்டு , அது ஒருமாதிரி சுழற்சியினை உருவாக்கும்

அதனால் பக்தர்கள் நீராட கட்டுபாடுகள் நிச்சயம் அவசியம்

வேண்டுமென்றால் தமிழிசை கும்பலுக்கு மட்டும் எங்கும் நீந்தி நீராடுங்கள் என கட்டுபாடு இல்லா விதிவிலக்கு கொடுக்கலாம்.

[ October 3, 2018 ]

============================================================================

இயக்குநர் ரஞ்சித் அழைப்பின் பேரில் “பரியேறும் பெருமாள்” படத்தை பார்த்து பாராட்டினார் கமலஹாசன் : செய்தி

ரஞ்சித் கமலஹாசனிடம்தான் போக முடியும், ரஜினியிடமா செல்ல முடியும்?

பட்ட அடியில் ரஜினி இவரை பார்த்தாலே ஓடிவிடமாட்டாரா?

[ October 4, 2018 ]

============================================================================

மிகுந்த எதிர்பார்புகிடையே இன்று இந்தியா வருகின்றார் புட்டீன், பல நாடுகள் புருவத்தை சுருக்கி பார்க்கின்றன. இந்த டிரம்பானவர் பல்லை கடித்து கொண்டு பார்த்துகொண்டிருக்கின்றார்

உலக நிலவரம் அவ்வளவு கடுமையானது. ரஷ்யாவுன் ராணுவ உறவு வைத்துகொள்ளும் தேசங்கள் மேல் பொருளாதார தடை விதிக்கபடும், உலகை விட்டு அவை ஒதுக்கிவைக்கபடும் என அமெரிக்கா மிரட்டும் நேரம்

இந்நேரத்தில் இந்தியாவும் தைரியமாக ரஷ்யாவுடன் உறவு முக்கியம் என சொன்னதும் வரலாற்று நிகழ்வு

இதனை உறுதிபடுத்தும் விதத்திலும் கூடுதலாக 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் விதத்திலும் இன்று டெல்லி வருகின்றார் புட்டீன்

பொதுவாக புட்ட்டீன் மர்மமான மனிதர், எந்த நாட்டுக்கும் ஓடுபவர் அல்ல, மிக அவசியம் என்றால் மட்டும் கிளம்புவார்

அப்படிபட்ட புட்டீன் உலகின் மாபெரும் ராணுவ ஒத்திகையினை முடித்துவிட்டு இந்தியா வருகின்றார்

சிரிய யுத்தத்தை முடித்தது, ஈரானிய யுத்தத்தை தடுத்தது உட்பட பல சாகசங்களை செய்து கொண்டிருக்கும் அசாத்திய மனிதரை வரவேற்பதில் இந்தியா மகிழ்கின்றது

வெல்கம் மிஸ்டர் புட்டீன்.

[ October 4, 2018 ]

Image may contain: 1 person, suit and closeup
==========================================================================

இன்று உலக வன விலங்குகள் நாளாம், இந்திய தமிழக அரசியல்வாதிகளையும் அதில் சேர்த்துகொள்ளலாம்

அவர்கள் அழிந்துவரும் அபூர்வ உயிரினம் என்றால் மகிழ்ச்சி, ஆனால் அவர்கள் பெருகிவரும் கொடூர உயிரினம் என்பதுதான் மகா சோகம்..

[ October 4, 2018 ]

===========================================================================

திமுக ஏன் இனி உருப்பட வாய்ப்பே இல்லை என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான்

ஒரு மாபெரும் கட்சி தலைவர், வருங்கால முதல்வராக வாய்ப்பு உள்ள ஒருவர் இந்த அரைகிறுக்கன் கோமாளி திருமுருகன் காந்தியினை எல்லாம் சென்று சந்தித்தபின் எப்படி உருப்படும்?

கலைஞரோடு கடலுக்கு சென்றாயிற்று திமுக‌

[ October 3, 2018 ]
Image may contain: 4 people, people sitting
=========================================================================

“இனவிடுதலைக்கு போராடுற இந்த தமிழ்பிள்ளை ஏன் வாடகை கொடுக்கணும்னு கேட்க இங்க ஒரு பயலும் இல்லியே தம்பி

ஈழத்துல எங்க அண்ணன் வாடகை கொடுத்தானா? இல்லை விலை கொடுத்துத்தான் வாங்கினானா? துப்பாக்கி காட்டியே பறித்தான்

இங்க அத கூட செய்யமுடியாம நம் இனம் அடிமைபட்டு கிடக்கு தம்பி, இது மானபிரச்சின. தேசிய இனத்தின் அவமானம்

இனவிடுதலைக்கு போராடும் ஒருவனிடம் வாடகை கேட்பது எவ்வளவு பெரிய அவமானம்? இது எந்த இனத்திலாவது உண்டா?

ஏண்டா எவ்வளவு பெரும் புரட்சி செய்துகிட்டு இருக்கேன் என்கிட்ட வந்து வாடகை கேட்டுட்ட்டு. இந்தபாரு பேசனும்னா சீரியசா பேசு, சும்மா பேசிட்டு இருக்காத எனக்கு லட்சம் வேலை இருக்கு”

[ October 4, 2018 ]

============================================================================

மிகபெரும் எச்சரிக்கையினை வானிலை இலாகா தெரிவித்துள்ளது, 7ம் தேதி மிகபெரும் மழை தமிழகத்தை தாக்கலாம் என்கின்றன அறிவிப்புகள்

ஆனால் முதலமைச்சர் கோஷ்டிகளோ இடைத்தேர்தலில் எவ்வளவு கொடுக்கலாம்? எப்படி குத்தாட்டம் போடலாம் என யோசித்துகொண்டிருக்கின்றது

மிக மிக அவசரமான முன்னெச்செரிக்கை எடுக்க வேண்டிய நேரமிது

[ October 4, 2018 ]

============================================================================