சிதறல்கள்

மாட்டு சாணத்தை நுகர்ந்து கொண்டே மாட்டு மூத்திரத்தை குடித்தால் பெரும் போதை வரும், அதில் இப்படி எல்லாம் எழுத முடியும்

பெத்தடின் கொடுக்காத போதை எல்லாம் மாட்டு மூத்திரம் கொடுக்கின்றது

[ October 19, 2018 ]
Image may contain: 1 person
============================================================================

ஜெயம் ரவியின் அடுத்த படம் “அடங்க மறு ”

மிஸ்டர் திருமா கேட்டுச்சா , உங்கள் கட்சியின் கொள்கையினை படத்தின் பெயராக வைக்கின்றார்கள் அய்யா

ஏன் சத்தமில்லை

“அத்து மீறு” என அடுத்த படம் வருவதற்குள்ளாக வந்து தடுத்துவிடும்..

[ October 19, 2018 ]

============================================================================

பங்கு, நம்ம கட்சிக்கு அடையாளமே போலிஸின் அதிரடிதான். பொன்மன செம்மல் மெரீனாவில் செய்த துப்பாக்கி சூடு, மண்டைக்காடு துப்பாக்கி சூடு எல்லாம் அசத்தல், ஏன் பிரபாகரனையே சென்னையில வீட்டுகாவலில் வச்சது அதிமுக அரசு

ஆமா

நம்ம ஆத்தா என்னெல்லாம் செஞ்சிச்சி, எவ்வளவு என்கவுண்டர்? அட வீரப்பனையே சுட்டு தூக்கிட்டு

ஆமா

நாம ஏதாவது அதிரடியா செய்யணும், தூத்துகுடி எல்லாம் வகையில வராது. வேறு ஏதாவது சாகசம் செய்து கட்சி பெயர காப்பாத்தணும்

ஆமா , நம்ம ஆட்சி முடியிறதுக்குள்ள புழல்ல சகல வசதியும் செஞ்சிட்டு எச்.ராசாவையும் எஸ்.வீ சேகரையும் பிடிச்சு உள்ளே வச்சிருவோம், அதவிட என்ன சாதனை இருக்க போகுது பங்காளி.

சரிதான் பங்காளி, செஞ்சிருவோம், எவ்வளவு பெரிய விஷயம் அது.

[ October 19, 2018 ]

============================================================================

எடிசனுக்கு அடுத்து அரிய கண்டுபிடிப்புகளை செய்தவர் பெரியார் என்பதும் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த மிகபெரும் விஞ்ஞானி என்பவர் அண்ணா என்பதும் உலகம் அறிந்தது

நிக்கோலஸ் கோப்பல்நிக்கஸ், கலிலியோ வரிசையில் வைக்கபட வேண்டியவர்கள் அன்பழகனும் நெடுஞ்செழியனும்

வார்ன் பிரவுண் வரிசையில் வரவேண்டியவர் வைகோ

பிரபல கம்பெனிகளான சோனி முதல் போர்டு வரை திமுகவினரின் அரிய கண்டுபிடிப்பில் உருவானது

கலைஞர் கருணாநிதி என்பவர்தான் செயற்கைகோள் ராக்கெட் நுட்பம் எல்லாம் கண்டறிந்தார்

சொர்க்கத்தில் இருக்கும் அண்ணாவே, திமுகவினர் உருப்படியாக கண்டுபிடித்த ஒரு விஞ்ஞான விஷயத்தை சொல்லுங்கள் பார்க்கலாம்

இதயகனி செய்ததா? இல்லை இதயகனியின் கனி செய்ததா? இல்லை உடன்பிறப்புக்கள்தான் செய்ததா?

உங்களின் விஞ்ஞான கனவினையா தம்பிகள் செய்தார்கள்? வெள்ளையன் கொடுத்த விஞ்ஞானத்தில் எல்லாம் ஊழல் மட்டும் செய்தார்கள்

மறுக்க முடியா அண்ணா…

யோசித்து பாருங்கள் அண்ணா, உங்களையும் அறியாமல் நீங்களும் உங்கள் அருகிலிருக்கும் தம்பியும், இதயகனியும் அதன் இதயத்து கனியும் தங்களை அறியாமலே சிரிக்கும் [ October 19, 2018 ]

Image may contain: 1 person, smiling, text
============================================================================

“இங்க பாருங்க கலைஞரே, சக்தியினை உடலில் பாதி வைத்தவர் சிவபெருமான் என்கின்றார்கள், விஷ்ணு பெண்ணாகி வந்து சிவனோடு கூடி பெற்றெடுத்தவன் அய்யப்பன் என்கின்றார்கள்

ஒன்றைரை பெண்ணும் அரை ஆணும் கலந்து பிறந்த அய்யப்பன் ஆலயத்தில் நுழைய பெண்களுக்கே உரிமை அதிகம்

ஆனாலும் சபரிமலைக்கு செல்வதுதான் பக்தி என்றல்ல, செல்லாமல் இருப்பது ஆத்திகம் என்பதுவமல்ல‌

பெரியார் பாணியில் போராட அது வைக்கமும் அல்ல, போராடாமல் விட்டுவிட அது கொடநாட்டு மலை பங்களாவும் அல்ல‌

தலைவைத்து நாம் போராட அது கல்லகுடியுமல்ல, அங்கு ரயில் வருவதுமல்ல‌”

“யோவ் பலரை குழப்புறவன் நான், என்னையே குழப்புறியா? என்னய்யா சொல்லவருகின்றாய்” [ October 19, 2018 ]

===========================================================================

சின்மயி சர்ச்சையில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்து பெற்ற அனைத்து விருதுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் ” – எச்.ராஜா

மசூதி இடிப்பில் சிக்கியுள்ள அத்வானி உள்ளிட்ட‌ பாஜக தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பாபர் மசூதியினை திரும்ப கட்டிதர வேண்டும்

[ October 19, 2018 ]

============================================================================

“ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி

முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி

..
..
..

அதிசய ராகம்..
ஆனந்த ராகம்..
அழகிய ராகம்…அபூர்வ ராகம்”

Image may contain: 1 person, selfie and closeup