சிதறல்கள்

சர்கார் படத்தின் டிரைலர் ஓடிகொண்டிருக்கின்றது அதில் “நான் கார்பரேட் கிரிமினல்” என வசனம் பேசுகின்றார் விஜய்

பன்னாட்டு சினிமா கம்பெனிகளில் நடிப்பது, வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவது என இவரின் செயல்பாடுகளிலே இவர் கார்பரேட் கிரிமினல் என தெரியாதா?

இதை வசனமாக வேறு படத்தில் சொல்ல வேண்டுமா?

[ October 19, 2018 ]

============================================================================

பிரதமர் மோடி ராமலீலா போராட்டத்தில் கலந்து கொண்டது சரியா என பலர் கிளம்புகின்றார்கள்

இது கலாச்சார விழா

மன்மோகன் சிங்கும் சோனியாவும் முன்பு கலந்து கொண்டார்கள், அப்பொழுதெல்லாம் மத சாயம் பூச யாருமில்லை என்பதுதான் சோகம்

மத கொண்டாட்டங்களை , எல்லோரும் மகிழ்வாக இருக்கும் பொழுது அதில் ஒத்துழைப்பதுதான் நல்ல அரசுக்கு அழகு

சோனியா செய்ததைத்தான் மோடியும் செய்கின்றார்

Image may contain: 6 people, people smiling, people standing
============================================================================

அண்ணாவினை பற்றி சொன்னதற்கு பலர் பொங்குகின்றார்கள்

அண்ணா என்ன சொன்னார் விஞ்ஞானம் பற்றி தமிழனுக்கு தெரியாது ஆனால் எமனின் வாகனம் எருமை கிடா என்பான் என்பது

அதாவது தமிழருக்கு மூட நம்பிக்கை அதிகம் போலவும் அதை விதைத்து பிராமணர் என்பது போலவும் அவரின் பேச்சுகளும் எழுத்தும அமைந்தன‌

ஆனால் அவர் ஊட்டிய அறிவு, அவரின் தம்பி கலைஞர் ஊட்டிய அறிவில், இதயகனி ராமசந்திரன் ஊட்டிய அறிவி எத்தனை விஞ்ஞானிகள் உருவானார்கள் என்றால் திமுகவினருக்கு கோபம் வருகின்றது

திமுக என்பது எழுத்து, பேச்சு கலைஞர்களால் உருவாக்கபட்டது அங்கு விஞ்ஞானி எவன் இருந்தான்?

ஒருவனுமில்லை

எந்த பிராமணனை மூட நம்பிக்கையாளன் என்றாரோ அண்ணா, அந்த பிராமணன் நாசா முதல் உலக பன்னாட்டு நிறுவணங்களில் தலமை பொறுப்பில் இருக்கின்றான்

இதை சொன்னால் எல்லோருக்கும் கோபம் வருகின்றது

நல்ல இயக்கம் மூட நம்பிக்கைக்கு எதிராக பல விஞ்ஞானிகளை உருவாக்கி காட்டி இருக்க வேண்டும்

இங்கு யார் உருவானார்கள்?

வெற்றி கொண்டானும், துரைமுருகனும், செல்லூர் ராஜுவும் விஞ்ஞானிகள் என ஒப்புகொள்ள முடியுமா?

பிராமணரின் மூட நம்பிக்கையினை சாடுகின்றேன், நம்மில் விஞ்ஞானம் வளரவேண்டும் என விரும்பிய அண்ணாவின் கட்சியில் எத்தனை விஞ்ஞானிகள் வந்தார்கள்

இதை சொன்னால் திமுக விஞ்ஞானிகளுக்கு எல்லாம் கோபம் வருகின்றது

அப்துல் கலாம், விஞ்ஞானி அண்ணாதுரை, இஸ்ரோ சிவன், இந்த நம்பி நாராயணம், விஞ்ஞானி சிதம்பரம் போன்ற தமிழர்கள் எல்லாம் எப்படி உருவானார்கள் என்றால் அவர்கள் திமுகவில் இல்லை

இருந்திருந்தால் விஞ்ஞானி ஆகியிருக்க முடியுமா? நிச்சயம் இல்லை

திமுகவில் இருந்தால் அவர்கள் எல்லாம் முட்டு சந்தில் பெரியார் அண்ணா என கதறிகொண்டுதான் இருந்திருப்பார்கள்

அதைத்தான் இவர்கள் விரும்புகின்றார்கள் போல‌ [ October 19, 2018 ]

============================================================================

ஸ்டாலின் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால் எங்கோ யாருக்கோ அவர் அஞ்சலி செலுத்தியதை எல்லாம் அவர் ஆயுத பூஜை கொண்டாடினார் எனும் கயமையினை ஏற்க முடியாது

இந்த புரளியினை கிளப்பிவிட்டவன் நிச்சயம் பாஜகவாகத்தான் இருக்க முடியும், நிச்சயம் சொல்லலாம். அவர்கள் சிந்தனை எல்லாம் இப்படித்தான் இருக்கும்

பின் எங்கிருந்து தாமரை மலரும், இந்த புரளியினை கிளப்பிவிட்டவனை அமைச்சர் ஜெயக்குமாருக்கு மைக் பிடிக்க வைத்து தண்டிக்க வேண்டும்

அதை விட பெரும் தண்டனை எங்கே உண்டு

[ October 19, 2018 ]
Image may contain: 1 person, standing and food
============================================================================

நான் பார்த்த நல்ல மனிதர்களில் வைரமுத்துவும் ஒருவர் : தலைவி குஷ்பு

தெய்வமே தீர்ப்பு சொல்லிவிட்டது இனி என்ன?

அவ்வளவுதான் பஞ்சாயத்து முடிஞ்ச்சாச்சி கிளம்பு, கிளம்பு

வைரமுத்து வாழ்க.

ஏம்மா சின்மயி பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டிட்டு ஆத்தாவ கூட்டிட்ட்டி நடைய கட்டு [ October 20, 2018 ]

===========================================================================

“ஏண்டா மணியா சபரிமலை பக்கம் என்ன சதமாட்டுருக்குது

அதுங்கன்ணா, பெண்களை உள்ளே விடனும்னு கோர்ட்டு சொல்லிட்டுங்கண்ணா, இத பார்த்துட்டு பல பெண் போராளிகள் கிளம்பிட்டாங்கண்ணா ஆனா பக்தர்கள் விடமாட்டோம்னு மறியல்னா, அதுல போலிஸ் எல்லாம் தடியடின்னா

இதுக்காடா இவ்வளவு சண்டை

அட அது எப்படின்னா விடுவாங்க, அவங்க நம்பிக்கைய காப்பாத்த போராடுவாங்கல்லாண்ணா

மணியா, நான் என்ன சொல்லவாறேண்ணா, சபரிமலைக்கு பெண்கள் வந்தால், ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம்னு ஒன்னு இருக்குல்ல, அட பெண்கள் மட்டும் குளிச்சி பொங்கல் எல்லாம் வச்சி கும்புடுவாங்களே அங்க ஆம்பிளை எல்லாம் படை எடுக்கணுமப்பா

அட இது நல்லா இருக்கே

ஆமா சமத்துவம்னா எல்லா இடமும் வேணுமில்ல, சபரிமலைக்கு இவளுக வந்தா, நாங்க ஆற்றுக்கால் பக்கம் போவோம் பெண்களோடு குளிப்போம் அவங்க பொங்கல் வைக்கும்போது நாங்களும் வைப்போம்னு இவனுக கிளம்பணும், பிரச்சினை தானா சரியாகும், நீ எல்லாம் முத ஆளா கிளம்பிறமாட்ட

ஆமாண்ணா பாத்திமா, ரெகானா, லிசின்னு சிலது கிளம்புது. ஆற்றுக்கால் கோவிலுக்கு வாங்கண்ணா தமிழ்நாட்டுல இருந்து கூட லாரி லாரியா வருவாங்கண்ணா, நயந்தாரா கீர்த்தி சுரேஷ் பொங்கல் வச்ச கோவில்லா 20 ரயில் வேணுமுங்கண்ணா

பின்ன என்னாகும்? சபரிமலை ஆண்களுக்கும் இந்த கோவில் பெண்களுக்கும்னு கோடு போடுவாங்களா இல்லியா?

ஆமாண்ணா, 100% படிச்சவனுகன்னு சொல்றானுக அவனுகளுக்கு இது தோணல பார்த்தீங்களா..

மணியா, அவனுக என்னத்த‌ படிச்சாலும், அரசியல் படிக்க தமிழ்நாட்டுக்குத்தான் வரணும்

ஆமாங்கண்ணோவ்… ” [ October 20, 2018 ]

Image may contain: 3 people, people smiling
==========================================================================

உற்சாகமாக கொண்டாடபட்ட தசரா பண்டிகை, பஞ்சாப் சம்பவத்தின் மூலம் சோகமாக முடிந்திருக்கின்றது

தண்டவாளம் அருகே ராவண வதம் நடந்திருக்கின்றது, தண்டவாளத்தை சாதாரணமாக கருதி குவிந்திருக்கின்றார்கள், பலர் செல்பியும் எடுத்திருக்கின்றார்கள்

எல்லோர் கவனமும் அதில் இருக்க, ரயில் அதன் போக்கில் வந்திருக்கின்றது. நடக்க கூடா விபரீதம் நடந்துவிட்டது

பலியான அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்,

தண்டவாளங்கள் எப்பொழுதும் கவனத்தோடு அணுக வேண்டியது என்பதை 60க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து தேசம் கற்றிருக்கின்றது

[ October 20, 2018 ]

============================================================================

மியா கலிபா என்றால் யாரோ மிகபெரும் இஸ்லாமிய மதகுரு என நினைக்கும் அளவும் சில இஸ்லாமிய சகோதரர்கள் இருப்பதுதான் நமக்கு பகீர் என்கின்றது

மியா கலிபா யார் என தெரியாதவர்களிடம் என்ன பேசி என்னாக போகின்றது? மவுனமாக நகர்ந்துவிட வேண்டியதுதான்

நல்ல வேளையாக சன்னி லியோனி இந்தியா வந்தார் இல்லாவிட்டால் அவரை வாடிகனின் மிகபெரும் பாதிரியாராக இல்லை ஆங்கிலக்கன் சர்ச்சின் தலைவராக இங்கும் சில அல்ட்ராசிட்டி கும்பல் நினைவிலே வணங்கி கொண்டிருக்கலாம்

[ October 20, 2018 ]

============================================================================

யார் யாரோ மி டூ சொல்றா, நானும் சொல்லலாம், ஆனா யார் மேலே சொல்றது

நம்ம காலத்து நடிகர், பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், இயக்குநர்னு யாரும் உயிரோட இல்லியே.. யார் மேலே சொல்ல..

[ October 20, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================
தமிழக வரலாறுகள் மேல் தனி அபிமானம் கொண்ட கலைஞர் பூம்புகாரை கட்டிவிட்டு ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்தார்
ஆனால் தொல்லியல் துறையினை காரணம் காட்டி இந்திரா அரசு தஞ்சாவூர் கோவிலுக்குள் அதை நிறுவ இடமளிக்கவில்லை
ஆலயத்திற்கு வெளியே “கோவிலுக்குள் மத்திய அரசு இடமளிக்காததால் சிலை வெளியே நிறுவபடுகின்றது” என்ற கல்வெட்டுடன் சிலையினை நிறுவினார் கலைஞர்
அரசியல் முதிர்ச்சி என்பது இதுதான், இன்று கண்டாலும் அந்த வரலாறு நினைவுக்கு வந்து செல்லும். தலைமுறை தலைமுறையாக போர்குணம் விதைப்பது என்பது இதுதான்
அட்டகாசமாக அதனை செய்தார் கலைஞர்
[ October 20, 2018 ]
============================================================================

சபரிமலைக்கு ஜாதி, மதம் கடந்து எல்லோரும் செல்லும் சமத்துவ நிலை உருவாக கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : திருமாவளவன்

மிஸ்டர் திருமா, உங்கள் கட்சியின் துணை தலைவராக ஒரு வன்னியரை வைத்துவிட முடியுமா? பொதுசெயலாளராக ஒரு தேவரை வைக்க முடியுமா?

அப்படி வைத்துவிட்டு சபரிமலைக்கு சமத்துவம் பேசினால் நல்லது

[ October 20, 2018 ]