சிதறல்கள்
பொதுவாக சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதவர் ஏ.ஆர் ரகுமான். இசை தவிர வேறு செய்திகளில் அவரை பார்க்க முடியாது
முழுக்க இசை இசை என எம்.எஸ் விஸ்வந்தானுக்கு பின் தமிழகம் கண்ட இசை அமைப்பாளர் அவர். எவ்வித சர்ச்சையும் அவரை பற்றி வந்ததே இல்லை
இப்பொழுது சர்ச்சை அவரின் சொந்த சகோதரி வடிவில் வருகின்றது, வைரமுத்து பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார் சகோதரி
ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் சந்தேகமில்லை ஆனால் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு
இளையராஜாவினை பிரிந்து முட்டையில் இருந்து வந்த குஞ்சாக ரகுமான் நின்றபொழுது வைரமுத்துவின் வரிகளே அவருக்கு இறக்கை வளர்த்தன, பறக்க கற்றும் கொடுத்தது
ரகுமானின் வளர்ச்சியில் வைரமுத்துவிற்கு மகத்தான பங்கு உண்டு
ரகுமானின் ஆரம்ப காலங்களில் எல்லாம் வைரமுத்துவின் வரிகள் ரகுமானுக்கு அப்படி வேர்பிடித்து கிளைபரப்பி கொடுத்தன, யார் மறுக்க முடியும்?
இன்று ரகுமான் ஆலமரமாக வளர்ந்துவிட்டார், ஆனால் அன்று அந்த சிறிய செடிக்கு நீர் ஊற்றியது யாரென்றால் வைரமுத்து
அந்த சிறிய தீபொறியினை பெரும் தீபமாக வளர வைத்ததில் வைரமுத்துவின் காற்றும் இருக்கின்றது.
அதை எல்லாம் மறந்துவிட்டு அவர் சகோதரி வைரமுத்துவினை கடுமையாக விமர்சிக்கின்றார்
இதை எல்லாம் ஆதிகாலத்திலே சொல்லி இருக்கலாம், அப்பொழுதெல்லாம் ரகுமான் வளர வைரமுத்து தேவையாய் இருந்ததால் அம்மணி சொல்லாமல் இருக்கலாம்
இன்று ரகுமான் உலக அளவில் சென்றுவிட்டதால் இனி வைரமுத்து தேவை இல்லாதவராக இருக்கலாம்
சின்மயியும் இதைத்தான் செய்தார், இப்பொழுது இந்த ரகானா வந்திருகின்றார்
ஆக “வேப்பிலை கறிவேப்பிலை அது யாரோ நான் தானோ யாரோ நான் தானோ..” என்ற அவரின் வரிகள் வைரமுத்துவிற்கே பொருந்தும்
வைரமுத்து மேல் ஆயிரம் தவறு இருக்கலாம், ஆனால் இந்த கண்ணகி தேவதைகள் அன்றே அவரை செவிட்டில் அறைந்தால் என்ன?
அப்பொழுதெல்லாம் அவரை பயன்படுத்திவிட்டு இப்பொழுது வந்து குத்துவது எல்லாம் என்ன வகை நியாயமோ தெரியவில்லை
ஆளாளுக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள் அதன் பின் அவரை வீசி எறிகின்றார்கள்
“ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி..” என வைரமுத்து தன் வரிகளாலே ஆறுதல் தேடும் நேரம் இது
ஏ.ஆர் ரகுமான் இதுபற்றி என்ன சொல்வாரோ தெரியாது
ஆனால் வைரமுத்து பற்றி தெரிந்தும் காற்றுவெளியிடை வரை பணிபுரிந்திருப்பாரா என்றால் நிச்சயம் இல்லை
தனக்கு வாழ்வளித்த, தன் ஆரம்ப காலங்களில் துணை நின்ற வைரமுத்துவிற்கு ஆறுதலாக ரகுமான் ஏதும் சொல்ல வேண்டிய நேரமிது
இல்லாவிட்டால் “செய்நன்றி கொன்ற பாவத்திற்கு” அவர் ஆளாக நேரிடும்
நன்றி கொன்ற யாரும் உருப்பட்டதில்லை என்பது திரையுலக சரித்திரம்
ஒருவேளை சகோதரி புகாரளித்தும் ரகுமான் வைரமுத்துவோடு தொடர்ந்திருந்தால் என்றால் அது என்னவகையில் வரும் என்றால் வடிவேலு பேக்கரி காமெடி லெவலில் வரும்
நிச்சயம் ரகுமான் அப்படிபட்டவர் அல்ல
[ October 22, 2018 ]

இவ்வளவு படம் நடிச்சிருக்கேன், கதாநாயகிய சினிமாவுல கூட தொட்டதில்ல, ஆஞ்சநேயர் பக்தன்
சொல்ல முடியுமா என் மேலே மி டூ
ஆதாரம் இருந்த நீ காட்டு
நானும் புத்தனும் ஒன்னு, இத அறியாதவன் வாயில மண்ணு
நானும் காந்தியும் மீ டூ,
நானும் அப்துல் கலாமும் மீ டு { October 22, 2018 ]
===========================================================================
ஜெயாவிற்கு சொத்துகுவிப்பு வழக்கு நடத்திய திமுக, வானதி சீனிவாசனின் மிக்பெரும் சொத்துகுவிப்பு பற்றி ஏன் கண்டுகொள்ளவில்லை என யாரும் கேட்க கூடாது
அரசியல் கணக்கில்லாமல் இங்கு வழக்குமில்லை, சில விஷயங்களில் அமைதியுமில்லை [ October 22, 2018 ]
===========================================================================
“எந்த யழவு நேரத்தில உம்மை இங்கு கவர்னர் ஆக்கினோமே தெரியலை
அப்பொழுது இருந்தே ஒரே பெண்கள் சர்ச்சையா வருது, என்ன ராசியா இது? ..”

“ஒரு காலத்துல எவ்வளவு கிசுகிசு நம்மள பத்தி எழுதுனாங்க, எவ்வளவு செய்தி வந்திச்சி..
இப்போ மி டூல கூட நம்ம பெயர் இல்லியே…”

கேரள விவகாரத்தை கவனித்தால் சில விஷயங்கள் புரியும்
அங்கே கிறிஸ்தவ பாதிரி அட்டகாசத்தை அந்த மாநில அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை, ஒருமாதிரி ஒதுங்கி இருந்தது
அந்த ஹிதாயா எனும் பெண் இஸ்லாமாக மாறி பாதுகாப்பு கேட்ட நேரத்தில் அது மிகபெரும் பாதுகாப்பை கொடுத்தது
ஆனால் இந்துக்களின் விவகாரத்தில் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்கின்றது
இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கடைசி மாநிலமான கேரளாவில் அதற்கு இறுதி ஆணி அடிக்கபட்டு கொண்டிருக்கின்றது [ October 22, 2018 ]
===========================================================================
பிஷப் பிராங்கோ பாலியல் புகார் வழக்கு: முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்
நீதியினை காக்க உயிரை விடுபவன் பேறுபெற்றவன் என பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது [ October 22, 2018 ]
============================================================================
உணர்ச்சி மிகுதியால் தவறுதலாக பேசிவிட்டேன் – சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹெச்.ராஜா விளக்கம்
அது எப்படி மன்னிப்பு கேட்கலாம் என சிலர் கிளம்புகின்றனர்
எச்.ராசா என்ன செய்திருக்க வேண்டும், எனக்கு அல்மய்சர் எதுவுமே நினைவு இல்லை, டாகடரை பார்த்தால் கூட பிராண்டி விடுகின்றேன் என சொல்லி மன்னிப்பு கேட்காமல் வந்திருக்க வேண்டும் அது சாதுர்யம்
வழக்கை 18 ஆண்டுகாலம் இழுத்திருக்க வேண்டும் மயிர் என்றால் உச்சி முடி மரியாதை என்றெல்லாம் தமிழில் விளக்கி நீதிபதி தலையினை பிய்க்கும்படி செய்திருக்க வேண்டும்
எனக்கு உடல் சரியில்லை, என் வீட்டு டிரைவருக்கு வயிற்று போக்கு, காரில் பெட்ரோல் இல்லை என்றெல்லாம் வாய்தா வாங்கி இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் என்ன செய்திருக்க வேண்டும், என்னை 4 பல்பிடுங்கிய பாம்புகளோடு சிறையில் அடையுங்கள் குறிப்பாக பாளையங்கோட்டை சிறையில் அடையுங்கள் நானும் பாட்டுபாடி தலைவராக வேண்டும் என கேட்டிருக்க வேண்டும்
மாறாக மன்னிப்பு கேட்டது தவறு. [ October 22, 2018 ]
============================================================================
பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் : அருள்மொழி
முதலில் திராவிடர் கழகத்தை வீரமணியிடம் இருந்து காப்பாற்றுங்கள் பார்க்கலாம் [ October 22, 2018 ]
============================================================================
26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகின்றது :செய்தி
அதாவது தமிழக மாணவர்களுக்கு விடுமுறை காலம் தொடங்குகின்றது, அவர்களுக்கு ஏக மகிழ்ச்சி
கூடவே ஆசிரியர்களுக்கும் கடும் எதிர்பார்ப்பு [ October 22, 2018 ]