சிதறல்கள்
மோடி ஜப்பானுக்கு செல்கின்றார், உலக செய்தியில் ஓஓ அவரா என்றபடி விட்டுவிட்டார்கள். மோடி பயணம் உலகிற்கு சாதாரணம்
ஆனால் ஒருவரின் பயணத்தை உலகம் ஒருமாதிரி பார்க்கின்றது
ஆம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஓமான் சென்றிருக்கின்றார். இதுதான் உலக அதிர்ச்சி
ஏன் சென்றார்? எதற்கு சென்றார்? என்ற காரணங்கள் ஒருநாளும் வராது, உண்மையில் சில விவகாரங்களில் ஓமானை மிரட்டவோ இல்லை வழிக்கு கொண்டுவரவோ இல்லை தீவிரவாதிகள் சம்பத்தபட்ட ஆதாரமோ இல்லாமல் அவர் கிளம்பி இருக்கமாட்டார்
ஆனால் ஓமான் சென்ற நேதன்யாகு என்ன சொல்லியிருக்கின்றார் என்பதுதான் கெத்து
என்ன சொன்னார்?
இந்த பாலஸ்தீன் அமைதிபற்றி யாருமே பேசவில்லை, நாங்கள் எப்பொழுதும் தயார் ஆனால் அரபு உலகில் யாருமே பேசவில்லை, ஓமன் மன்னராவது பேசுவார் என நம்புகின்றேன்
இது எப்படி இருகின்றது தெரியுமா?
இந்த அமித்ஷா வந்து தமிழக அமைச்சர் ஒருவரை பார்த்து “தமிழக நிலவரம் கவலை அளிக்கின்றது , உங்களை பார்த்து எப்படி நல்லாட்சி நடத்தலாம் என ஆலோசிக்க வந்தேன்” என சொன்னால் எப்படி இருக்கும்
அப்ப்படி இருக்கின்றது
[ October 27, 2018 ]
============================================================================
சிரிய யுத்தம் மிக சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருந்தபொழுது இப்பொழுது கிளைமேக்ஸ் நெருங்குகின்றது
சிரியாவில் ரஷ்யா தன் எஸ்300 சிஸ்டத்தை நிறுத்தியதில் இருந்து அடுத்த ஆட்டம் தொடங்குகின்றது
அதாவது அமெரிக்க தொழில்நுட்பம் இஸ்ரேலிலும், ரஷ்ய தொழில்நுட்பம் சிரியாவிலும் நிறுத்தபட்டிருக்கும் பொழுது யார் வெல்வார்? என உலகம் ஒரு மாதிரி பார்த்துகொண்டிருக்கின்றது
இருவருக்கும் இது கவுரவ பிரச்சினை, ரஷ்யாவிற்கு தன் ஆயுதம் கண்டு அவர்கள் ஓடிவிட்டார்கள் என்ற செய்தி வரவேண்டும் என்பது அவர்கள் ஆசை
அமெரிக்க தரப்பிற்கோ ரஷ்ய தொழில்நுட்பம் தோற்றுவிட்டது என சொல்லி அந்த எஸ் 400 நுட்பத்தை வாங்கி இருக்கும் இந்தியா, சீனாவினை பார்த்து சிரிக்க வேண்டும் என்பது ஆசை
இந்த இரு ஆசைகளில் எது நிறைவேறுமோ தெரியாது
வழக்கமாக இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவில் குண்டு வீசுவது வழக்கம், தீவிரவாதிகளுக்கு எதிராக என சொல்லும்
பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஒரே பிரச்சினை இஸ்ரேலிய விமானபடை
இப்பொழுது சிரியாவில் இஸ்ரேல் விமானம் ரஷ்ய புண்ணியத்தில் பறக்கவில்லை
இதனால் இனி தீவிரவாதிகள் கூடிவிடுவார்களோ எனும் அச்சத்தில் இஸ்ரேல் எங்கள் மேல் தீவிரவாதிகள் ஏவுகனை தாக்குதல் நடத்தினார்கள், எங்களுக்கு பாதுகாப்பில்லை என கத்த தொடங்கிவிட்டது
இது இஸ்ரேல் நடத்தும் நாடகம் என்கின்றது சிரிய ரஷ்ய தரப்பு
இந்நிலையில் அமெரிக்க உளவு விமானங்கள் சிரியாவில் இருக்கும் ரஷ்ய தளத்தை தாக்க வந்தது என்கின்றது ரஷ்யா
வாய்ப்பு இருக்கலாம் , அச்சுறுத்தும் எஸ்300 சிஸ்டத்தை சோதித்து பார்க்க அமெரிக்க விமானம் சென்றிருகலாம்
ஆனால் அமெரிக்காவோ ரஷ்யா நாங்கள் அப்பக்கம் செல்ல கூடாது என்பதற்காக அபாண்ட குற்றசாட்டுகளை சொல்கின்றது என்கின்றது
இப்படியாக இருவரும் தங்கள் கவுரவத்தை காக்க வரிந்து கட்டி தயாராகின்றார்கள்
இந்த கவுரவ சண்டையினை ரஷ்ய அமெரிக்க எல்லையில் போட்டுபார்த்தால் என்ன? என நாம் கேட்க கூடாது.
குட்டி நாடுகள் வல்லரசுகள் தங்கள் ஆயுதத்தை சோதிக்கும் களங்கள் என்பதை வரலாறு மறுபடியும் குறிக்கின்றது
[ October 28, 2018 ]
============================================================================
யூதர்களுக்கு கோவிலே இப்பொழுது கிடையாது, கோவில் என்றால் அவர்களுக்கு ஜெருசலேம் ஆலயம் மட்டுமே, அதுவும் இன்று அழும் சுவராக இருக்கும் நிலையில் அவர்கள் அல் அக்சா மசூதியினை ஓடுமீன் ஓட என்ற கொக்கு போல் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்
என்றாவது ஒரு நாள் அதில் சாலமோன் கோவிலை கட்டுவோம் என்பது அவர்கள் கனவு , சவால், லட்சியம், வாழ்க்கை தத்துவம்
கோவில்தான் கிடையாதே தவிர அவர்கள் இருக்குமிடத்தில் கடவுளை தொழ தொழுகை கூடம் உண்டு
அப்படி ஆங்கிலத்தில் Synagogue என அழைக்கபடும் அந்த கூடம் கொச்சி முதல் உலகெல்லாம் உண்டு, அமெரிக்காவில் ஏராளம் உண்டு
கடந்த சனிகிழமை அப்படி தொழவந்தவர்களை ஒருவன் சுட்டிருக்கின்றான், 11 யூதர்கள் பலி
டிரம்ப் சும்மா இருப்பாரா? சகல புலனாய்வு துறைகளையும் முடக்கிவிட்டிருக்கின்றார், வெள்ளைமாளிகை முதல் கடற்படை கப்பல் வரை அமெரிக்க கொடிகள் அரை கம்பத்தில் பறக்குமாம்
சுட்டவன் சும்மா சுடவில்லை, “யூதர்கள் ஒழிக, எங்கள் மக்கள் வாழ்க” என சொல்லி சுட்டிருக்கின்றான்
தீவிர விசாரணை நடக்கின்றது
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்க காரணம் மக்கள் துப்பாக்கி வைத்து கொள்ள இருக்கும் அனுமதி
ஏன் அனுமதி என்றால் ஒருகாலத்தில் ஆயுதமேந்தி சுதந்திரம் வாங்கியது அமெரிக்கா, நாளை கொடுங்கோலாட்சி மலரும் பட்சத்தில் மக்கள் மறுபடியும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதால் அச்சலுகையாம்
அமெரிக்க அரசு ஏன் மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்றால் இப்படித்தான்
இதனால் எவ்வளவு துப்பாக்கி சூடு நடந்தாலும் ஆயுத களைவு என்பதை அவர்கள் பேசமாட்டார்கள்
நல்ல வேளையாக இந்தியாவில் அப்படி ஆயுத சுதந்திரமில்லை, ஒரு வேளை இருந்திருந்தால்.. நாம் தமிழர் தும்பிகள் கையில் எல்லாம் கிடைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
[ October 29, 2018 ]
============================================================================
கலைஞர் எனும் சாசக அரசியல்வாதி பெரும் தந்திரமுமிக்கவர், அரசியலுக்கு எல்லா மக்களின் வோட்டு வேண்டும் என ஒரு பக்கம் விரும்பினாலும் இன்னொரு பக்கம் தன் பழைய திராவிட கும்பல்களையும் விடமாட்டார்
மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என பல்ஸ் பார்க்க சில நேரங்களில் அவர்களை பயன்படுத்துவார்
அவர்கள் குளத்தில் கல் எறிவார்கள், அந்த சலசலப்பில் இருந்து என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார்
அவரின் சாமார்த்தியம் அப்படி
ஸ்டாலின் அதே பாணியில் செல்வதாக நினைத்து திகவினர் பலரை பேசவிடுகின்றார், அதாவது குளத்தில் கல் எறிய வேண்டும்
ஆனால் அவர்களோ கல்லை எஙகேயோ எறிய, சில நேரம் ஸ்டாலின் தலையிலே எறிய, அதை பார்க்கும் மக்கள் சிரித்து கொண்டே நகர்கின்றனர்
அதன் சமீபத்திய உதாரணம் மதிமாறனின் தோசை, இந்த முரசொலியில் ரஜினி பற்றி வந்த செய்தி
இன்னும் நிறைய வரும்…
[ October 28, 2018 ]
============================================================================
அது அமெரிக்க அரசு வழங்கு விருது அல்ல, தனியார் அமைப்புகள் வழங்கும் விருது என்றாலும் தமிழக பெண் ஒருவர் வாங்குவது மகிழ்ச்சி
இதுவே பாஜக அல்லாத பெண்மணி குறிப்பாக திமுக சார்பு பெண்மணி என்றால் பெரியார் சாதனை இது, திராவிட கொள்கையின் சாதனை இது என்றெல்லாம் குதிப்பார்கள்
அக்கா வேறுகட்சி என்பதால் சத்தமில்லை
அக்காவிற்கு ஒரே ஒரு கோரிக்கை
தயவு செய்து தேங்க்ஸ் என சொல்லி விருதை வாங்கிவிட்டு வந்துவிடுங்கள், மைக் கிடைத்த சந்தோஷத்தில் நீங்கள் பேச தொடங்கினால் விருதை பிடுங்கிவிட்டு, காலத்திற்கும் விசா கொடுக்காமல் விரட்டி விடுவார்கள்
அதைவிட ஆபத்தானது அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்கும் நாடு அது
அதனால் ஒரு வார்த்தையும் பேசாமல், மவுன விரதம் என சொல்லிவிட்டு வந்துவிடுங்கள், இங்கு வந்து பேசிகொள்ளலாம்
நேதாஜி ஏன் இந்தியாவுக்கு திரும்ப வர விருப்பமில்லாமல் தற்கொலை செய்தார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது..
அடேய் உங்க இம்சை எல்லாம் அந்த ராமசந்திரனோடு நிறுத்திகொள்ளுங்கள்..
உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: பிரதமர் மோடி
மிஸ்டர் மோடி, வயர் அறுந்து 6 மாதம் ஆகின்றது
மேக் இன் இந்தியா அம்பானி அடையாளமாக மாறியுள்ளது என்றாவது சொல்லி தொலையுங்கள்
[ October 29, 2018 ]
============================================================================
மோடி சிவலிங்கம் மேல் இருக்கும் தேள் : சசிதரூர்
உதாரணம் காட்டவும் சிவலிங்கமா?
பாஜகவினை சாடி சாடி காங்கிரசுக்கும் மதவாத பேச்சுக்கள் தொற்றிவிட்டன, இப்பொழுதெல்லாம் சிவலிங்கம், சிவன், சபரிமலை என அதிகம் இந்துத்வா பெயர்களாக உச்சரிக்க தொடங்கிவிட்டனர்
தங்களை அறியாமல் காங்கிரசார் இந்துத்வா அபிமானிகளாக மாறி வருகின்றனர், பாஜகவின் மகத்தான வெற்றி இது.
[ October 29, 2018 ]
============================================================================
உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: பிரதமர் மோடி
மிஸ்டர் மோடி, வயர் அறுந்து 6 மாதம் ஆகின்றது
மேக் இன் இந்தியா அம்பானி அடையாளமாக மாறியுள்ளது என்றாவது சொல்லி தொலையுங்கள் [ October 29, 2018 ]
============================================================================
சன் டிவிக்கு இப்பொழுதெல்லாம் திமுகவினால் பாதிக்கபட்டவர்களை, குறிப்பாக அந்த குடும்பத்தால் சில மன உளைச்சல்களை சந்தித்தவர்களை அழைத்து அவர்களை உற்சாகபடுத்தி அவர்களின் உண்மை பலத்தை அறிய வைப்பதில் பெருமகிழ்ச்சி
பல விஷயங்கள் அப்படித்தான் நடக்கின்றன
இப்பொழுது தலைவி குஷ்புவிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்திருகின்றார்கள், மிக சிறப்பான கொண்டாட்டத்தை செய்திருக்கின்றார்கள்
தலைவியின் மகத்துவத்தையும் , ஆற்றலையும் உணர்ந்து கொண்ட சன் டிவிக்கு வாழ்த்துக்கள்
யார் மிகபெரும் மக்கள் ஆதரவும், ஆற்றலும் திறமையும் கொண்டவர்களோ அவர்களை அறிவுள்ள நிறுவணம் தகுந்த கவுரவத்தை கொடுத்து ஆதரித்து அருகில் வைத்து கொள்ளும்
திமுக எனும் கம்பெனி தலைவியினை விடுத்து மாபெரும் தவறினை செய்தது, சன்டிவி அதில் சுதாரித்து கொண்டு தலைவிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது
சன்டிவி எப்படி இவ்வளவு பெரும் நிறுவணம் ஆயிற்று என்றால் இப்படி மிக சரியான கோணத்தில் செல்வதுதான்
தலைவியினை கவுரவபடுத்தி மிக சரியான வழியில் சென்று கொண்டிருக்கும் சன்டிவிக்கு வாழ்த்துக்கள்
தலைவி அருமை தெரியாமல் அழிந்து கொண்டிருக்கும் கட்சிகள் இரண்டு, ஒன்று காங்கிரஸ் இன்னொன்று திமுக
சன்டிவி அந்த தவறை செய்யாமல் தொடர்ந்து வளரும் பாதையில் செல்கின்றது
சன்டிவிக்கு சங்கம் பெரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது
[ October 29, 2018 ]
============================================================================
பிதற்றல் என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த கபிலன் வைரமுத்து என்பவர் சொல்லியிருப்பதே சான்று
அன்னார் அப்பாவுக்கு வக்கலாத்து வாங்கட்டும், அதற்காக பொய்களை அள்ளிவிட கூடாது
அன்னாரின் பொன் மொழிகளில் சில
//நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை,//
கென்னடி பெண்பித்தர் சந்தேகமில்லை, ஆனால் நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என அவர் கேட்டபொழுது மொத்த அமெரிக்காவும் கட்டுபட்டு நின்றது
மேல்நாட்டில் தான் எப்படி போனாலும் நாடு நன்றாய் இருக்க வேண்டும் என கருதுகின்றார்களே தவிர, தனக்காய் நாடு நாசமாகட்டும் என யாரும் கருதவில்லை
//இந்திய வரைப்படத்தில் இடம் பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து //
அன்னார் அமெரிக்க பக்கத்தில் இருக்கும் தீவிலா பிறந்தார்? வடுகபட்டி என்பது இந்திய கிராமம் இல்லையா?
//அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை.//.
யார்தான் ஆடையோடு பிறந்தார்கள்? எந்த அரசனும் பிறக்கவில்லை
// அவரது எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது, பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்கப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.//
இதுதான் மாபெரும் சறுக்கல்
வைரமுத்து என்பவர் எழுத்துக்காக அறியபட்டாரே தவிர, யார் வைரமுத்துவா? புத்தன் காந்திக்கு பின் மிக உண்மையாய் வாழ்கின்றாரே அவரா? என அவர் அறியபடவில்லை
வைரமுத்து என்பவர் எழுத்தாலும் பாடலாலுமே அறியபட்டவர், இப்பொழுது சின்மயி உட்பட 1 டஜன் பாடகிகளால் அறியபடுகின்றார்
இப்படி எல்லாம் சொதப்பிய கபிலன் கடைசி வரை தந்தை உத்தமரா இல்லையா என சொல்லாமல் நழுவிவிட்டார்
மனிதர் கலைஞர் ரசிகன் போலிருக்கின்றது, இவரின் பட்டும் படாத அறிக்கை அப்படித்தான் இருக்கின்றது
[ October 29, 2018 ]
============================================================================