சிதறல்கள்

நெற்றி நிறைய பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமுமாக தெய்வ கடாட்சமாக ஒருவர் நின்றிருக்கும் வீடியோ வந்தது

மனிதர் சிலை திருட்டு பற்றி, இல்லை கோவில்நில ஆக்கிரமிப்பு பற்றி சொல்கின்றார் என ஓடவிட்டு பார்த்தால் வீடியோ வேறு ரகம்

ஆம், நித்தி சுவாமிகள் இவரை கபளீகரம் செய்துவிட்டாராம், அதுவும் பலர் முன்னிலையில் கதற கதற இவரை கபளீகரம் செய்தாராம்

இதை எல்லாம் விட்டுவிட்டு அந்த லெனின்கருப்பன் ஏன் ரஞ்சிதா வீடியோவினை மட்டும் எடுத்தான் என தெரியவில்லை

பெண் சீடர்கள், இப்பொழுது ஆண் சீடர்கள் என புகார்கள் குவிகின்றது

ஏம்பா நித்தி, இது இத்தோடு முடியுமா இல்லை ஆடு, மாடு என நீளுமா??

நீர் ஏற்கனவே ஆட்டை தமிழ்பேச வைக்க போகின்றேன் என சொல்லி திரிவதால் பெரிய அச்சம் எழுகின்றது

[ November 1, 2018 ]

============================================================================

மத்திய அரசுடன் இணக்கமாக செல்லுங்கள், இல்லாவிட்டால் பதவி விலகுங்கள் : ரிசர்வ் வங்கி கவர்ணருக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை

பதிலுக்கு ஒரு சத்தமுமில்லை

1950களின் பெரியார் இருந்தால் பதில் எச்சரிக்கை இப்படி வரும்

நாட்டின் பொருளாதார கேந்திரமும் கேடையுமான ரிசர்வ் வங்கியினை மதவாத கும்பல் மிரட்டுகிற கொடுமை நடக்கின்றது, இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?

மிரட்ட அவர்களுக்கு அதிகாரம் உண்டென்றால் ஆதரிக்க எங்களுக்கு அதிகாரமில்லையா

அந்த ரிசர்வ் வங்கி கவர்ணரை திக‌ ஆதரிக்கின்றது, அய்யன்மீர் எக்காரணம் காரணம் கொண்டும் உங்கள் கொள்கையில் இருந்து விலக கூடாது

[ November 1, 2018 ]

============================================================================

சங்கத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வந்தாயிற்று, மகளிரில் பலர் ஆதரவு தெரிவித்து இணைந்துவிட்டார்கள்

தலைவி பற்றி எழுதுங்கள் என ஏகபட்ட கோரிக்கைகள் வருவதால் “குஷ்பு நமஹ” தொடரை மறுபிரசுரம் செய்யும் முடிவில் சங்கம் இருக்கின்றது

[ November 1, 2018 ]

============================================================================

சங்கத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வந்தாயிற்று, மகளிரில் பலர் ஆதரவு தெரிவித்து இணைந்துவிட்டார்கள்

தலைவி பற்றி எழுதுங்கள் என ஏகபட்ட கோரிக்கைகள் வருவதால் “குஷ்பு நமஹ” தொடரை மறுபிரசுரம் செய்யும் முடிவில் சங்கம் இருக்கின்றது

[ November 1, 2018 ]

============================================================================

ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டாம் :பி.சி.சி.ஐ., கோரிக்கை

கிரிக்கெட்டுக்கே இந்தபாடு என்றால் ஒலிம்பிக் எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும்?

மாடு, பன்றி, தேள், பூரான், பாம்பு என சகலத்தையும் உண்ணும் சீனா எப்படி முதலிடத்தில் இருக்கின்றது, மாட்டுகறி அமெரிக்கா எப்படி கடும் சவால் கொடுக்கின்றது என்பதெல்லாம் எளிதில் விளங்கும் விஷயம்

இப்படி சைவ உணவு மட்டும் தான் என்னாகும்?

ஓரிடு பதக்கங்களோடு திருப்திபட வேண்டியதுதான், இனி அதுவும் கிடைக்காது

[ November 1, 2018 ]

============================================================================

உலகின் பண்டைய இனங்கள் எல்லாம் பேய்களுக்கு அஞ்சி இருக்கின்றன, அதற்காக பல சடங்குகளை செய்திருக்கின்றன‌ அதன் தொடர்ச்சி இந்த விஞ்ஞான காலத்திலும் உண்டு

இந்துக்கள் சில மாதங்கள் ஒரு மாதிரி என குறிப்பிட்டு வைத்திருக்கின்றார்கள், சீனர்களுக்கு செப்டம்பர் மாதம் நரகம் திறந்து பேய்கள் வெளிவரும் மாதம் அதை வெடிபோட்டு விரட்டுவார்கள்

உலக பொதுவான பேய் நம்பிக்கை இப்படி உண்டு, அவ்வகையில் ஐரோப்பாவிலும் இருந்தது, கிறிஸ்துவத்திற்கு முன்னதான ஐரோப்ப்பா காட்டுமிராண்டிதனமாகவே இருந்தது

அங்கும் ஏகபட்ட இனங்கள் உண்டு, இதில் அயர்லாந்து பக்கம் இருந்த செலிக் மொழிகுடும்ப மக்கள் அக்டோபர் கடைசிநாள், நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ம் நாளை பேய்விரட்டும் நாளாக கொண்டாடி இருக்கின்றார்கள்

மிக பயங்கர உருவங்களை செய்து அதை ஆங்காங்கு வைத்து, முகமூடி போட்டு பேயினை விரட்டினார்களாம், அதாவது பேய்க்கே பயம்காட்டி இருக்கின்றார்கள்

பின்னாளில் ஐரோப்பா கிறிஸ்தவம் முன் மண்டியிட்டும் இச்சடங்கு தொடர்ந்திருக்கின்றது, ஆனால் கிறிஸ்தவம் தந்திரமாக மாற்றியது

என்ன சிக்கல் உங்களுக்கு? பேய்களா? அவற்றை விரட்ட நம் புனிதர்கள் போதாதா?

அக்டோபர் முழுக்க ஜெபமாலை சொல்லுங்கள், நவம்பர் 1ம் தேதி புனிதர்களை வணங்குங்கள், நவம்பர் 2ம் தேதி முன்னோர்களை வணங்குங்கள் எந்த பேய் வந்துவிடும் பார்த்துவிடலாம்

போப் சொன்னால் அக்காலத்தில் மறுவார்த்தை இல்லை

இதனால் 3 நாள் பேய்விரட்டு அக்டோபர் 1ம் தேதியோடு போனது, நவம்பர் 1 புனிதர்களுக்கானது, நவம்பர் 2 ஆத்துமங்களுக்கானது

எனினும் வெள்ளையர் குடியேறிய அமெரிக்கா கனடா எங்கும் இந்த நாள் கொண்டாடபட்டது, இப்பொழுது சும்மா ஜாலிக்காக கொண்டாடுகின்றார்கள்

ஹாலோ என்றால் ஒன்றுமே இல்லாத உருவம் இல்லா மாயம் என்ற பொருளில் வரும் , ஈவன் என்றால் ஈவ்னிங் மாலைநேரம் என பொருள்

ஆக பேய்வரும் மாலை நேரம் என பொருள் கொள்ளலாம்

இந்நாளில் படுபயங்கர முக மூடிகளுடன் ஐரோப்பாவில் கொண்டாடுவார்கள்

பேய்கள் வந்து என்னை உபசரிக்கின்றாயா? இல்லை ஏதும் செய்யட்டுமா என அக்காலத்தில் மிராட்டுமாம் , உடனே அதை கேட்டதை கொடுப்பார்களாம்

அதை இப்பொழுதும் நினைவு கூறும் விதமாக குழந்தைகளுடன் என்னை உபசரிப்பாயா? இல்லை தந்திரம் செய்யட்டுமா என தமாஷாக விளையாடுவார்கள்

அது அவர்கள் கலாச்சார விழா, சந்தேகமில்லை

அங்கு அப்படி முகமூடி போட்டு கொண்டாட , நமக்கோ ஆள்பவர்களே படுபயங்கர மனமூடிகள் போட்டு அலைவதாலும் அவர்களின் செயல்பாடுகள் அதைவிட பயங்கரம்

அங்கே என்னை உபசரிப்பாயா இல்லை தந்திரம் செய்யட்டுமா எனும் வார்த்தை இன்று பிரபலம்

இங்கொ எனக்கு வோட்டளிப்பாயா இல்லை உன்னை தொலைத்துவிடவா எனும் அரசியல் விளையாட்டு பிரபலம் என்பதால் நமக்கு எந்நாளும் ஹாலோவின் டே..

(சங்கத்து சார்பாக ஹாலாவின் டே வாழ்த்து சொல்வதால் தலைவி படமும் இணைக்கபட்டுள்ளது..)

[ November 1, 2018 ]

Image may contain: 4 people, people smiling, people sitting and child
Image may contain: 1 person, closeup