சிதறல்கள்
மண் புழு போல ஊர்ந்து சென்று எனக்கு பதவி வாங்க தெரியாது : ஸ்டாலின்
அவருக்காவது மண்புழு போல சென்றாவது பதவி வாங்க தெரிந்திருக்கின்றது, இவருக்கு சிங்கம் போலவோ புலி போலவோ இல்லை கழுதை போலவோ, நரி போலவோ பதவி வாங்க தெரியாது,
அட ஒன்றும் தெரியவே தெரியாது என்பதுதான் சோகம்..
*******
அட அவரிடம் ஆட்டோ சங்கரே காசு வாங்காமல் ஆட்டோவில் அழைத்து செல்வானாம், அவ்வளவு நெருக்கமாம்
அயோத்தி குப்பம் வீரமணியே நெத்திலி குழம்பு ஊட்டிவிடுவானாம்
*****
தமிழக அரசியல்வாதிகளை விட அந்த ஸ்ரீ ரெட்டி நல்லவள், அவளின் பேட்டியில் உண்மையினை பேசுகின்றாள்
தமிழக அரசியல்வாதிகளை அவளோடு ஒப்பிட கூட தகுதியில்லை, அவ்வளவு மோசமானவர்கள் இவர்கள்.
*****
பெண் உரிமை என்பது வேறு, பெண் பாதுகாப்பு என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பினால் இன்றுபோல் இன்னும் பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்
மான் சிக்கினால் புலிமட்டுமல்ல, செந்நாய் கூட்டமும் விட்டதாக சரித்திரமே இல்லை